Sunday, June 25, 2023

SAMIs COME TOGETHER-50

SAMIs COME TOGETHER-50 

சாமிகள் சங்கமம் -50

மொழி ஒலிப்பயிற்சியில் கௌரி எதிர்பாராத அளவுக்கு சிறப்பாகப்பயிற்றுவித்தாள் மிருணாளினி .சில சொற்களை நோட்டில் எழுதிக்கொடுத்து சரியாகப்படிக்க ச்சொன்னாள் .  ABRACADABRA, OVEN, SUPERFLUOUS, CHICAGO, LOS ANGELES, HOUSTON, RAPPROCHMENT, MAGNIFICENT, IMMACULATE, RENDEZVOUS, GENRE, BUDGET, PAPER MACHE இன்னும் பல . அநேக சொற்களை தவறாகவே உச்சரித்தாள் கௌரி . அது குற்றமல்ல எனினும் மொழி ஆளுமை என்னும் திறமையை, தவறான உச்சரிப்பு பலவீனப்படுத்தவே செய்யும்..அதை மனதில் வெகு ஆழமாகப்பதியவைத்தாள் மிருணாளினி இவற்றின் முறையான உச்சரிப்பு = ABRACADABRA =ABRA-CADAB-RA, OVEN=AVAN, SUPERFLUOUS=SUPA-FLOO, CHICAGO=SHIKAGYO, LOSANGELES=LUSANJALIS, HOUSTON=HYOOSTN, RAPPROCHMENT=RAPROCHMAA, RENDEZVOUS,=RENDEVOO, GENRE=JANAR, BUDGET=BAJIT, PAPER MACHE= PAEPAMASHAY என்றெல்லாம் இந்த பகுதியை சொல்லித்தரும்போழுது THE CULTURE OF SYLLABLES மற்றும் STRESS என்னும் அழுத்தம் குறித்து விரிவாக அலசினாள் .இந்திய மொழிகளை படிக்கும் பொழுது, எல்லா எழுத்துகளையும் ஒன்று விடாமல் சீராக படிக்கிறோம். ஆனால் ஆங்கில மரபு வேறு வகையானது , சில எழுத்துக்கள் இல்லாதது போல் படிப்பது அல்லது ஒலி மாறுபாடடையும் விதத்தில் படிப்பது .EXCUSE ME =EKS  KYOOZ  ME என ஒலிக்கும்  QUICK = KVIK , QUEEN =KVEEN ,PLEASE =PLEEZ என ஒலி மாறுபாடு வெளிப்படும். இவற்றில் EXCUSE MEஎன்பது பிரித்து EKS  KYOOZ  ME என மூன்று பகுதிகளாக ஒலிக்கிறது. அழுத்தம் [STRESS ] EKS இல் பின் பகுதி அதிக இடை வெளி இன்றி வருதல் ஆங்கில மரபு. . MAG -NI -FICENT அழுத்தம் MAG இல் -NI- குறில் மற்றும் FICENT விரைந்து சொல்வது ஆக 3 SYLLABLE உடையது IMMACULATE =IM -MACULET இரு SYLLABLE அமைப்பில் CULATE =CULET என்று குறுக்கி பேசுவது. . பொதுவாகவே  ஒலிகளை குறுக்கி பேசுதல் ஆங்கில மரபு. என்று விளக்கினாள் மிருணாளினி இதற்கிடையே அவ்வப்போது கௌரியின் கல்வி முன்னேற்றம் பற்றி மாமா கேட்டு க்கொண்டே இருப்பார் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்

பாடமெல்லாம் ஒழுங்கா புரியுதா என்று கௌரியை மாமா கேட்க, அவள் மிகுந்த ஆவலுடன் "எப்பிடி படிக்கணும் எதெல்லாம் தெரிஞ்சுக்கணும் னு எங்க ப்ரொபெஸர்கள் பேசறதைக்கேட்டா நல்லா புரியுது ., இதுவே தெரியாம          ஏனோ தானோ படிச்சு ,புரியாமலே திருவிழாக்கூட்டம் மாதிரி அலைஞ்சிருக்கோம் னு தெரியுது. இப்பதான் என்ன செய்யணும் னு ஐடியா வே கிடைச்சிருக்கு. இனிமே ஈஸியா நல்லா படிச்சுறலாம். மேடத்துகிட்ட வேற எதுவும் செய்ய முடியாது படிச்சு தான் ஆகணும் . அவங்களும் சூப்பரா சொல்லித்தரங்கல்ல , அப்புறம் படிக்காம? என்றாள் கௌரி.. ரெண்டே மாசத்துல சரியான பந்தயக்குதிரை மாதிரி தயார் பண்ணி வெச்சிருக்காங்க எல்லாரையும் என்று உணர்ந்தார் மாடசாமி . உள்ளூர நினைத்துக்கொண்டார் ரயில்வே ல சிலர் எவ்வளவு நேர்மையா வேலை செய்யறாங்க, வேற சிலர்? அது போல தான் காலேஜ் /யூனிவர்சிட்டி எல்லாமும் இருக்கும் போல என்று ஊகித்தார்.

ரெவ்யூ கார்ட் என்ற கல்வி குறித்த மதிப்பீ டு ஒன்றை வழங்கியிருந்தனர் கௌரிக்கு. மொத்தம் 6 அம்சங்களில் [ASPECTS] 3 ல் கௌரி முதலிடம் , பிற மூன்றில் சுகன்யா முதலிடம் என்று குறித்திருந்தனர். ஒட்டு மொத்த மதிப்பீட்டில் [OVER  ALL  RATING ] கௌரி 8.8 ON GPA SCALE-10 , சுகன்யா 8.7 என இரட்டைக்குதிரை போல் சரி சமமான போட்டி.. GPA பற்றி மாமா கேட்டார்; கௌரியால் சரியாக விளக்க முடியவில்லை , மேடத்துகிட்ட கேட்டு கிட்டு வரேன் மா மா என்றாள் .சரியாக அந்த நேரம் பார்த்து போன் கௌரிக்கு பிரேமாவிடம் இருந்து. கௌரியின் முன்னேற்றம் பற்றி தெளிவாக கேட்டு VERY GOOD நல்ல ஸ்கோர் அப்படியே மெய்ன்டென் பண்ணு ALL INDIA 3    ராங்க்  குள்ள  ஈஸியா அடிச்சுடலாம். .இப்ப தெரியுதா எவ்வளவு ஜாலியா கத்துக்குடுக்குறாங்க மேடம் னு -அதுனால தான் மேடம் மேஜிக் னு சொல்றோம் என்று பிரேமா வாழ்த்து தெரிவித்தாள். கௌரி பலூனில் பறப்போது போல் மகிழ்வாக உணர்ந்தாள் ஆனால் நன்றி மறவாமல். இந்த கட்டத்தில் தான் இறையருள் குறித்து பேச வேண்டியிருக்கிறது..இது போன்ற சூழல்களில் பொறாமை உணர்வு தலை தூக்கும் . அவ காக்கா பிடிக்கிறா , இவ குருவி பிடிக்கிறா என்று புகார் சொல்லுவர் அல்லது பேராசிரியர்கள் பாரபட்சம் காட்டுகின்றனர் அல்லது,பொம்பளைனா மார்க்க அள்ளி  அள்ளி   போட்டு னு பல்லை காட்டிக்கிட்டு -சீ இவனுகெல்லாம் வாத்தியாரா என்று சில மாணவர்கள் குறை சொல்லிக்கொண்டு திரிவார்கள். அதுபோன்ற குறை காணவேண்டிய நிகழ்வுகள் அறவே இல்லை என்பதால் இறையருள் குறித்து நினைவு கூற வேண்டியுள்ளது . அவ்வகைப்பாரபட்சங்கள் பல இடங்களில் உண்டு. இங்கே அது மிக கவனமாக தவிர்க்கப்படுவதால் , குமுறல்கள் இல்லை.இளைய மனங்களுக்கு சரியான வழிகாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன என்பது கூட ஒரு வகை ஆசி என்று தான் நினைக்கிறேன் . நேர்மையாக செயல்படுவதற்கு பெயர் தான் தீரம்.            அது இங்கே முழுமையாக செயல் படுகிறது .

தொடரும்  அன்பன்  ராமன்

1 comment:

  1. Alias is pronounced as ஏலியாஸ் and not as அலையஸ்
    Facade is pronounced as Fasad not as Facade
    My English teacher taught as like this
    Venkataraman. K

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...