Thursday, March 23, 2023

RENGAA RENGAA-6

 RENGAA  RENGAA-6 

ரெங்கா  ரெங்கா -6

ஒரு பெரிய பிளாஸ்க்குடன் கேன்டீனில் நுழைந்தான் கஸ்தூரி ரெங்கன் . எதிர்பாராத இடத்தில் கேப்ரியல் , வா மேன் பாஸ் ஆயிட்டியா நீ என்றார். என்ன சார் சொல்றீங்க என்று நடுங்கினான் கஸ்தூரி ரெங்கன். ஏய் நீ ரயில்வே எக்ஸாம் எல்துனே இல்லே -அது பாசா னு கேட்டேன் என்றார் கேப்ரியல். தெரியல்ல என்றான் ரெ . ஹஹஹாஹாஹஹா என்று அதிர்வேட்டு சிரிப்பு சிரித்தார் கேப்ரியல். நீ சென்னைல எக்ஸாம் எல்துனே இல்லே அது எனக்கு தெரியும்.. எப்படி னு பாக்குறியா ? அதான் மேன் காசிம் இல்லே அவர் சொல்ட்டாருய்யா . காசிம் உனுக்கு தெரியாது ? எண்டா ர்ஸ்மென்ட்  லெட்டர் குட் த்தார் இல்லே அவர் தான் மேன் காசிம் . 15 days முன்னாலே வந்துருந்தார் மேன். உங்க மெசஞ்சர் பரிட் ச்சே சூப்பரா எழுதினான் நிச்சயம் செலக்ட் ஆவான் னு சொன்னார் மேன் என்றார் கேப்ரியல். கஸ்தூரி ரெங்கன் ஒன்றும் புரியாமல் பேந்தப்பேந்த விழித்தான். என்னா மேன் மெண்டல் ஆஸ்ப்பிட்டல் கேஸ் மாதிரி முளிக்கறே. நீ பரிட் ச்சே  எல்தும் போது , காசிம் தான் மேன் உனுக்கு சூப்பர்வைசர் , லாங்குவேஜ் , ரீ ஸனிங் , கணக்கு அல்லாம் ரொம்ப ஸ்பீடா ல்திட்ட னு சொன்னார் மேன்.. அதுதான் நீ பாஸா னு கேக்கறேன் . எனக்கு ரிசல்ட் தெரியாது சார் என்றான் .  ஹாஹாஹஹா என்று மீண்டும் சிரித்து நீ செக்ஷனிலே வா மேன் ரயில்வே வெப்சைட் லே இன்னிக்கு வந்திருக்கு மேன் , நம்பர்          எத் துனு வா , நான் பாத்து சொல்றேன்; சார் காப்பியை செக்ஷன் லே குடுத்துட்டு வரேன் சார் என்றான் . ரெ .

நீ உன் ரிசல்ட் பாத்துனு அப்புறம் காப்பிய எத்துன்  போ ; ஒரு நாளைக்கு 7 காப்பி சாப்புடுவானுங்கோ , இன்னிக்கு மொள்ளமா குடிக்காட்டும் வா மேன் என் கூட என்றார் கேப்ரியல் ; சீக்கிரம் போலனா திட்டுவாங்க சார் என்றான் . ரெ ஹாஹாஹஹா அல்லாம் லேட்டா வந்துக்கிட்டு ஒன்ன திட்டறானா -அவனுங்க உருப்படமாட்டானுங்க . சரி மெல்ல போறேன் நீ பிளாஸ்கை குடுத்துட்டு ஓடியா என்றார். அதி வேகமாக பிளாஸ்கை [காபியுடன் தான் ] கொடுத்துவிட்டு கேப்ரியல் ரூமுக்கு விரைந்தான். கேப்ரியல் அகலமான சேரில் அமர்ந்து வெப்சைட்டை திறந்தார் ரயில் எஞ்சின் லோகோ வுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன . நம்பர் சொல்லு மேன் என்றார், நல்ல வேளை  பர்சில் ஒரு காகிதத்தில் இருந்த நம்பரை கேப்ரியல் சாரிடம் தந்தான். கேப்ரியேலுக்கு  கம்ப்யூட்டரில் பூச்சி பறந்தது. கண்ணாடியை மாட்டிக்கொண்டு வழுக்கைத்தலையுடன் SCIENTIST போல தெரிந்தார். சென்னை டிவிஷன் பகுத்திக்குள் தேடினார். . ரெ வின் நம்பர் பளிச் பளிச் என மின்னியது.. முத்தூ லக்ஸ்மி நம்பர் FLICKER ஆவுது என்றார். முத்தூ லக்ஸ்மி ஓடி வந்து பார்த்தாள் . சார் இன்னும் சில நம்பர் கூட மின்னுது பாருங்க என்றாள் . இருங்க சார் FOOT  NOTE பார்ப்போம் என்றாள் . FOOT  NOTE  : TOP  RANKING NUMBERS are Highlighted IN  FLICKER என்றது TOP MOST ONES FLICKER GREEN . கஸ்தூரிரெங்கன் நம்பர் பச்சையாக ஒளிர MARVELLOUS MAN என்று கேப்ரியல் . ரெ வை தலைக்குமேல் தூக்கி 2 சுற்று சுற்றி கீழே விட்டார் . நாளை க்கி பார்ட்டி குடு மேன் என்றார். ரொம்ப தேங்க்ஸ் சார் என்று கை  கூப்பி ஓடினான் . நேரே ராமசாமியின் இருப்பிடம் நோக்கி ஓடி சார் உங்க ஆசீர்வாதத்துல ரயில்வே பரீட்சை பாஸ் ஆயிட்டேன் என்று கை கூப்பி நின்றான், எப்படி தெரிந்து கொண்டான் என்ற  விவரத்தையும் சொல்லி கேப்ரியல் பார்ட்டி கேக்கறார் சார் என்றான் . நீ மொதல்ல மாடசாமியைப்பார்த்து எல்லா விஷய த்தையும் சொல்லி தேங்க்ஸ் சொல்லி அவனை கண்டிப்பா பார்ட்டிக்கு கூப்பிடு என்றார் ராமசாமி. மாடசாமி யைத்தேடி   ரெ போயிருந்த வேளையில் கேப்ரியல் ராமசாமியைதேடிக்கொண்டு வந்து  பார்த்து , மிஸ்டர் ராமசாமி உங்க லஸ்கர் பாய் சூப்பர் performance பண்ணிருக்கான் மேன். வெப்சைட்ல அவன் நம்பர் சும்மா green flicker ஆவுது . நம்ப முத்துலக்ஸ்மி இல்லே அதுதான் foot நோட் பாத்து top performance க்கு தான் flicker ஆவும் னு கீழே எழுதிருக்கு னு பார்த்து சொல்லிச்சு எனக்கு ரொம்ப happy யா இருக்கு மேன் , இத்தினி தூங்குமூஞ்சிங்கோ இருக்குற ஆபிஸ்ல ஒருத்தன் ரயில்வே எக்ஸ்சாம்ல இத்தினி நல்லா எல்திருக்கான் -ஸ்மார்ட் பாய் என்று பெருமை கொண்டார் கேப்ரியல்.

மாடசாமி தனியே இருந்தார் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார் . சார் என்றான் ரெ.  நிமிர்ந்து பார்த்து வா தம்பி என்றார். நேரடியாக அவரை சேவித்து நிமிர்ந்து கூப்பிய கரங்களுடன் ரயில்வே எக்சாம் பாஸ் ஆயிட்டேன் என்றான் நன்றிப்பெருக்குடன்.

சரி ராமசாமிட்ட சொல்லிட்டியா என்றார் மா சா. . சரி வா என்று ராமசாமியைத்தேடி இருவரும் சென்று பார்த்தனர். மூவரும் மகிழ்ச்சி கொண்டனர். பார்ட்டி பேச்சு தொடங்கியதும் டேய் ஏண்டா அவசரம் appoint ஆகி சம்பளம் வாங்கி அப்புறம் வெச்சுக்கலாண்டா என்றார் மாடசாமி.. தெல்லாம் முடியாது  எங்கயாவது ரேணிகுண்டா போடுவான் அங்க போய் பார்ட்டி சாப்பிடுவியோ என்றார் ராமசாமி. அதுனா   தான் 2- 3 நாள் பார்ட்டி குடுன்றேன் என்று அலறிக்கொண்டே வந்தார் கேப்ரியல்.

மாடசாமி      கேப்ரியலை பிடித்து உலுக்கி விட்டான் . நியாயமா நீங்க  தான் பார்ட்டி தரணும் அந்த பையனுக்கு.

அவன் அன்னிக்கு உங்க லெட்டர் கொண்டு போகல்லேன்னா நீங்கல்லாம் வாரா வாரம் ட்ரிபியூனல் மீட்டிங்குக்கு அலையனணும்  தெரியுமா. நீங்க மதுரை ஆபீஸ், விழுப்புரம் ஆளுங்ககிட்ட கேட்டு பாருங்க எப்பிடி காய்ச்சரானுங்கனு .

அப்படியா என்று மிரண்டார் கேப்ரியல்

அதுனால அடுத்தவியாழன் மாலை 4. 30 மணிக்கு அஜந்தா ஹோட்டல் நம்ப கேப்ரியல் சார் நம்மளுக்கு, முத்துலக்ஷ்மி இன்னும் அவர் செக்ஷன் ஆளுங்களுக்கு பார்ட்டி தறார் . நம்ப போய் நல்லா தின்றோம் . வேற யாரும் எதுவும் பேசக்கூடாது என்று மிரட்டி கேப்ரியலை , கோழிக்குஞ்சு அமுக்குவது மாதிரி அமுக்கி விட்டான் மாடசாமி.

சரி என்று ஒப்புக்கொண்டார் கேப் ரியல் . அவரை அறியாமல் கஸ்தூரிரெங்கன் மீது அவருக்கு பெரும் மதிப்பு உண்டாயிற்று , எனவே மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். மீண்டும் ஒரு முறை கஸ்தூரிரெங்கனுக்கு மாடசாமி திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் போல தெரிந்தார்.

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-39

  TM SOUNDARARAJAN-39 டி எம் சௌந்தரராஜன் -39 ஒருவர் வாழும் ஆலயம் [ நெஞ்சில் ஓர் ஆலயம்-1962 ] கண்ணதாசன் , வி , ரா , டி எம் எஸ்...