Friday, June 30, 2023

SAMIs COME TOGETHER -52

 SAMIs COME TOGETHER -52

சாமிகள் சங்கமம் -52

நாட்கள் நகர நகர தேர்வு பயம் அதிகரிக்க ஒரு சிலர் நீங்கலாக பலருக்கும் உள்ளூர ஒரு கவலை அரித்தது, நான் பாஸாயிடுவேனா ? இதுநாள் வரை இப்படி பயம் வந்ததில்லை இந்தப்பாழய்ப்போன PG இல் தெரியாத்தனமா சேர்ந்துவிட்டேன் அதுக்காக FAIL ஆனா யார் ஒத்துக்குவாங்க எல்லாரும் கேலி பேசுவாங்க என்று பட்டினி கிடந்த எலிகளைப்போல மெல்ல ஊர்ந்துகொண்டிருந்தனர்.5, 6 பேர் எப்போதும் போல சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். . இந்த எலிக்கூட்டத்தின் மனம் சரியில்லை என்று மிக எளிதாக மேடம் கண்டுபிடித்தார். சரி இவர்களை இப்படியே விட்டால் குழம்பித்திரிவார்கள் எனவே மாலை 4.30க்கு வகுப்புகள் முடிந்ததும் அனைவரும்  [ I  PG ]ரூம் எண் 16 க்கு வாருங்கள் -இருக்கு உங்களுக்கு என்று எச்சரித்தார்.

ஐயோ இருக்காமே , சுந்தரம் தப்பிச்சுட்டான் -நாம ? இதுபோல் அவ்வப்போது புளிகரைத்தல் சடசங்கு செய்யவில்லை என்றால்              ஏனோ தானோ என்று திரிவார்கள் . மேடம் பார்முலா ஒரு புளிகரைத்தல் சடங்கு= 30 நாள் சுறுசுறுப்பு.. அந்த வகுப்புக்குப்போகும் பிற 3 பேராசிரியர்களும் மாலை 4.30 -5 வர முடியுமா என்று கேட்க அவர்கள் வருகிறோம் என்றனர். அப்போது பேரா ராஜன் கேட்டார் ஏன் மேடம் நல்லா  தானே படிச்சுக்கிட்டு வராங்க அப்புறம் எதுக்கு இன்னிக்கு மீட்டிங் ?

மேடம்: திடீர்னு ஒரு தொய்வு இருக்கு LATER PORTIONS ஒழுங்கா CONCENTRATE பண்ணாம புத்தி WORKSHOP பத்தியே சிந்தனைல இருக்கு அதுனால ஒரு 6 பேருக்கு SCREW வை TIGHT பண்ணனும் .அவங்களுக்கு வெக்கற TIGHT எல்லாரும்சரி ஆயிருவாங்க வேற ஒண்ணும் இல்ல CRITICAL MONITORING இருக்குன்னாலே எல்லாம் சரி ஆயிடும்..நம்ப எல்லாரும் போனாலே சரி டிபார்ட்மெண்ட்டே நம்பள வாட்ச் பண்ணுதுனு ஒரு caution  வரும் அதுக்கு தான் ,I  am sure , you recognize the value என்றார் மேடம் 

குறித்த நேரத்தில் அனைவரும் வந்தனர் . பேராசிரியர்களை மேடையில் அமரவைத்து கையில் குறிப்பேடுகள் தந்து குறித்துக்கொள்ளச்சொன்னார். ஒரு 4 ஆண்கள் 2 பெண்கள் மேடையின் கீழே நிற்க வைத்து ஏன் நீங்க திடீர்னு சரியா கவனமில்லாமல் இருக்கீங்க? 3 பேராசியர்களையும் தலா 2 பெயர்களைக்குறித்துக்கொள்ள ச்சொன்னார் .உங்கள் தேவை எதுவாயினும் நீங்கள் இந்த பேராசிரியரைத்தான் தொடர்பு கொண்டு பாடசந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வேண்டும். வார துவக்கத்திலும் ,லாஸ்ட் வீக் டே தவறாமல் பேராசிரியரை சந்தித்து பேசுங்கள்..அதைவிட்டுவிட்டு மரத்தடியில் என்ன பேச்சு? இன்னும் கொஞ்சப்பேருக்கும் வைத்தியம் பண்ணனும் பாக்கறேன் நீங்கல்லாம் என்ன பண்ணி க்கிட்டு இருக்கீங்கன்னு. தெரியும். எதுவாக இருந்தாலும் வாய் விட்டு கேட்ட தான் யாராலும் உதவி செய்ய முடியும் இல்லைனா  முடியாது. .தினம் மீட் பண்றவங்க தானே நாமெல்லாம் ? பேச என்ன தயக்கம்.?

கேன்டீன்ல உக்காந்து காது பிஞ்சுபோற மாதிரி வாயடிக்கிறீங்க ,இப்போ என்னவோ பேசா மடந்தை மாதிரி அமைதியா தலை குனிஞ்சு நிக்கறீங்க. படிப்புக்கு உதவ எப்போதும் நாங்க தயார் ANY DOUBT , NEVER HESITATE . TO DISCUSS WITH US , OK ? அனைவரும் தலை ஆட்டி ஒப்புதல் அளித்தனர் .யாராவது ஒழுங்கா இல்லேன்னா எனக்கு அலெர்ட் பண்ணுங்க என்று பேராசிரியர்களிடம் வேண்டுகோள் வைத்து, சரியில்லேன்னா எப்பிடி நிமித்தணு ம் னு தெரியும் பாத்துக்கறேன் னு மிரட்டினார்.

அடுத்த வினாடியே அனைவரும் மேடம் உள்ளிட்ட 4 பேராசிரியர்களையும் சூழ்ந்து கொண்டு சந்தேகங்களைக்கேட்டனர். உடனே விடை கிடைக்க , டெய்லி கேட்டுக்கலாமா என்றனர் அதானே சொல்றோம் என்றதும் அனைவரும் குஷி ஆயினர் .இனிமே பயமில்லாம  படிச்சுடுவோம் மேடம் என்றனர்.  எல்லாம் செயல் இருக்கணும் என மீண்டும் வலியுறுத்தினார் மேடம். பின்னர் விடை பெற்று சென்றனர்.                   தொடரும்   அன்பன் ராமன்

 

Thursday, June 29, 2023

RENGAA RENGAA -51

 RENGAA RENGAA -51

ரெங்கா ரெங்கா -51

வெற்றிபெற்றுவிட்ட தகவலை மாடசாமியிடம்  தெரிவித்தார் கே. ஆனால் ஏதும் அறியாததுபோல் இருங்கள் ஏனெனில் இந்த உயர்பதவிகள் சில நேரங்களில் குரூரமான செயல்களுக்கும் தயங்காதவர்கள் ஆதலால் அமைதி காத்து பாதுகாப்பாகஇருக்க போனிலேயே அறிவுரை சொன்னார். மாசா விற் கு .           மாசா எத்தனாயிற்றே எப்போதும் போல இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தார் . செய்தித்தாள்களில் REFUND டிக்கட் மோசடி குறித்து கட்டுரைகள் வெளியாயின .அதில் ஈடுபட்ட உயர் அதிகாரி ஒருவர் தாற்காலிக பணி  நீக்கம் மற்றும்  மோசடிப்பணத்தை திருப்பிச்செலுத்தாமல் ஓய்வூதியம் வழங்கக்கூடாது என்று நீதிமன்ற ஆணை தெரிவிப்பதாக கட்டுரைகள் வெளிவந்தன. மேல் முறையீடு குறித்து .யோசித்தவர்களுக்கு ,இது முற்றிலும் ஐயம்திரிபர நிரூபிக்கப்பட்டுவிட்ட படியால் மேல்முறையீடுக்கு முகாந்திரம் இல்லை என உயர் நீதி மன்றமே தடைவிதித்திருக்கிறது என்பதே பேரிடியாய் இறங்கியது.

கேன்டீனில் ரா சா,  மாசா இடம் பேப்பர் பாத்தியா ஒரு ஆளு ஒவ்வொருதடவையும்  reimbursement டிக்கெட் 2 தடவை பணம்  பண்ணி மாட்டிக்கிட்டு சஸ்பெண்ட் ஆகி பென்ஷன் தொக்கல்ல இருக்காம் மேல் முறையீட்டுக்கே வழி இல்லை னு கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கு. என்றார்.  எத்தன் மாடசாமி ஏதுமறியா சிறுவன் போல ராமசாமி சொல்வதை கூர்ந்துகேட்டுக்கொண்டிருந்தார்.. கே வும் தனது அலுவலகத்தில் பற்றற்ற புத்தர் போல அமைதி காத்து செயல் பட்டார்.  குற்றங்களைக்களைவது பெரிதல்ல குற்றவாளிகளின் network விரிந்து பறந்தது ;எனவே தேவையற்ற உரையாடல்களை தவிர்ப்பது எச்சரிக்கை நிமித்தம் என்பதை இந்த இரு கர்மயோகிகளும் அறியாததா என்ன?

ஒரு கட்டத்தில் ராமசாமியிடம் கூட தகவல்களை விவாதிக்க இயலாத சூழல் நிலவியது. அந்த அளவு ரகசியம் காப்பது காலத்தின் கட்டாயம் ;அதை மாடசாமி நன்கறிவர் ;அதனால் தான் முக்கிய விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜு சிறப்பாக PACK செய்து ரெ வழியேஅனுப்பினார் ;ஆயினும் ரெ வுக்கு எந்த விவரமும் தெரியாது ; ஆனால், இதில் ஏதாவது கசிவு இருந்திருக்குமானால் நேர்மையான ஊழியர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பர்  . மேலும் ஏதாவது இடையூறுகள் ஏற்படுத்தி மாறி மாறி  வாய்தா  வாங்கி ,அதற்கிடையில் ஓய்வும் ஓய்வூதியமும் அடைந்திருப்பார் " உயர் பதவி."

பஞ்சாபகேசன் உயர் மட்ட அதிகாரிகளிடம் விவாதித்து திரு மாடசாமி யின் அப்பழுக்கற்ற சேவை மற்றும் ஊழல் தடுப்பு முயற்சிக்கு அங்கீகாரமாக பாராட்டுக்கடிதம் ஒன்றை துறையின் பாராட்டாக[DEPARTMENTAL APPRECIATION] பெற்று த்தர முயன்றார்.

மாடசாமிநான் என்ன சார் செய்துவிட்டேன் , இருக்கும் தகவல்களைத்தந்தேன்” ஆனால் உங்கள் பங்களிப்பு  உயர்வானது நீதி மன்றத்தில் விளக்கம் சொல்ல என் போன்றாரால் இயலுமா? ;உங்கள் பணிக்கு முன் நான் சிறிய ஊழியன் அவ்வளவே என்று போனிலேயே பஞ்சாபகேசனுக்கு நன்றி தெரிவித்தார். மேன் மக்கள் என்பது செயல் சார்ந்தது உண்மையிலேயே மேன் மக்கள் - கே மற்றும் மா சா.

இவ்வளவு நடந்த பின்னரும் உயர் அதாகரிகளிடம் , மாடசாமிக்கு ஒரு பாராட்டுக்கடிதம் பெற்று த்தருவடித்தருவது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு குறைந்த ஊதிய ஊழியனின் நேர்மையை ,துறையின் தேவைகளுக்காக முற்றிலும் பயன்படுத்திக்கொண்டு , இப்படி பாராமுகமாக இருப்பது வேலையின் மகத்துவத்தை துச்சமாக மதிப்பதாகும் . ஏதாவது ஒரு பிரிவில் [DIVISION ல் ]ஒரு சதாப்தி ரயில் சேவை துவங்கப்பட்டால் உடனே அந்த பகுதியின் [zone ] உயர் அதிகாரிக்கு பட்டயம் வழங்கி கௌரவிக்கிறீர்கள். ஒருவன் தனது அன்றாட பணிகளுக்கிடையே எவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு , பொதுப்பணம் திருடப்படுவதை நிரந்தரமாக நிறுத்திவிட , பல இன்னல்களை க்கடந்து  தேவையான தகவல்களை துல்லியமாக தொகுத்துத்தந்திருக்கிறான் , அந்த மனிதனுக்கு ஒரு பாராட்டு தெரிவிக்க மனமில்லாதவர்கள் ஒருகணம் யோசியுங்கள் . தங்கள் நிர்வகிக்கும் பகுதியில் [zone இல்] ஒரே ஒரு ஏமாற்றுப்பேர்வழியின் தகவல்களை கண்டுபிடியுங்கள் உங்களால் இயலுமா -சற்று சிந்தித்து பதில் அளியுங்கள் . எந்த நிர்வாகமும் உயர் அதிகாரிகளின் சேவையில் இயங்க வில்லை , கீழ்மட்ட பணியாளர்கள் நேரம் தவறாமல் கடமை ஆற்றினால் தான் ஒவ்வொரு துறையும் முறையாக இயங்கும் . ஒரு பாராட்டுக்கடிதம் தருவதற்கு இவ்வளவு இடர்ப்பாடுகள் இருக்குமெனில் எதற்கு இந்தத்துறையில் பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. நீண்ட நாள் உழைத்து நேர்மையைக்காப்பாற்றி உழைத்தோர் , ஈட்டிய பலன் என்ன ? தேவையற்ற இட மாற்றங்களும், , மொழியறியா சூழல்களில் பணியமர்த்தப்பட்டதும் தானே ? உரிய காலத்தில் உயர் அதிகாரிகள் ஆவன  செய்வீர்கள் என்று நம்புகிறேன் ;மன உளைச்சலுடன் இந்த வேண்டுகோள் வைக்கப்படுவது எனக்கல்ல , ஒரு கீழ்மட்ட நேர்மையாளனுக்காக . தங்கள் உண்மை ஊழியன் .கே என்று 3 மேலதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அவர்கள் மிரண்டு போனார்கள் . கே ரயில்வே அமைச்சருக்கே கடிதம் அனுப்பும் துணிச்சல் உள்ளவர் .ஏதாவது அசட்டையாக இருந்தால் , மெத்தனமாக இருப்பவர்கள் என்று மேல்மட்டத்தினருக்கு புகார் அனுப்பி பூர்வாங்க ஆதாரங்களை இணைத்து ஆயுசுக்கும் அலற விடுவார் என்று நடு நடுங்கி  , துறை ரீதியாக தொடர்பு கொண்டனர் கே விடம்.

தொடரும் அன்பன் ராமன்

Wednesday, June 28, 2023

SAMIs COME TOGETHER-51

SAMIs COME TOGETHER-51

சாமிகள் சங்கமம் -51

பல்கலையில் பயில்வோருக்கு மதிப்பீடுகள் GPA முறையில் வழங்கப்படுவதால் உலகளாவிய போட்டிக்கள -ங்களில் ட்ரான்ஸகிரிப்ட் குறித்த விளக்கங்கள் மற்றும் QUANTITATIVE ASSESSMENT   PATTERN முறைகள் என பல விவாதங்கள் அவசியமில்லாது போய்விடும்.; ஆனால் முறையான GPA செய்து தொகுப்பது மிகத்துல்யமான கணக்கீடு முறைகளை உள்ளடக்கியது, இதற்கென்றே விரிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. அவற்றை சரியாகப்பின்பற்றினால் அந்த நிறுவனத்தின் மதிப்பீடுமுறைகள் ,மேலை நாடுகளில்  வெகுவாக ஏற்றுக்கொள்ள படுவது கண்கூடு..

ஒரு 40 நாள் போகட்டும் சிறப்புப்பயிற்சி முகாம் ஏற்பாடு செய்வோம் என்றிருந்த சுபத்திரா மேடம், அலுவலக வழிமுறைகளின் படி ,கடிதங்கள் தயாரித்து ,செயல் முறைகளை விளக்கி ஒரு 3 நாள் பயிற்சிப்பட்டறை ,வேண்டிய RESOURCE PERSONS LIST ,போக்குவரத்துச்செலவுகள் ,துவக்க விழா ,3 நாள் பயிற்சியின் அங்கங்கள் , நிறைவு விழா விற்கு 1 VIP [FROM UGC / MHRD /DEFENCE MINISTRY ] அதற்கான வழிகாட்டு நெறி முறைகள் , வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் ,அவற்றில் கையெழுத்திடும் உயர் நிலை தலைமைகள் குறித்து விரிவான செயல் திட்டத்துடன் UGC க்கு 4 காப்பிகளுடன் பல்கலையின் அதிகாரிகளின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தார். யுஜிசி நீங்கலாக உள்ள பிற அமைப்புகளுக்கு அட்வான்ஸ் COPY என்னும் முன் நகல்களை அனுப்பி விட்டாள் . அது நடைமுறை சௌகரியங்கள் கொண்டது ,மற்றும் கால விரயத்தை தவிர்ப்பது . பல கேள்விகள் மற்றும் விளக்கங்கள் கடந்து ஒப்புதல் வரும் போ து  FEBRUARY-20 தேதி. உடனே தொடர்புடைய அதிகார மையங்களுக்கு e -mail அனுப்பி , ஒப்புதல் வந்தபின்னர் தான் ஏற்பாடுகள் செய்ய இயலும் அதற்கு 3 மாத அவகாசம் தேவைப்படும் எனவே இதே நிகழ்வை அடுத்த கல்வி ஆண்டின் துவக்கத்தில் வைத்து கொண்டால் I PG மற்றும்  II  PG இரு சாராருக்கும் பயனளிக்கும்; எனவே இந்த FINANCE வரும் கல்வி ஆண்டின் நிதி ஒதுக்கீடாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் ஏனெனில் மார்ச் 31க்குள் நடப்பு நிதி ஆண்டின் செலவினங்களோடு சமர்ப்பிக்க இயலாது எனவே அதற்கான விசேஷ அனுமதி வேண்டும் எனக்கேட்டு பெற்று விட்டார் சுபத்திரா மேடம் .

3 நாள் -பயிற்சியில் 6 வித பயிற்சிகள்  -1 கலைகளின் பிரிவுகளும் விமரிசனங்களும் , 2 கலைநயம் விளக்குதல் -மொழி , அபிநய முத்திரைகள் , கண் அசைவுகள் , பார்வை நுணுக்கங்கள் ,குறிப்புகள் தயாரித்தல் 3.சிற்பக்கலை , அடிப்படை நுணுக்கங்கள் ,சிற்ப சாஸ்திர விதிமுறைகள் மற்றும் மர ச்சிற்பங்கள் 4. ஒரிகாமி என்னும் காகித மலர் ஆக்கங்கள் , தத்துவம், உணர்த்தும் மனோநிலைகள் [பேரா .திருமதி மியமோ ஜப்பான்] 5 மட்பாண்டக்கலை மற்றும் டெர்ரகோட்டா நுணுக்கங்கள் 6 பேப்பர் மஷே சிற்பங்கள் [ENVIRONMENTAL SAFETY ] இவற்றின் நிகழ்வுகளில்பெயர் குறிப்பிடாமல்  பெரும்பாலும் மாணவ மாணவியர் வரவேற்புரை /நன்றியுரை வழங்க வாய்ப்பளித்திருந்தார். அநேகமாக அனைத்து PG உறுப்பினர்களுக்கும் பங்களிப்பு இருக்கும் படி பார்த்துக்கொண்டு அனைவரும் மேடத்தின் ஆளுமையையும் , தலைமைப்பண்புகளை கற்றுத்தரும் இயல்பான நடை முறைகளையும் வெகுவாக பாராட்டினர்.

ஆனால் மேடம் ஒன்றைத்தெளிவாக்கினார். இந்த நிகழ்ச்சியை கற்பனை செய்து கொண்டு தேர்வுகளில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. சிறப்பாக தேர்வு எழுதியவர்களுக்கே நிகழ்ச்சிகளில் இடம் ஒதுக்கப்படும் ஏனையோர் கீழே இருக்கைகளில் அமர வேண்டியது தான் என்று எச்சரித்தார். யாருமே சரியாக தேர்வு . எழுதாவிட்டால் ? என்றொருவர் கூட்டத்தில் வினா எழுப்ப -மேடம் சொன்னார் கவலையே இல்லை CAMPION HIGHER SECONDARY ஸ்கூல் குழந்தைகளை கூட்டி வந்து நிகழ்ச்சி நடத்திக்காட்டுவேன் -இதற்கெல்லாம் நான் அசரமாட்டேன் என்று புளியை கரைத்தார் கொதிக்கும் வெந்நீரில் . செய்தாலும் செய்துவிடுவார் என்று அலறிப்புடைத்துக்கொண்டு இல்ல மேடம் நாங்களே ஒழுங்கா பரிட்சை எழுதிட்டு ப்ரோக்ராம்மையும் நடத்திடறோம் மேடம்” என்று மொத்தமாக சரெண்டெர் ஆனார்கள். II PG காரர்கள் நாங்க வரலாமா மேடம் என்றனர். வரலாம் வேடிக்கை பார்க்க என்றார் சுபத்திரா -முகம் சுருங்கி போனார்கள் II PG காரர்கள் .

தொடரும்   அன்பன் ராமன்

LIE-2

 LIE-2 பொய் -2 பொய் என்பது பிறவி குணம் அல்ல . நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .   இதை, ஏன் மன நோய் என்கிறோ...