Wednesday, February 25, 2026

GUITAR BRILLIANCE -3

 GUITAR BRILLIANCE -3

கிட் டார் ஒலியில் பரவசம் -3

கிட்டார் வாசிப்பில் தனி முத்திரை பதித்த திரு பிலிப் எண்ணற்ற பாடல்களுக்கு இசைத்து அழியாப்புகழ் கொண்டவர். பல இசை அமைப்பாளர்களுடன் பணியாற்றி இருந்தாலும் அவரது நெடியபயணம் திரு எம் எஸ் வி அவர்களுடன் தான். அவ்வகையில் அவர்வழங்கிய சில அற்புதங்களை இன்றைய பதிவில் பார்ப்போம்.

குழந்தையும் தெய்வமும் [1966] படத்தில் இடம் பெற்ற  'அன்புள்ள மான் விழியே ' [வாலி ] எம் எஸ் வி இசையில்    டி எம் எஸ் சுசீலா குரல்களில் .

] பாடலின் துவக்கமே விறுவிறுப்பு அதிலும் ட்ரம் வேறு சேர்ந்துகொண்டு ஒரு கலகலப்பான துவக்கம் பாடலுக்கு அமைந்துள்ளது. சரணங்கள் அனைத்திலும் போங்கோ ஒலி க்க பல்லவியில் ஆங்காங்கே இடை இசையிலும் சொக்க வைக்கும் கிட்டார் ஒலி . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=f-fL8CVz-HU ANBULLA MAAN KDEIVAMUM 1965 VALI MSV PS TMS OPENING GUITAR DRUM

களிப்புக்கும் காதலுக்கும் தான் கிட்டாரா ? ஏன் சோகத்துக்கும் கிட்டார் மீட்டலாமே என்ற உதாரணம்

பார்மகளே பார் பாடலில் [படமும் அதே  பெயரில் தான்] 1963 கண்ணதாசன் வி ரா , குரல்கள் டி எம் எஸ்              

 பி பி எஸ்  . பிரிவுத்துயரில் ஒலித்த கீதம். அதிலும் கூட கிட்டார் பேசுகிறது [பிலிப்பின் வாசிப்பை கவனியுங்கள் ] பாடல் நெடுகிலும் ஆறுதலாய் ஒலித்த கிட்டார் . இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=pGADShnCK38 AVAL PARANDHU PONALE  PAAR MAGALE .. KD VR PBS TMS  OPENING GUITAR     

ஆடவரலாம் ஆடவரலாம், ஆடவரெல்லாம் ஆட வரலாம் [கறுப்புப்பணம் -1963] கண்ணதாசன், வி ரா, குரல்கள் எல் ஆர் ஈஸ்வரி, எம் எஸ் ராஜு 

பாடல் முழுவதிலும் கிட்டாரின் மேலாண்மை இண்டு  இடுக்கெல்லாம் பயணித்து போதை போல் புகழ் பெற்ற அந்நாளையபாடல். எவ்வளவு நுணுக்கமாக கிட்டார் முழங்கியுள்ளது . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=3mC6U6ftNiM AADAVARALAAM

துள்ளித்துடித்த கிட்டார்--  காதல் பாடலில்

கன்னி வேண்டுமா [பச்சை விளக்கு -1964] கண்ணதாசன் வி, ரா , குரல்கள் பி பி ஸ்ரீநிவாஸ் எல் ஆர் ஈஸ்வரி

காதல் பாடல் அல்லவா ? கிட்டார் பாடல் நெடுகிலும் புகுந்து விளையாடி போங்கோசுடன் கைகோர்க்கும் நளினம் .கேட்டு மகிழ இணைப்பு

https://www.youtube.com/watch?v=smW7_8ZYqN4 KANNI VENDUMA PACHAI VILAKKU 1964 – KD VR PBS LRE  GUITAR THROUGH THE SONG

நன்றி

அன்பன் ராமன்

1 comment:

  1. Yes.. Philip has been great asset to MSV and his contribution in every song of MSV is matchless.
    Similarly, every musician in MSVs team was a Gem and I can talk about them for hours playing each song..

    ReplyDelete

I S MURUGESH -02

  Meesai again     I S MURUGESH -02 ஐ   எஸ் முருகேஷ்-02 திரு முருகேஷ் அவர்களின் பல திறமைகள் ஒரு புறம் இருக்க , சங்கர் - கணேஷ் , ...