Thursday, February 26, 2026

LET US CONSIDER -3

 LET US CONSIDER -3     [ Kadhalikka Neramillai]-3

இதை யோசிப்போம்                       [காதலிக்க நேரமில்லை -1964] -3

வண்ண பதிவு

இவ்விடத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவாளர்கள் குறித்து அறியவேண்டியது அவசியம். அவர்கள் சித்ராலயா நிறுவனத்திற்கு பணியாற்றிய கடைசி படம் தான் 'காதலிக்க நேரமில்லை'. வேறு யார்?

 திருவாளர்கள்  வின்சென்ட் மற்றும் பி என் சுந்தரம்.                                                    தமிழ் சினிமாவில் இந்த பெயர்கள் வெகு பிரபலம் . முன்னவர் [ வி ] ஜெமினி ஸ்டூடியோவில் திரு கமல்கோஷ் என்ற தலைமை ஒளிப்பதிவாளரின் பட்டறையில் பயின்றவர் பின்னவர் [பி என் சு ] விஜயா-வாகினி தொழிற்கூடத்தில் பயின்றவர்]. இவர்கள் இணைந்து தமிழ்திரையில் வெகு விமரிசையாக வலம் வந்தது தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சயம் ஒரு முக்கிய பகுதி.

அதற்கு முன் [1964 க்கு முன்] இருவருமே கலர் படங்களில் ஒளிப்பதிவு செய்ததாக[குறைந்த பட்சம் என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்]  சான்றுகள் இல்லை.

இங்கே மீண்டும் ஸ்ரீதர் என்ற அசுரனின் நெஞ்சுரம் பாராட்டுக்குரியது. இவ்விருவரின் ஒளிப்பதிவுத்திறன் மீது அபார நம்பிக்கை வைத்து இவர்களையே காதலிக்க நேரமில்லை படத்தின் ஒளிப்பதிவுக்கும் ஸ்ரீதர் பயன் படுத்தினார் என்பது சாதாரண நிகழ்வு அல்ல. ஏனெனில் கலர் படம் தயாரிப்பது பல இன்னல்கள் கொண்டது. எனினும் வின்சென்ட் -சுந்தரம் ஜோடி கலர் ஒளிப்பதிவில் [முதல் படத்திலேயே] பட்டையை கிளப்பினார்கள் என்பது அவர்களின் திறமைக்கு சான்று.

சந்தேகம் இருப்பின் காநே [1964] படத்தின் மற்றும் 80-85 களில் வந்த வேறு வண்ணப்படத்தின் [அதாவது 20 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட] காட்சிகளை ஒப்பீடு செய்தால் நான் சொல்லும்  தகவல் புரியும் .  காதலிக்க நேரமில்லை படத்தின் 5 முக்கிய   பாடல் காட்சிகளை நினைவுகொள்ளுங்கள்

OUT DOOR SONGS

1 https://www.youtube.com/watch?v=BIRwJPhaHos enna paarvai

2  https://www.youtube.com/watch?v=Xt9pncmbTYI nenjaththai alli

INDOOR SONGS

3  https://www.youtube.com/watch?v=CzBolio3q8k Anubavam pudhumai

4  https://www.youtube.com/watch?v=6N-VVp96-Yc Malarenra mugam

OUT DOOR [SETS]

5 https://www.youtube.com/watch?v=le-63cu7KUQ Naalaa naalan  

ஏன் இந்த 5 பாடல்கள் ?

இரண்டு [1, 2]  வெளிப்புற காட்சி– 1 சென்னை மெரினா,2 ஊட்டி தாவரவியல் பூங்கா

இரண்டு [3, 4] உள்ளரங்கு காட்சி -அறை , ஒன்று  ஸ்டூடியோ செட் [5]

5 லும்  ஒளி  வெவ்வேறானது எனவே கலர் பாலன்ஸிங்                         [COLOUR BALANCING ] என்பது  கத்திமேல் நடப்பது.

எவ்வளவு நேர்த்தியாக காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளன. [பின்னாளில் வந்த சில முன்னணி ஒளிப்பதிவாளர்கள் திரைப்படக்கல்லூரியில் முறைப்படி பயிற்சி பெற்றவர்கள்]            வின்சென்ட் -சுந்தரம் உழைப்பின் அனுபவம் கொண்டு படப்பிடிப்பு செய்த முதல் வண்ணப்படம் கா. நேரமில்லை . இதைத்தான் நான் வியந்து பார்க்கிறேன்.

இவ்விருவரும் அனுபவசாலிகள் மட்டுமல்ல, எப்போதும் புதிய தகவல்களை அறிந்து செயல் படுத்தும் ஆர்வமும் கொண்டவர்கள்  அதிலும் திரு வின்சென்ட் கடைப்பிடித்த gamma  0.68 அணுகுமுறை அந்நாளைய ஒளிப்பதிவாளர்கள் மேற்கொள்ளாத அணுகுமுறை என்பது குறிப்பிடத்தக்கது .

இவை நீங்கலாக சரியான ஒப்பனையும் [சிவராம்] படத்தொகுப்பின் துல்லியமும் [என் எம் சங்கர் ],  நடன அமைப்புகளும் [தங்கப்பன்] [  ஆனால் 'அனுபவம் புதுமை' பாடலுக்கு நடனம் ராஜஸ்ரீயின் அசைவுகள் இயக்குனர் ஸ்ரீதர் அமைத்தவை]. 

படத்தின் டைட்டில் சித்திரங்கள் [கங்கா ஜெயராஜ்] , டைட்டில் இசை [விஸ்வநாதன் -ராமமூர்த்தி] நிழற்படங்கள் [திருச்சி அருணாசலம்] விளம்பர படங்கள் [பரணி]  வசனங்களில் உறுதுணை [கோபு]  ஸ்ரீதர், வின்சென்ட் -சுந்தரம் இப்படி பலரின் சிறப்பான பங்களிப்பு ஒன்றிணைந்து பெற்ற வெற்றி தான் "காதலிக்க நேரமில்லை"

இப்படத்தின் பெண் கலைஞர்கள் காஞ்சனா , ராஜஸ்ரீ , சச்சு மற்றும் திரு கோபு [மற்றும் சிலர்] நீங்கலாக ஏனையோர் விண்ணுலகில்.

மண்ணுலக வாழ்விலேயே விண் முட்டும் சாதனை படைத்தவர்கள் .

ஏதோ நான் ஸ்ரீதர், எம் எஸ் வி இவர்களின் தீவிர ரசிகன் என்பதால் நீட்டி முழக்கி எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சிலர் நினைக்கக்கூடும். எனது  கருத்துகள் மிகைப்ப டுத்தப்பட்டுள்ளன  என்று கருதினால் அவை எவை என்று சுட்டிக்காட்டுங்கள். வாய்ப்பே இல்லை, ஏனெனில் நான் பதிவிட்டுள்ள எதுவும் அன்றைய சமகால படைப்புகளை விருப்பு வெறுப்பின்றி சீர் தூக்கி பார்த்து என் சிற்றறிவுக்கு எட்டிய உண்மைகளை மட்டுமே விளக்க முற்பட்டுள்ளேன். இவை ஒரு புறம் இருக்க இயன்ற வரை பிற ஆதாரங்களை முன் வைப்பதில் கவனம் செலுத்துகிறேன்.  அவ்வகையில் திரு அண்ணாதுரை கண்ணதாசன் [திரு கண்ணதாசனின் புதல்வர்]  பதிவிட்டுள்ள வீடியோ வை இணைத்துள்ளேன். மேலும் அரிய தகவல்களை அறிய உதவியாக இருக்கக்கூடும்.

https://www.youtube.com/watch?v=AiyaKRsg7F0 Annadurai on SRIDHAR KD MOVIES

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

LET US CONSIDER -3

  LET US CONSIDER -3      [ Kadhalikka Neramillai]-3 இதை யோசிப்போம்                        [ காதலிக்க நேரமில்லை -1964] -3 வண்ண பதிவு...