Saturday, March 11, 2023

SAMIs COME TOGETHER-7

 SAMIs COME TOGETHER-7

சாமிகள் சங்கமம்- 7

புதன்   மாலை 5. 50 க்கு க ரெ , ராமசாமியை த்தேடி வந்தான் . என்ன கொள்ளடக்கரையில போய் கிளி ஜோசியம் பாக்கணுமா என்றார் ரா. சா .   க. ரெ "அதி ல்ல சார், அடுத்தவாரம் எக்ஸாம் ரிசல்ட் வரலாம்னு ஆஃபீஸ் ல பேசிக்கறாங்க அதை சொல்லிட்டு , மாமி  சில்லரை கிடைச்சா வாங்கித்தா னு 500/- ரூவா கொடுத்து இருந்தா , , சூப்பர் மார்க்கெட் ல சில்லறை மாத்திருக்கேன் அதைக்கொடுத்துட்டு மாமிய சேவிச்சுட்டு போலாம்னு வந்தான். நீ சரியான சீரங்கத்தாண்டா தாயார் சேவிக்கறதோட சரி பெருமாளை கண்டுக்கறது என்னிக்காவாவது தான். என்றார் ராமசாமி . பெருமாள் பார்த்துட்டு தான் சார் தாயார்.என்றான் க. ரெ ; “அப்பிடீன்னு சொல்லிட்டு பெருமாளுக்கு க்யூ ஜாஸ்தி னு சொல்லிட்டு ஓடிடுவீங்க உங்களத்தெரியாதா” என்றார் ராமசாமி .

மேலும் சொன்னார் “நன்னா கேட்டுக்கோ பெருமாளுக்கு க்யூவும் ஜாஸ்தி,   ஐ க்யூவும் நெறய தான்” என்றார் ராமசாமி. “தெரியும் சார் பெருமாள் IQ இல்லாம எனக்கு இவ்வளவு ஒத்தாசை கிடைச்சிருக்குமா” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஐயா ஐயா என்று வாசலில் குரல் கேட்டது . ஒரு 50 வயது ஆசாமி தனது முண்டாசை அவிழ்த்துவிட்டு, மடித்துக்கட்டியிருந்த வேட்டியையும் இறக்கி விட்டு வீட்டின் உள்ளே பார்த்தவாறு நிற்க, "பெரியவரே என்ன வேணும்?” என்று ராமசாமி வினவினார்.

ஐயா சமூகத்துக்கு வணக்கமுங்க , என் பேரு செல்லத்தொரைங்க , கீரனூர் தானுங்க நம்மவூரு. “லெட்டர் குடுத்து அனுப்பிருக்கிருறாருங்க நம்மூரு சுந்தரலிங்கம் வாத்யார்என்று வெளியில் எந்த அடையாளமும் இல்லாத கவரைக்கொடுத்துவிட்டு வணக்கம் தெரிவித்தார் செல்லத்துரை . “முரட்டு வெய்யிலுங்க தண்ணி தாகம் எடுக்குது குடிக்க தண்ணிகிடைக்குமுங்களாஎன்றார் செ து .

இப்படி உக்காருங்கஎன்று திண்ணையைக்காட்டி அமரவைத்து கவருடன் உள்ளே சென்றார் ரா. சா . பெரிய சொம்பில் பானைத்தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் . ரெ . “தம்பி நீங்க ரயில்வே தானே இருக்கீங்க”? என்றார் செ . து  ஆமாஎன்று அதிர்ந்தான் . ரெ . “நான் ரயில்வே கீ மேனுங்க , உங்கள      ஜங்க்சன் நெறைய பாத்திருக்கேன்என்று ஆசை தீர நீர் பருகி முகம் புத்துணர்ச்சி பெற , அதே நீரில் முகம் கழுவி முண்டாசு துண்டால் துடைத்துக்கொண்டுஅப்ப நான் வரட்டும் ங்களா -கோயிலுக்குப்போகணும் ரொம்ப நாளா மனசுல எண்ணம்என்றார் செ .து.

உள்ளே கவரில் மாடசாமிக்கு சேர வேண்டிய PG அப்ளிக்கேஷன் -சுபத்திரா தனது துறை லெக்ச்சரர்  சுந்தரலிங்கம் [G 20 குழுவில் சுபி யுடன் டெல்லி சென்று நற்பெயர் பெற்றவர் ] உதவியால் அனுப்பி வைத்திருக்கிறார். வெளியே வந்த ராமசாமிஇருங்க காப்பி சாப்பிட்டுட்டு கோயிலுக்கு நானே கூட்டிட்டு போறேன்என்றார். “அய்யாவுக்கு எதுக்கு வீண் சிரமம்என்றார் செ . து . “சிரம ப்பட்டு தானே கவர் கொண்டு வந்தீங்க அதை விடவா?” -கொஞ்சம் பொறுங்க என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்புஜம் அவரைஉள்ளே வந்து காபியை சாப்புடுங்கஎன்று அழைத்தாள் . செல்லத்துரை நெகிழ்ந்தார் எவ்வளவு உயர்வாக நடத்துகிறார்கள் அய்ய மாருக வீடு தேடிப்போனா நல்ல மருவாதி பண்பாடு கௌரவமா நடத்துவாங்க என்று மனதில் சொல்லிக்கொண்டே காபி  அருந்தினார் . எனோ அவருக்கு பழைய PW I கள் பற்றி நினைவு வந்தது. இந்த ஊரு அய்யங்காருக  PW I அதிகரிகளா இருந்து எனக்கு அருமையா தொழில் கத்துக்குடுத்தாங்க அப்பிடி அதிகாரிகள் இனிமே பார்ப்பது கிடைக்காதுங்க என்றார் செ . து கிளம்பி கோயில் நோக்கி நகரும்போது மோட்டார் சைக்கிளில் தட தட தட என்று கம்பீரமாக மாடசாமி

அய்யா வணக்கம் நீங்க டீ ட்டி இல்ல சும்மா சிங்கம் மாதிரி செக்கிங் பண்ணுவீங்க ‘இப்ப சொன்னேன் பாருங்க அய்யங்காருக அதிகாரிங்க அதே மாதிரி தான் இந்த  டீ ட்டி  சாரும்’ என்றார் செ . து.

எதுவும் பேசாதே என்று கண்ணைக்காட்டி மா சா வை சைலண்ட் MODE க்கு மாற்றினார் ரா சா. கையில் பை , பேப்பர் சுற்றிய ஒரு சிறிய பொருள் , வெற்றிலை பாக்கு  புஷ்பம் எடுத்து ரா சா , மாசா, செ து , க ரெ , கோயிலுக்கு விரைந்தனர்

ராமசாமியைப்பார்த்ததும் ராஜ உபசாரமாக பெருமாள் தாயார் சன்னதிகளில் வரவேற்பு. அனைவருக்கும், கற்பூர ஹாரத்தி , தீர்த்தம், துளசி, சடாரி, மஞ்சள் காப்பு கொடுத்து வழி அனுப்பியனுப்பினர். .

செல்லத்துரை உத்தரவு வாங்கிக்கிறேனுங்க என்று விடை பெற்றார்.

அடுத்த 10 நிமிடங்களில் ராமசாமி வீட்டில் கலகலப்பு . உள்ளே சென்ற ராமசாமி அம்புஜத்திடம் ஏதோ கிசுகிசுத்தார் . அம்ஜம் திடீரென்று பளிச் என்று உடை மாற்றி, முகம் திருத்தி ஒரு சிறிய தட்டில் பழம் வெற்றிலை , கவர் வைத்து, ஹாலுக்கு வந்து, ராம சாமி , “இந்தா இதை வாங்கிக்கோ” என்றார்.

என்ன பாஸ் இதெல்லாம் என்றார் மா சா.

டேய் கோயில் போய் பெருமாள் தாயார் திருவடிகளில் வைத்து ஆசீர்வாதம் வாங்கி உங்க கௌரிகல்யாணிக்கு அப்ளிகேஷன் வந்திருக்கு எடுத்துக்கோ என்றார் ரா சா . மா சா கண் கலங்கினார் உங்க அப்பா அம்மா மாதிரியே பண்றீங்கடா நான் எப்பிடிடா இதுக்கெல்லாம் ஈடு செய்யப்போறேன் என்று கண்ணீர் வழிய கை கூப்பி நின்றார். அம்புஜம் சொன்னாள் 'சார் இந்த ஆத்து கூட்டத்துல எது நடந்தாலும் அமோகமா நிறைவேறும் [பூணல், சுபத்திரா டெல்லி விசிட், G -20 எல்லாம் நிழலாட] உங்க குழந்தையும் ரொம்ப நன்னா முன்னுக்கு வரப்போறா தெய்வ அனுக்கிரஹம் உங்களு க்கு நல்ல வழி காட்டும் -வாழ்த்துக்கள்என்றாள் . மன நிறைவோடு அப்பிளிக்கேஷன் பெற்றுக்கொண்டார் மாடசாமி..

‘டேய் எங்க வீட்டுல இன்னிக்கு   அடை    சாப்பிடுறாயா?’ என்றார் ராம சாமி. அடையா என்று மகிழ்ந்தார் மாடசாமி. -சரிடா என்றார். திடீரென்று நினைவு வந்தவராகடேய் அன்னிக்கு சென்னையில இந்த தம்பிக்கு நம்ப அய்யர் மெஸ்ஸுல அடை தாண்டா வாங்கினேன்” என்று மிகுந்த வாஞ்சையுடன் பேசி , அடைப்படலம் முடிந்து  விடை பெரும் போது டேய் form ஏதாவது தெரியல்லேன்னா போன் பண்ணவா என்றார் மா சா.

“போன் பண்ணு ----எனக்கு மட்டும் என்ன தெரியும் நான் கேக்க வேண்டிய இடத்துல கேட்டு சொல்றேன். அதுனால  லேட் பண்ணாம வேலையை ஆரம்பிக்கச்சொல்லு மருமாளை --என்று வழி அனுப்பினர் மாடசாமியை.  தொடரும்     அன்பன் ராமன் 

 

 

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...