SAMIs COME TOGETHER-9
சாமிகள் சங்கமம் -9
அறிவுறுத்தலின் படி கௌரி கல்யாணி , உரிய போனில் டாக்டர் சுபத்ரா வை 8.33 க்கு த்தொடர்பு கொண்டு மேடம் அப்ளிகேஷனில் சந்தேகம் தீர்த்துக்கொள்ள உங்கள் உதவி தேவை என்றாள் . “நீ எதுவும் சொல்ல வேண்டாம் நான் சொல்வதை பின் பற்று” என்றாள் சுபி “நீ எதுவும் எழுதும் முன் 2 ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்துக்கொண்டு நாளை இரவு இதே நேரத்தில் பேசு. மேலும் கவனம் , உன் வீடு தில்லைநகர் பகுதி தானே” என்றாள் டாக்டர் சுபி.‘ஆமாம் மேடம்’ என்றாள் கௌரி . மெல்லிய குரலில் சுபி சொன்னாள் . “தில்லை நகர் 3 வது குறுக்குத்தெருவில் அகிலாண்டேஸ்வரி ஜெராக்ஸ் என்ற கடையில் காலை சரியாக 9. 10 மணிக்குப்போ. 9 மணிக்கு கடை திறப்பார்கள் , சாமி படங்களுக்கு மாலை, கற்பூரம் மற்றும் ஊதுபத்தி வகை மரியாதைகள் செலுத்தி பின்னர் சுமார் 9. 10 மணி அளவில்தான் வேலை தொடங்குவார்கள்
அந்தஇடத்தில் 35 -37 வயதில் இருவர் [ஆண் மற்றும் பெண் ] இருப்பார்கள் ஆண் பார்வை அற்றவர் , பெண் பிறவி ஊமை . அவர்களால் நாம் என்ன ஜெராக்ஸ் எடுத்தோம் என்று யாருக்கும் சொல்ல தெரியாது மட்டுமல்ல முடியாதும் கூட. எவ்வளவு தரவேண்டும் என்பதற்கு காலண்டர் கட்டத்த்தில் இருக்கும் எண்ணை காண்பித்து 7 அல்லது 8, 10 ரூபாய் என்று உணர்த்தி வாங்கிக்கொள்வார்கள். அங்கே போய் காதும் காதும் வைத்தார் போல் நான் சொன்னபடி செய்து , நாளை மீண்டும் பேசலாம் good night என்றாள் டாக்டர் சுபத்ரா
பேசி முடித்ததும் பெரு மூச்சு விட்டு கௌரி ,”ஐயோ இந்த மேடத்துக்கிட்ட நான் படிக்கணுமா எவ்வளவு நுணுக்கமான ஐடியா தராங்க ; மாமா சொன்னது சரிதான் ஏடாகூடமா எதையாவது எழுதி வெச்சா அப்புறம் காவேரி மணல்ல மொட்ட வெய்யில்ல நிக்கவெச்சுடு வாங்க –அம்மாடியோவ்” என்று உடல் நடுங்கினாள். தட தட ஒலியுடன் மாமா மாட சாமி வீடு திரும்பினார் .
சரேலென்று எழுந்து கௌரி 'வாங்க மாமா என்று வரவேற்று, மாமா, அம்மா , பாட்டி அனைவருக்கும் இரவு உணவிற்கு அவரவர் தட்டுகளை சுத்தம் செய்து சரியான வரிசையில் டேபிளில் வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள் . ஒரு 3 நிமிடத்தில் முகம் கழுவி முடித்து மாமா மாடசாமி நெற்றியில் விபூதி அணிந்து சாமி படங்களுக்கு முன் கை கூப்பி பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட அமர்ந்தார் . எல்லாரும் வந்துவிட்டனரா என்று பார்த்துவிட்டு சரி பாரம் fill up செய்துவிட்டாயா என்றார். “இப்பதான் மாமா அந்த மேடத்துகிட்டே கேட்டு fill -up பண்ண கிளம்பினேன்”. மேடம் சொன்னதை அப்படியே மாமா விடம் சொன்னாள் . மா மா "பாத்தியா அதுல எவ்வளவு நுணுக்கம் இருக்கு , அதுனால தான் 2 காபி ஜெராக்ஸ் வெச்சுக்க சொல்லிருக்காங்க . அவங்க சொன்னபடியே செய்; அவங்க சொன்ன இடத்துலயே போ, யாருக்கும் நீ என்ன ஜெராக்ஸ் எடுக்கறன்னு தெரிய வேண்டாம் னு தானே சரியான இடத்துக்கு அடையாளம் சொல்லிருக்காங்க . கவலைய விடு நாளைக்கு காலைல எங்கிட்ட குடு நான் போய் காபி எடுத்துக்கொண்டா றேன் “ என்று ஊக்கம் தந்தார் மாடசாமி .
மாடசாமியின்
அக்கா அவளுக்கு எப்படியாவது இடம் வாங்கித்தந்துருப்பா என்றார்.
மாடசாமி சிரித்து “அக்கா அவதான் இனிமே
நம்பளுக்கெல்லாம் வழி காட்டுவா போகப்போக
பாருங்க என்று சொல்லிக்கொண்டே மானசீகமாக
ராமசாமி மற்றும் டாக்டர் சுபத்ரா
இருவருக்கும் நன்றியும் வணக்கமும் சொல்லிக்கொண்டே இருந்தார் மாடசாமி. மாமாவுக்கு என் மேல எவ்வளவு நம்பிக்கை
என்று மகிழ்ச்சி கொண்டாள் கௌரி
சொன்னபடி கச்சிதமாக செய்துவிட்டார் மாடசாமி.
இரவு 8.30 க்கு போனில் பேசி மேடம் சுபத்ரா சொல்ல சொல்ல ஜெராக்ஸ் படிவத்தில் குறித்துக்கொண்டு , சில இடங்களில் VIDEO CDs on hand என்று குறித்தாள் . மீண்டும் நாளை இரவு பேசலாம் என்றாள் . சுபத்திரா . இரவு பேசும்போது சுபத்ரா "எல்லா பக்கத்தையும் போட்டோ எடு, whatsapp அனுப்பு. காத்திரு நான் பார்த்தபின் திருத்தவேண்டும் என்றால் சொல்கிறேன் அதுவரை form ஒரிஜினலை நிரப்பாதே என்றாள் . அதே போல் செய்து இரவில் ஒரு ஜெராக்ஸ் காபியை போட்டாவாக அனுப்பி அடுத்த 16 நிமிடத்தில் சுபத்ரா கச்சிதமாக இருக்கு. original form fill -up செய்யும் பொது BLACK INK உபயோகி , வேறு எதுவும் வேண்டாம் அப்போது தான் scan நன்றாக இருக்கும் குட் லக் என்றாள் சுபத்ரா. ஆஹா இந்த மேடம் எவ்வளவு துல்லியமா சொல்லித்தரங்க என்று மனமகிழ்ந்து ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று கண்ணீர் உகுத்தாள் கௌரி கல்யாணி .
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment