Sunday, March 19, 2023

SAMIs COME TOGETHER-10

 SAMIs COME TOGETHER-10

சாமிகள் சங்கமம்-10          

[இது அடியேனின் 550 ம் பதிவு, நன்றி அனைவருக்கும்]

காலையில் எழுந்து குளித்து இறைவனை வணங்கி ஈரத்தலையில் கோடாலி முடிச்சு அமைத்துக்கொண்டு, அப்பிளிக்கேஷன் நிரப்ப துவங்கினாள் ; ஆஹா என்று நினைவுக்கு வந்தது கருப்பு இங்க் .நல்ல வேளையாக முன்னமே வாங்கி வைத்திருந்த பேனாவை சில வினாடிகள் பூஜை மண்டபத்தில் வைத்து கை கூப்பி வணங்கி ஆரம்பித்தாள் . ஜெராக்ஸ் படிவங்களில் மேடம் சரியென்று ஒப்புதல் அளித்த தகவல்களை உரிய கட்டங்களில் தெளிவான குண்டு குண்டு எழுத்துகளில் நிரப்பினாள் . மாமா மாடசாமியே சற்று அசந்தார் அவள் கையெழுத்தின் நேர்த்தியைப்பார்த்து. ஆங்காங்கே தேவையான இடங்களில் video CD on  hand  என்று குறிப்பிட்டாள் . 3 பக்கங்களையும் நிரப்பிவிட்டு 4 ம் பக்கத்திற்கு வந்தாள் . மீண்டும் அனைத்து தகவல்களும் சுருக்கமாக நிரப்பவேண்டியிருந்தது மேலும் 4 பக்கங்களிலும் கையெழுத்திட வேண்டியிருந்தது , இணைப்புகளாக வருமான சான்றிதழ் , ஜாதி சான்றிதழ் [உதவித்தொகைக்கு முக்கியஆதாரங்கள்] -முதல் மூன்று பக்கத்துடன் +4ம் பக்கத்தில் சான்றிதழ் களின் வரிசை எண்கள் , வழங்கிய அதாரிட்டி பற்றிய தகவல்கள் மாத்திரம் குறிப்பிடப்பட வேண்டும் என்று நிபந்தனை அச்சிடப்பட்டிருந்தது. இறுதியாக பெயர் முகவரி தேர்வவெழு தவோ நேர்காணலுக்கோ  அருகாமையில் உள்ள நகரம் என்ற இடத்தில் திருச்சிராப்பள்ளி என்று நிரப்பினாள்., மீண்டும் ஒரு போட்டோ விற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது , இறுதியில் e -mail  id தெளிவாக எழுதவும் என்று கேட்டிருந்தது -திகைத்து நின்றாள் கௌரி கல்யாணி, அவளுக்கென்று e -maiil இதுவரை இல்லை . மாமா என்று அழைத்தாள் , மாடசாமி அந்த இடத்தில் எப்படி நிரப்புவது, எதற்கும் இன்றிரவு மேடத்திடம் கேட்டு செய், கடைசியில் போய் சொதப்பவேண்டாம் என்றார் மாசா மாமா வின் ஆலோசனைப்படி இரவு 8.35 க்கு சுபத்ரா மேடம் எண்ணுக்கு தொடர்பு கொண்டாள் . 'என்ன இன்னும் சந்தேகம் தீரலயா" என்றார் மேடம் . மேடம் e -mail id கேட்டிருக்காங்க எனக்கு id இல்ல என்றாள் . "இல்லேன்னா புதுசா create பண்ணிக்கோ , e -mail id இல்லைன்னா FORM REJECT ஆகும் " ஐயோ என்றாள் கௌரி. "ஆமாம்,  உங்களுக்கு +2 விலேயே LAPTOP தந்திருப்பாங்களே , அத வெச்சுக்கிட்டு என்ன பண்ற?"

". எங்களுக்கு ரொம்ப லேட்டா தான் குடுத்தாங்க அத பாத்துக்கிட்டு படிப்பை கோட்ட விட்றாதனு பெரியவங்க சொல்லி சொல்லி அதா நான் USE பண்ணினதே இல்ல மேடம்" என்று கவலையாக பேசினாள்

சரி சரி பொலம்பாத நான் சொல்ற இடத்துக்குப்போ , முக்கியமான தகவல் கேப்பாங்க,  சொல்லி ஒரு ID CREATE பண்ணி வெச்சுக்கோ அதை கவனமா குறிச்சு, PASSWORD பத்திரமா நீ மட்டும் யூஸ் பண்ற மாதிரி காப்பாத்தி வெச்சுக்கோ " "சரி மேடம் "என்றாள் கௌரி.

நந்தி கோயில் தெருவில் இடது புறம் முதல் திருப்பத்தில் ஒரு வீட்டில் சாரதா என்று போர்ட் இருக்கும் . அங்கே போ உள்ளே நிறைய பெண்கள் கம்ப்யூட்டர் வைத்துக்கொண்டு ஏதோ செய்துகொண்டே இருப்பார்கள். சாரதா மேடம் என்று கேட்டு உனக்கு என்ன வேண்டும் என்று சொல் ரூபாய் வாங்கிக்கொண்டு செய்து கொடுப்பாள், வேறு யாரிடமும் பேசாதே.. அது ஒரு HIGHTECH சென்டர் வெளில தெரியாது , பெண்களுக்கு பாதுகாப்பான இடம்    [ எச்சரிக்கை நான் அனுப்பினேன் என்று சொல்லாதே ]என்றார் மேடம். மேலும் id உருவாக்கியவுடன் அவளது id க்கே நன்றி என்று mail அனுப்பி பதில் அனுப்புங்க எனது id நல்லா செட் ஆகட்டும் என்று சொல் " என்றார் மேடம். ; “நீயே போ, மாமாவை அனுப்பாதே, id செட் ஆனதும் அந்த form கடைசியில் அதை நிரப்பி , அங்கேயே சாரதாவிடம் சொன்னால் 3 நிமிடத்தில் upload செய்து விடுவாள், நீ சொல்லாமலே அவள் சரியாக அனுப்பிவிடுவாள் . அந்த 4ம் பக்கத்தை  தனியாக ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கொள் அதையும் அவளே செய்துவிடுவாள் . முடிந்ததும் அந்த form முகப்பில் இருக்கும் போஸ்டல் அட்ரஸ் தெரியும் படி ஒரு விண்டோ கவர் சாரதாவிடம் [Rs 7/-] வாங்கி நன்றாக கவரை ஒட்டி தெப்பக்குளம் போஸ்ட் ஆபீசில் SPEED POST செய்து கொள் , ரசீது பத்திரம் , கூரியர் வழியாக அனுப்பினால் நம்ப முடியாது . வீட்டில் போனதும் அந்த VIDEO CD களில் உன் பெயர், அப்பிளிக்கேஷன் நம்பர் குறித்துவிடு -மார்க்கர் பென்  வைத்து, CD அனுப்பும்படிக்கேட்டால் இந்த குறிப்பு உனக்கு உறுதுணையாக இருக்கும் -GOOD LUCK” என்றார் மேடம்.

தொடரும்  அன்பன் ராமன்

1 comment:

  1. நம்ம அரசு கொடுத்த லாப் டாப் எப்படி ஒர்க் பண்ணும் ?
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...