Saturday, March 25, 2023

SAMIs COME TOGETHER-12

 SAMIs COME TOGETHER-12                 

சாமிகள் சங்கமம் -12

கௌரி கல்யாணி இப்போது சாரதா நடத்தும் சென்டரில் நுழைந்தாள் . என்ன? என்றாள் சாரதா. மெயில் பார்க்கலாமான்னு வந்தேன் என்றாள் கௌரி . சரி பார்க்கத்தெரியுமா எனக்கேட்டாள் சாரதா . ம்ம் என்று உதட்டைப்பிதுக்கினாள் , நீ டிகிரி முடிச்சாச்சு இல்ல என்று சிரித்தாள் சாரதா . கேலி பண்ணாதீங்க மேடம் எனக்கு தெரியல்ல என்றாள் கௌரி. சீ கேலியெல்லாம் இல்ல -இப்படி ஒரு பொண்ணா னு பாக்கறேன் என்றாள் சாரதா.

இங்க உட்கார் என்று ஒரு சிஸ்டம் அருகில் அமர்த்தி , ஒரு பேப்பரை கையில் கொடுத்து step wise குறித்துக்கொள் என்றாள் சாரதா  முதலில் சிஸ்டம் open பண்ணு என்றாள் சாரதா - கௌரி விழித்தாள் . ஒண்ணும் இல்ல இந்த பட்டனை அழுத்து என்று காட்டினாள் . உடனே இஸ்ன் என்று ஒலித்தது கௌரி பயந்து போனாள் ; அப்பிடித்தான் கத்தும் நீ கண்டுக்காத . உடனே போபபைங் என்று பாடி முகம் காட்டியது இப்ப கூகுளை கிளிக் செய் என்று சாரதா வழிகாட்டினாள் . பின்னர் கூகுள் முகம் காட்டியது .பீ ல் டி ல் www gmail .com என்று அடி . அடித்ததும் மெயில் வந்தது . உனது id அடி , pass word அடி என்று சொல்லிக்கொடுத்தாள் . கௌரிக்கு ஒரு மெயில் இருந்தது

பாம் ரிஸீவ் ட் your காண்டாக்ட் கோட் 2324 xxx 7tn USE THIS FOR REFERENCEஎன்று இருந்தது அதைக்குறித்துக்கொள் , அதே mail இல் code noted thanks  என்று அடித்து reply பட்டன் க்ளிக் செய்என்றாள் சாரதா அவ்வாறே செய்தாள் mail sent என்று வந்தது.  அவ்வளவு தானா மேடம் எவ்வளவு தரணும் என்று கேட்டாள்.  இதுக்கெல்லாம் ஒண்ணும் தரவேணாம் .பெரிய மெசேஜ் அனுப்பும் போது பாத்துக்கலாம் என்றா ள் சாரதா.   நன்றிப்பெருக்குடன் எழுந்து நின்றாள் கௌரி.

"மேடம் உங்கள ஒண்ணு  கேக்கலாமா" என்றாள் கௌரி . 'சும்மா கேளு' -சாரதா  இல்ல உங்களுக்கு மேடம் நல்ல தெரிஞ்சவங்களா -ரொம்ப திட்டுவாங்களா -பயம் மா இருக்கு என்றாள் கௌரி மொத்தம் 3 கேள்வி கேட்டிருக்க பதில் பெருஸ்ஸா இருக்கும் பரவா இல்லையா ?- சாரதா.                                                                                                                                       சொல்லுங்க என்று ஆர் வம் காட்டினாள் கௌரி.

என்ன கேட்ட "அவங்களத்தெரியுமா னு தானே ? அந்த யூனிவெர்சிட்டில படிச்சுட்டு அவங்களத்தெரியலேனா எலெக்ட்ரிக் ட்ரெய் ன் பிச்ச எடுக்கக்கூட லாயக் கில்லாதவங்க னு அர்த்தம்.. அந்தம்மா ஒரு பயங்கர ஸ்டார் தெரியுமா ?                   சமீபத்துல G -20 கலை நிகழ்ச்சிகளுக்கு பாராட்டு வாங்கி இன்னிக்கு டெல்லி அந்தம்மா ஒரு பிரபலம் -ஆம்ம்மா என்று சுபியின் திறமைகளை சுருக்கமாக விளக்கினாள் சாரதா

-பயம் மா இருக்குன்னியே   இப்பிடி உட்கார் எந்த நேர்மையானவங்களும் கண்டிப்பு காட்டுவாங்க ஆனா நல்ல உழைச்சு சொல்லிக்கொடுப்பாங்க , நம்ப முன்னுக்கு வரணும் னு உண்மையான முயற்சி எடுப்பாங்க , சுபா மேடமும் அப்பிடித்தான் எந்த கொம்பனுக்கும் பயப்படவோ வளஞ்சுகொடுக்கவோ மாட்டாங்க. அவங்க கண்டிப்பு காட்டினா உடனே கெட்டவங்கனு சித்தரிக்க ஒரு கூட்டமே தயாரா இருக்கும் அதுல வாத்யார்களும் இருப்பாங்க  . அத்தனை பேரும் சேர்ந்து வந்தாலும் இவங்கள எதுவும் செய்ய முடியாது.. அதே சமயத்துல அவங்கள மாதிரி help பண்றவங்கள பார்க்கவே முடியாது. ரொம்ப சாதாரண மா இருந்த டிபார்ட்மென்ட் இன்னிக்கு இந்தியாவுல இவ்வளவு உயர்ந்து நேஷனல் லெவல் எக்ஸாம் எழுதி seat வாங்கற உயரத்துக்கு வந்திருக்குன்னா -சுபத்திரா மேடம் உழைப்புதான் ஆதாரம்.   இத்தனை இருந்தாலும் ரொம்ப எளிய வாழ்க்கை எல்லாருக்கும் அன்பு காட்டுவாங்க.         நான் கம்ப்யூட்டர் சயன்ஸ் ஸ்டூடன்ட் எனக்கு வழிகாட்டி இந்த நிலமைக்கு உயர்த்தினவங்க அவங்கதான். இப்பிடியெல்லாம் இந்த தொழில் முன்னேற முடியும் எனக்கு வழிகாட்டியது சுபா மேடம் தான் .

நீ ஏன் பயமா இருக்குனு சொல்ற ?என்று வினவினாள் சாரதா   .இல்ல எனக்கு போய் mail id அவங்க பேர சேத்துட்டீங்களே னு கவலையா இருக்குங்க மேடம் என கௌரி சொன்னாள். ஏண்டி ஏன் பெயரை சேர்த்த னு கேக்கமாட்டாங்க.. அப்படிக்கேட்டா , ஐயோ அந்த சாராதாதான் பண்ணிட்டானு சொல்லிடு   நான் அவங்களுக்கு பதில் சொல்லிக்கிறேன் என்றாள் சாரதா

நான் உண்மையா சொல்லட்டுமா எங்க வாய்ப்பு கிடைச்சாலும் அவங்க பெயரை உயர்த்திப்பிடிக்கணும் னு நினைக்கிற பல்லாயிரம் பேர்கள் நானும் ஒருத்தி . உனக்கு id செட் ஆகாம இருந்தப்ப மேடம் பெயரை சேர்த்தா உனக்கு சுலபமா முடிஞ்சுது. மேடம் பெயரை சேர்த்தா எல்லாம் நல்லா நடக்கும் னு எப்பவவுமே நம்பற நான் . அதே மாதிரி உனக்கு சுலபமா முடிஞ்சுது. மேலும் அந்த தெய்வத்துக்கு நான் இதைக்கூட செய்யலேன்னா நன் படிச்சத்துக்கு அர்த்தமே இல்லாம போய்டும் . நீ ஆண்டவன் புண்ணியத்துல அந்த மேடத்துகிட்ட போய் உக்காந்து கத்துக்கோ உன் வாழ்க்கைக்கே ஒரு அர்த்தம் உண்டாகும் . நான் சொல்றது இப்ப புரியாது போகப்போக மிகப்பெரிய புரிதலும் முன்னேற்றமும் உனக்கு உண்டாகும் . நிச்சயம் பெரியவங்க ஆசி இல்லாதவர்களுக்கு அது போன்ற ஆசான்கள் கிடைக்கமாட்டார்கள் என்று சொல்லி வழியும் கண்ணீரைத்துடைத்துக்கொண்டு , போய் வா என்று விடை கொடுத்தாள் சாரதா தொடரும் அன்பன்  ராமன்

 

 

தொடரும் அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...