Tuesday, April 11, 2023

RENGAA RENGAA -13

 RENGAA RENGAA -13

ரெங்கா ரெங்கா – 13

ராமசாமி,  மக்களையும் அவர் குயுக்தி மற்றும் சகுனி வேலைகளையும் முகம் பார்த்தே நிர்ணயிக்கும் பேராற்றல் படைத்தவன். இது வரை அவன் ன் மனதிற்கு ஒவ்வாத யாரையும் நட்பு பாராட்டியதில்லை . ஏற்றுக்கொண்டுவிட்டால் இரவு பகல் வெயில் மழை , மொழி இனம் எதையும் பொருட்படுத்தாமல் இயன்ற அவளுக்கு உதவி செய்வான். அவ்வளவு ஏன் இந்த கஸ்தூரி ரெங்கனுக்கு , மாடசாமிக்கு, சுபத்ராவுக்கு, , வேதாந்தம் தம்பதியினருக்கு, கீமேன் செல்லத்துரைக்கு என்று நீண்ட நெடும் பட்டியலுக்கு சொந்தக்காரன் ராமசாமி. இதில் கேப்டன் குக் [சேஷாத்திரி], லாவண்யா, கோவிந்தசாமி , ரயில்வே உயர் அதிகாரி சுந்தரேசன் அனைவருமே பல தருணங்களில் பலன் அடைந்து இன்றளவும் ராமசாமிக்கு மனமுருகி நன்றிபாராட்டும் உயர் குணம் கொண்டவர்கள். எனவே ராமசாமி ரெ வின் அண்ணா நகர் உறவினர்களை வெறுத்து ஒதுக்குவதற்கு ஆழமான காரணங்கள் இருக்கும். இந்த மேற்கண்ட பட்டியலில்   யார் என்ன பலன் அடைந்தனர் என்று விரிவாக நினைவு கூர்ந்தால் அதுவே ஒரு கதை போல இருக்கும் . அதனால் கஸ்தூரி ரெங்கன் ராமசாமிக்கு முற்றிலும் கட்டுப்பட்டவன்ராமசாமியை ஏன் அழைத்துவந்தேன் என்று மாடசாமி சற்று முன் சொன்னதை கவனித்தால் ராமசாமியும் மாடசாமியும் மிகத்துல்யமாக எதையும் புரிந்து கொண்டு விடுவார்கள் என்பது விளங்கும்.

11.00 மணி செய்முறை தேர்வில் 4 குழப்பங்களை தீர்க்க உனது கருத்தை செயல் முறை விளக்கமாக தருக என்று ரெ வுக்கு பணித்தனர். விடைகளை வெறும் ஸ்டெப்ஸ் வடிவில் தரவேண்டும் . கஸ்தூரி ரெங்கன் 3 வினாக்களை சிறப்பாக விளக்கினான் ஒன்றில் மட்டும் அவனது விடையில் சில குழப்பங்கள் இருந்தன. அனைத்து அதிகாரிகளும்   ரெங்கா -வைப்பாராட்டினர் . சேர்மன் அவனை அழைத்து அவனது குடும்பச்சூழல் பற்றி தெரிந்து கொண்டார்.. GOOD LUCK என்று வாழ்த்தி அனுப்பினார். அனைத்து அதிகாரிகளுக்கும் வணக்கம் தெரிவித்து விடை பெற்றான் ரெ. 12.15 மணிக்கு ரூமுக்கு வந்து அனைத்தையும் தெரிவித்தான் . ரிசல்ட் எப்ப சார் தெரியும் என்றான் -மாடசாமிஇடம் . ராமசாமியைக்கேட்டால் கிளி ஜோசியம் பார் என்று சொல்லி கிண்டல் பண்ணுவார் என்று பயம். இதற்கிடையில் மா சா இன்டர்வ்யூ ரூமில் போய் ரிசல்ட் 10-14 நாளில் ரிஜிஸ்தர் தபாலில் வீட்டுக்கு வரும் என்று தெரிந்து வந்து ரூமில் தெரிவித்தார்.

உடனே ராமசாமி டேய் கஸ்தூரிரெங்கா, நீ அலமாரியபூட்டிடு , வெந்நீர் அடுப்புல எதுவும் செய்ய வேணாம் னு அம்மாக்கு சொல்லிடு. லெட்டரை எடுத்து வெந்நீர் அடுப்பில போட்டுறப்போரா -கவனம் என்றார்

மாடசாமி ஐடியா சொன்னார் “எனக்கு ஒரு ரயில்வே லெட்டர் வரும் அதை யார் கையிலும் தராதீங்க னு உங்க போஸ்ட்மேன் கைல ஒரு 10/- ரூவாயைதள்ளி வைங்க , நீ பாத்ரூம்ல இருந்த கூட தேடி உன் கைலயே குடுத்துடுவாங்க . பிழைக்கற வழிய தெரிஞ்சுக்குங்கப்பா அலமாரியப்பூட்டறேன் அடுப்பை ஓடைக்கறேன்னுக்கிட்டு இருக்கீங்க . லெட்டர் வந்தப்புறம் இன்னொரு 5/- ரூவாயை தந்துட்டா உனக்கு தெரியாம எந்த லெட் டரும் எப்பவுமே போகாது.

சரி எல்லாம் முடிஞ்சாச்சுல்ல இனிமே எல்லாரும் பிரீ தானே Mylapore Woodlands  . போலாமா என்றார் மாசா . கஸ்தூரி நடுங்கினான் "உட்லண்ட்ஸா" என்று அவனுக்கு பயம் அது நான்வெஜிடேரியன் ஹோட்டலோ என்று. . முதன் முறையாக மாடசாமிக்கு கோபம் வந்தது எவனாவது NV ஹோட்டல மைலாப்பூர் வெப்பானா ; நாங்க NV சாப்பிடறதில்லை னு உனக்கு தெரியாதா ; அதுவும் ராமசாமியை அப்பிடி எல்லாம் கூட்டிக்கிட்டு போனா அதைவிட பெரிய பாவமே கிடையாது வா போவோம்.

ஆஸ்த்தான ஆட்டோவில் மைலாப்பூர் உட்லண்ட்ஸ் அடைந்தனர் மணி. 1.05. சார் 7 மினிட்ஸ் வெயிட்டிங் டைம் என்றார் ரமேஷ் பட் . மெல்லிய ஒளியில் அமைதியான சூழலில் உடுப்பி வகை சமையல் ,காலிஃளவர் மிளகு பொரியல்  காரம் மசாலா,எல்லாம் அளவாக பூண்டு அறவே இல்லை. நளினமான சாம்பார், அன்னாசி ரச ம்  அற்புதமான பாயசம் ஜாதிக்காய் ஊறுகாய் -சோறே சொர்க்கம் என்பது சாலப்பொருந்தும் . சிறப்பான விருந்தோம்பல் இப்போதும் ராமசாமி பணம் செலுத்தினார். மீண்டும் 2.20 க்கு ரூம் திரும்பினார் ஆட்டோவில்.    எழும்பூ ரி ல் அமைதி. [வைகை போய் விட்டிருந்தது 4-15 வரை சந்தடி இருக்காது ] தூங்கலாம் என்றார் மாடசாமி . நல்ல உறக்கம் 4.00 மணிக்கு மா சா மெல்ல எங்கோ போனார் . இன்டர்வ்யூ முடிந்து அதிகாரிகள் கிளம்பிப்போய் விட்டனர். மாலை தேனீர் விருந்திற்கு வைத்திருந்த வறுத்த முந்திரியை மிச்சம் 15 இல் 6  பாக்கெட் எடுத்து கொண்டு ரூம் திரும்பினார் மா  சா . இந்தாங்க என்று தலைக்கு 2 பாக்கட் தின்றுவிட்டு வசந்த பவனில் புது டிகாக்ஷன் காபி -இது மாசா வின் செலவில்   

7.00 வரை மெரினா பீச்சில் சுகமான காற்று . 7.30 க்கு ரூம் திரும்பினர் வயிறு full லா இருக்கு ஒன்னும் சாப்பிட வேண்டாம் என்றனர். சரி 10. மணிக்கு பழம் பால் சாப்பிடுவோம் . 9.30 மணிக்கு மாடசாமி டூட்டி சார்ட் பெற்றுக்கொண்டார். 10.20 க்கு பால் பழம் சாப்பிட்டு வண்டி ஏறினர் பக்கத்து கோச்சில் 2 பெர்த் பிடித்து இவர்களை உறங்க ஏற்பாடு செய்தார் மாடசாமி.  இரவு பயணம் இனிதே முடிந்து ஸ்ரீரங்கத்தில் இறங்கி ராசா / ரெ விடை பெற்று அனைவரும் வீடு திரும்பினர்.

அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...