Tuesday, June 27, 2023

RENGAA RENGAA -50

 

RENGAA RENGAA -50

ரெங்கா ரெங்கா -50

                இது அடியேனின் 650ம் பதிவு. ஆதரவளித்த பெருமக்களுக்கு நன்றி 

மீண்டும் விவாதம் தொடங்கியதும் 

ஏதோ குறைபாடுகள் என்றீர்களே என்றார் நீதிபதி.

ஆம் தற்போது பயணத்தொகை+அலவன்ஸ் பயணடிக்கட்டின் காபியை சமர்ப்பித்து சில நிறுவங்களில் முழுத்தொகையையும் பெற்று விடுகிறார்கள். இது முறையற்ற செயல்.

நீதிபதி : எப்படி?

ELIGIBILITY அடிப்படையில் I  AC  வகுப்பில் போக மற்றும் வர பதிவு செய்வார்கள் . ஆனால் ஓரிரு தினங்களில் I  AC  டிக்கட் ,தேவையான எண்ணிக்கையில் பிரதி எடுத்து விட்டு டிக்கட் கான்செல் செய்வார்கள்..உண்மையான பயணத்திற்கு III AC /III ஸ்லீப்பர் டிக்கட் பயன்படுத்துகிறார்கள்.

: குறுக்கிட்டு உயர் வகுப்பு டிக்கட் கான்சல் செய்தால் ஊழலா -இது என்ன வாதம் என்று கொதித்தார்.

நீதிபதி  இதை புரியும்படி விளக்குங்கள் என்றார்.

பஞ்சாப கேசன் : ஒரே நபர் I AC மற்றும் III ஸ்லிப்பரோ AC யோ முன்பதிவு செய்து         I AC டிக்கட் பிரதி எடுத்துவைத்துக்கொண்டு I AC டிக்கட் கான்செல் செய்துவிட்டு III வகுப்பில் பயணம். I AC டிக்கட் பிரதி யை கொடுத்து முழு தொகை +அலவன்ஸ் ஏதோ டிபார்ட்மெண்டில் பெறுகிறார் ஆனால் ரயில்வேயில் முதலிலேயே டிக்கட் கான்செல் செய்து அப்போதும் ஒரு பெரும் தொகை பெறுகிறார். ஒரு டிக்கட் வைத்துக்கொண்டு எத்துணை முறை பணம் பெற அனுமதிப்பது ? அதிலும் பயணம் செய்யாமலே பணம் பெற XEROX பிரதி பயன் படுகிறது எனவே இதை ஒழுங்கு படுத்த ஒரிஜினல் டிக்கட்  சமர்ப்பித்தால் மட்டுமே பணம் பெற இயலும் என்ற ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றார் ப கே.

உ ப வ : யாரோ ஒருவர் செய்தால் அதற்காக ஒரு பழக்கத்தையே மாற்ற வேண்டுமா ? இதனால் இடைஞ்சல் தான் அதிகமாகும் அதனால் பழைய முறையே நல்லது என்றார்.

நீதிபதி: பழைய முறை நிச்சயம் தொடராது , புதிய முறையில் ஏற்படக்கூடிய இன்னல்களைத்தவிர்க்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்?  அதற்கு முன்னர் ,பழைய முறையில் நிச்சயம் ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதை தெளிவாகக்காட்ட முடியுமா ? என்றார் நீதிபதி.

ப கே சொன்னார்  ஊழல் என்பதற்கு உதாரணம் ஒரே நபர் 68 முறை I AC /III கிளாஸ் TECHNIQUEல்  67 முறை I AC XEROX சமர்ப்பித்து முழுப்பணம் பெற்றுள்ளார் என்பதை RTI ACT மூலம் தகவல் திரட்டியுள்ளோம். நபரின் பெயர் விலாசம் , போன் நம்பர் , பயண தேதி [I AC  /III வகுப்பு] இரண்டிலும் ஒன்றே மேலும் ஒரே ட்ரெயினில் ஒவ்வொரு முறையும். இதன் நோக்கமே பயணத்தை நிறைவேற்றி ,பெருமளவில் குறுக்குவழியில் ஏமாற்றி பொருளீட்டுவது .புதிய நடை முறையினால் வரக்கூடிய இன்னல்களை தவிர்க்க ரயில்வே துறை ஆயத்தமாக இருக்கிறது ;எனவே புதிய செயல் முறைக்கு கோர்ட் அனுமதி அளிக்க க்கோருகிறோம் .

நீதிபதி: இவ்வழக்கின் மையக்கருத்தை ரயில்வே தெளிவாக விளங்கிவிட்டது.குறைகள் இல்லாத செயல் வடிவம் ஒன்றை சமர்ப்பித்தால் புதிய நடைமுறைக்கு ஒப்புதல் அளிப்பது பரிசீலிக்கப்படும் .இறுதித்தீர்ப்பு நாளை .கோர்ட் காலை 11.00 மணிக்கு .இப்போது கலையலாம் என்றார் நீதிபதி. ரயில்வேயின் நிலைப்பாடு சரியாக உறுதியாயிற்று.

.கோர்ட் காலை 11.00 மணிக்கு துவங்கியது . நீதிபதி : இரு தரப்பினரும் ஏதாவது குறிப்பிட விரும்பினால் தலா 15 நிமிடங்களில் கருத்துகளை முன் வைக்கலாம்.

உடனே ப கே : புதிய நடைமுறையை எளிமைப்படுத்த REFUND CLAIM டிக்கட் வாங்க பிரத்தியேக விண்ணாப்பமும் டிக்கட் COUNTERFOIL  உடன் உள்ள அமைப்பிலும் வழங்கினால் எளிதாக COUNTERFOIL  ஐ அகற்றி க்கொடுத்துவிட்டு டிக்கட்டின் மீதி பகுதியை பணம் திரும்பப்பெற உபயோகித்துக்கொள்ளலாம் . ஆனால் ரயில்வே COUNTER களில் பயணம் ரத்து செய்து பணம் பெறுவோர் TICKET WITH COUNTERFOIL கொடுக்க வேண்டும்  அதாவது முழு டிக்கட் மட்டுமே ரத்து செய்து பணம் பெறுவதற்கு செல்லுபடியாகும் . இந்த புதிய வடிவமைப்பை கோர்ட் பரிந்துரைத்தால்  ரயில்வே துறை ஆவன  செய்யும் . முறைகேடாக பலமுறை பணம் ஈட்டிய  குறிப்பிட்ட உயரதிகாரி ஒரே நபர் தான் என்பதை உறுதி செய்யும் ஆவணங்களின் பிரதிகள் இந்த தொகுப்பில் இருக்கிறது. நீதிபதி அவர்கள் ரயில்வே துறை யின்  நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை கணக்கில் கொண்டு அந்த குறிப்பிட்ட நபர் போன்று வேறு எவரும் இருக்கலாம் .     அது போன்றோருக்கு தக்க தண்டனை வழங்க இந்த நீதி மன்றம் தாமாக  [suo motu] முன்வந்து கடும் நடைமுறைகளை அரசுக்கு பரிந்துரைக்க விண்ணப்பிக்கிறோம் என்று கூறி தொகுப்பை நீதிபதியிடம் தர அவர் அதைப்பெற்றுக்கொண்டு  தீர்ப்பு மதியம் இரண்டு மணிக்கு வழங்கப்படும் என்று தனது சேம்பருக்கு சென்றார்.. 

2.00மணிக்கு தீர்ப்பை வெளியிட்டார் நீதிபதி  .”ரயில்வே துறையின் புதிய நடைமுறை பணவிரயத்தை தடுக்கும் நியாயமான முயற்சி எனவே அதற்குத்தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. மேலும் பழைய நடைமுறையை வலியுறுத்திய வாதங்களில் எளிய நடைமுறை என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்லப்படவில்லை,எனவே புதிய நடைமுறையினை TICKET with COUNTERFOIL WITH ALL PASSENGER  DETAILS வழங்க நீதி மன்றம் பரிந்துரைக்கிறது. 

உயர் பதவி வகிப்போர் பணம் ஈட்ட வக்கிரமான செயலில் இறங்குவது வெறுப்பூட்டுகிறது.அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அவர்போல செயல் பட்ட யாராயினும் முதலில் இருக்கும் பதவியில் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வும் அவர் முறைகேடாக ஈ ட்டிய முழு தொகையையும் திரும்ப செலுத்திய பின்பே ஓய்வூதியப்பலன்களுக்கு தகுதி பெறுகிறார் எனவும் இந்த நீதி மன்றம் அரசுக்கு தெளிவு படுத்துகிறது. அந்நபர் வகிக்கும் உயர் பதவியின் மாண்பு கருதி அவர் பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால் அவரது முறைகேடுகள் குறித்த முழு விவரமும்   அவர் சார்ந்த துறைக்கு இன்றே அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கையை உறுதிசெய்யுமாறு பரிந்துரைக்கப்படும். மேலும் குற்றம் தெள்ளத்தெளிவாக ஆவணங்களுடன் விளக்கப்பட்டுள்ளதால், அவ்வதிகாரியின் சார்பில் மேல்முறையீடுகளுக்கு முகாந்திரம் இல்லை . ரயில்வே துறையினரின் அயராத முறைகேடு களையும் முனைப்பை  இந்நீதிமன்றம் பெரிதும் பாராட்டுகிறது” என தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...