RENGAA RENGAA -51
ரெங்கா ரெங்கா -51
வெற்றிபெற்றுவிட்ட தகவலை மாடசாமியிடம் தெரிவித்தார் ப கே. ஆனால் ஏதும் அறியாததுபோல் இருங்கள் ஏனெனில் இந்த உயர்பதவிகள் சில நேரங்களில் குரூரமான செயல்களுக்கும் தயங்காதவர்கள் ஆதலால் அமைதி காத்து பாதுகாப்பாகஇருக்க போனிலேயே அறிவுரை சொன்னார். மாசா விற் கு . மாசா எத்தனாயிற்றே எப்போதும் போல இயல்பாக இயங்கிக்கொண்டிருந்தார் . செய்தித்தாள்களில் REFUND டிக்கட் மோசடி குறித்து கட்டுரைகள் வெளியாயின .அதில் ஈடுபட்ட உயர் அதிகாரி ஒருவர் தாற்காலிக பணி நீக்கம் மற்றும் மோசடிப்பணத்தை திருப்பிச்செலுத்தாமல் ஓய்வூதியம் வழங்கக்கூடாது என்று நீதிமன்ற ஆணை தெரிவிப்பதாக கட்டுரைகள் வெளிவந்தன. மேல் முறையீடு குறித்து .யோசித்தவர்களுக்கு ,இது முற்றிலும் ஐயம்திரிபர நிரூபிக்கப்பட்டுவிட்ட படியால் மேல்முறையீடுக்கு முகாந்திரம் இல்லை என உயர் நீதி மன்றமே தடைவிதித்திருக்கிறது என்பதே பேரிடியாய் இறங்கியது.
கேன்டீனில் ரா சா, மாசா இடம் பேப்பர் பாத்தியா ஒரு ஆளு ஒவ்வொருதடவையும் reimbursement டிக்கெட் ல 2 தடவை பணம் பண்ணி மாட்டிக்கிட்டு சஸ்பெண்ட் ஆகி பென்ஷன் தொக்கல்ல இருக்காம் மேல் முறையீட்டுக்கே வழி இல்லை னு கோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கு. என்றார். எத்தன் மாடசாமி ஏதுமறியா சிறுவன் போல ராமசாமி சொல்வதை கூர்ந்துகேட்டுக்கொண்டிருந்தார்.. ப கே வும் தனது அலுவலகத்தில் பற்றற்ற புத்தர் போல அமைதி காத்து செயல் பட்டார். குற்றங்களைக்களைவது பெரிதல்ல குற்றவாளிகளின் network விரிந்து பறந்தது ;எனவே தேவையற்ற உரையாடல்களை தவிர்ப்பது எச்சரிக்கை நிமித்தம் என்பதை இந்த இரு கர்மயோகிகளும் அறியாததா என்ன?
ஒரு கட்டத்தில் ராமசாமியிடம் கூட தகவல்களை விவாதிக்க இயலாத சூழல் நிலவியது. அந்த அளவு ரகசியம் காப்பது காலத்தின் கட்டாயம் ;அதை மாடசாமி நன்கறிவர் ;அதனால் தான் முக்கிய விவரங்கள் அடங்கிய தஸ்தாவேஜு சிறப்பாக PACK செய்து க ரெ வழியேஅனுப்பினார் ;ஆயினும் க ரெ வுக்கு எந்த விவரமும் தெரியாது ; ஆனால், இதில் ஏதாவது கசிவு இருந்திருக்குமானால் நேர்மையான ஊழியர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பர் . மேலும் ஏதாவது இடையூறுகள் ஏற்படுத்தி மாறி மாறி வாய்தா வாங்கி ,அதற்கிடையில் ஓய்வும் ஓய்வூதியமும் அடைந்திருப்பார் " உயர் பதவி."
பஞ்சாபகேசன் உயர் மட்ட அதிகாரிகளிடம் விவாதித்து திரு மாடசாமி யின் அப்பழுக்கற்ற சேவை மற்றும் ஊழல் தடுப்பு முயற்சிக்கு அங்கீகாரமாக பாராட்டுக்கடிதம் ஒன்றை துறையின் பாராட்டாக[DEPARTMENTAL APPRECIATION] பெற்று த்தர முயன்றார்.
மாடசாமி “நான் என்ன சார் செய்துவிட்டேன் , இருக்கும் தகவல்களைத்தந்தேன்” ஆனால் உங்கள் பங்களிப்பு உயர்வானது நீதி மன்றத்தில் விளக்கம் சொல்ல என் போன்றாரால் இயலுமா? ;உங்கள் பணிக்கு முன் நான் சிறிய ஊழியன் அவ்வளவே என்று போனிலேயே பஞ்சாபகேசனுக்கு நன்றி தெரிவித்தார். மேன் மக்கள் என்பது செயல் சார்ந்தது உண்மையிலேயே மேன் மக்கள் -ப கே மற்றும் மா சா.
இவ்வளவு நடந்த பின்னரும் உயர் அதாகரிகளிடம் , மாடசாமிக்கு ஒரு பாராட்டுக்கடிதம் பெற்று த்தருவடித்தருவது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு குறைந்த ஊதிய ஊழியனின் நேர்மையை ,துறையின் தேவைகளுக்காக முற்றிலும் பயன்படுத்திக்கொண்டு , இப்படி பாராமுகமாக இருப்பது வேலையின் மகத்துவத்தை துச்சமாக மதிப்பதாகும் . ஏதாவது ஒரு பிரிவில் [DIVISION ல் ]ஒரு சதாப்தி ரயில் சேவை துவங்கப்பட்டால் உடனே அந்த பகுதியின் [zone ] உயர் அதிகாரிக்கு பட்டயம் வழங்கி கௌரவிக்கிறீர்கள். ஒருவன் தனது அன்றாட பணிகளுக்கிடையே எவ்வளவு துல்லியமாக திட்டமிட்டு , பொதுப்பணம் திருடப்படுவதை நிரந்தரமாக நிறுத்திவிட , பல இன்னல்களை க்கடந்து தேவையான தகவல்களை துல்லியமாக தொகுத்துத்தந்திருக்கிறான் , அந்த மனிதனுக்கு ஒரு பாராட்டு தெரிவிக்க மனமில்லாதவர்கள் ஒருகணம் யோசியுங்கள் . தங்கள் நிர்வகிக்கும் பகுதியில் [zone இல்] ஒரே ஒரு ஏமாற்றுப்பேர்வழியின் தகவல்களை கண்டுபிடியுங்கள் உங்களால் இயலுமா -சற்று சிந்தித்து பதில் அளியுங்கள் . எந்த நிர்வாகமும் உயர் அதிகாரிகளின் சேவையில் இயங்க வில்லை , கீழ்மட்ட பணியாளர்கள் நேரம் தவறாமல் கடமை ஆற்றினால் தான் ஒவ்வொரு துறையும் முறையாக இயங்கும் . ஒரு பாராட்டுக்கடிதம் தருவதற்கு இவ்வளவு இடர்ப்பாடுகள் இருக்குமெனில் எதற்கு இந்தத்துறையில் பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. நீண்ட நாள் உழைத்து நேர்மையைக்காப்பாற்றி உழைத்தோர் , ஈட்டிய பலன் என்ன ? தேவையற்ற இட மாற்றங்களும், , மொழியறியா சூழல்களில் பணியமர்த்தப்பட்டதும் தானே ? உரிய காலத்தில் உயர் அதிகாரிகள் ஆவன செய்வீர்கள் என்று நம்புகிறேன் ;மன உளைச்சலுடன் இந்த வேண்டுகோள் வைக்கப்படுவது எனக்கல்ல , ஒரு கீழ்மட்ட நேர்மையாளனுக்காக . தங்கள் உண்மை ஊழியன் ப.கே என்று 3 மேலதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். அவர்கள் மிரண்டு போனார்கள் .ப கே ரயில்வே அமைச்சருக்கே கடிதம் அனுப்பும் துணிச்சல் உள்ளவர் .ஏதாவது அசட்டையாக இருந்தால் , மெத்தனமாக இருப்பவர்கள் என்று மேல்மட்டத்தினருக்கு புகார் அனுப்பி பூர்வாங்க ஆதாரங்களை இணைத்து ஆயுசுக்கும் அலற விடுவார் என்று நடு நடுங்கி , துறை ரீதியாக தொடர்பு கொண்டனர் ப கே விடம்.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment