SAMIs COME TOGETHER -11
சாமிகள் சங்கமம் -11
அம்மாடியோவ் மேடம் பயங்கரமான கெட்டிக்காரங்க
என்று பெருமை கொண்டாள் கௌரி.
சொன்ன இடத்தில் காலையில் சாரதாவைப்பிடித்துவிட்டாள்
கௌரி. விவரம் சொன்னவுடன் தெளிவாகக்கேட்டு கொண்டு -"சரி இங்க யார் உன்னை அனுப்பியது?"
என்றாள் சாரதா [அவள் இன்னொரு 30 வயது குதிரை
]. "எங்க மாமா" என்றாள் கௌரி ."அவர் எங்க வேலை பார்க்கிறார்?"என்றாள் சாரதா. கௌரி "ரயில்வே ல" அப்படின்னா ராமசாமி சார் தான் உங்க மாமாவுக்கு
வழிகாட்டிருப்பார், அவர் பலே கில்லாடி , ஆனா
தேவைக்குத்தான் எதையும் பயன் படுத்துவார் -வசமான ஆள் உனக்கு தெரியாதா "என்றாள் சாரதா. இல்லை என்பதாக தலை அசைத்தாள் கௌரி . எதுக்கு
உனக்கு ID என்று சாரதா கேட்டாள் , இந்த FORM அனுப்பணும் என்று காண்பித்தாள். உடனே குஷி
ஆனாள் சாரதா." நீ சரியான கோர்ஸ் படிக்கப்போற -திருச்சில தானே"? என்றாள் ஆமாம்
என்றாள் கௌரி . உன் பெயர் , பிறந்த தேதி வேறு ஏதாவது பிரத்யேக குறிப்பு சொல்லு என்று
சாரதா கேட்க, கௌரி பெயரும் பிறந்த தேதியும் சொன்னாள் id உருவாக்கமுயன்றால் கௌரியில் 100 -
க்கணக்கிலும் கல்யாணியில் 1000-
கணக்கிலும் id இருக்கிறது வேறு
ஏதாவது பார் என்றது கம்ப்யூட்டர் . சாரதா subhagouri2003@gmail.com, pass word saaradhaa gouri 777 என்று அமைத்து அதை ஒரு துண்டுசீட்டில் குறித்து
விட்டு அந்த அப்ளிகேஷனில் id
யை சாரதாவே அழகாக எழுதிக்கொடுத்தாள் . கௌரி கொஞ்சம் பயந்தாள் , "வேற ஏதோ சுப கௌரினு
போட்டிருக்கே " என்றாள் .
சாரதா சிரித்துக்கொண்டே சொன்னாள் "நீ எவ்வளவு அதிர்ஷ்டக்காரி தெரியுமா, சுபத்திரா
மேடம் டிபார்ட்மெண்ட் ல படிக்க குடுத்துவைக்கணும் , இந்த கோர்ஸ் படிக்க வே நிறைய அதிர்ஷ்டம்
வேணும் , அந்த மேடம் பேரை சேர்த்தவுடன் தான் உனக்கு id செட்டாச்சே அதை ப்பார்த்தியா . அந்த மேடம்
பார்வை பட்டாலே நாமெல்லாம் உருப்பட்டுருவோம்.. தைரியமா போ எல்லாம் நல் லா நடக்கும் .
“அப்புறம்” ----என்று கௌரி ஆரம்பிக்க, தெரியும்
லாஸ்ட் page
ஜெராக்ஸ்பண்ணி வெச்சுக்கிட்டு,
FORM upload பண்ணிட்டு,
விண்டோ கவர்ல போட்டு SPEED POST அனுப்பணு ம் அதானே என்றாள் சாரதா . பேசவே முடியாமல் ஆமாம் ஆமாம் என தலை அசைத்தாள் . ஆனா SPEED
POST நீ தான் அனுப்பணு ம் நான் போகமாட்டேன் என்றாள் சாரதா. UPLOADING
உள்பட . எல்லா வேலையும் முடித்துக்கொடுத்து
40/-ரூபாய் பெற்றுக்கொண்டாள் . பின்னர் அடிக்கடி
ஒருநாளைக்கு 2 தடவையாவது E -MAIL பாரு அப்பதான் தகவல் தெரிய வரும் , GOOD
LUCK என்று வாழ்த்தி அனுப்பி
வைத்தாள்.
அடுத்த 40 நிமிடத்தில் எல்லாம் முடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தாள் கௌரி. மேடம் சொன்ன படி , cd களில், ஜெராக்ஸ் பேப்பர் பார்த்து அப்பிளிக்கேஷன் நம்பர், தனது பெயர் கோர்ஸ் code மார்க்கர் பேனாவால் எழுதி அம்மா கையில் கொடுத்து ஆசி வழங்கும் படி நமஸ்கரித்தாள். "மாமாவை கும்பிட்டு ஆசி வாங்கிக்க நான் படிக்காதவ" என்றாள் தாயார். 'இருக்கட்டும்மா நீங்க பெரியவங்க தானே அந்த ஆசி வேணும் அம்மா' என்றாள் மாலையில் மாமா வந்ததும் அவரை வணங்கி ஆசி பெற்று எல்லா விவரமும் சொல்லி தனக்கு ஒரு id உருவாக்கி இருப்பதை சொல்லி -யார் மாமா ரயில்வே ராமசாமி அந்த கம்ப்யூட்டர் சென்டர் அம்மா அவர் பலே கில்லாடி அவர்தான் உங்க மாமாவுக்கு ஐடியா தருவார் னு நினைக்கிறேன் என்று சொன்னாங்க.
"சரியாத்தான் சொல்லிருக்காங்க என்று அந்தப்பேச்சு ஏன் வந்தது என்று கேட்டு தெரிந்துகொண்டார்.மாடசாமி இரவு சுபத்திரா மேடத்துடன் போனில் பேசி அனைத்து வேலைகளையும் செய்து SPEED POST அனுப்பிவிட்டதாக தெரிவித்து ஆசி பெற்றாள் கௌரி. மாடசாமி மாடியில் ஏறி ரங்கநாதர் கோபுரத்தையும், உச்சிப்பிள்ளையார் கோயிலையும் வணங்கி ,ராமசாமிக்கும், சுபத்திரா மேடத்துக்கும் மனமார நன்றி தெரிவித்தான் . எவ்வளவு வேகமாக முன்னேற்றம் நிகழ்கிறது என்று வியந்தார் மாடசாமி .
தொடரும் அன்பன்
ராமன்
Pass word ல் ஒரு capital letter இருக்கணும்
ReplyDelete