RENGAA RENGAA -49
ரெங்கா ரெங்கா -49
குறித்த நாளில் காலை 10.40 மணிக்கு ஆஜராயினர் ரயில்வே துறை வக்கீல்களும் அலுவலர்களும், "உயர் பதவி"யின் வக்கீல்களும்.
11.00 மணிக்கு தனது
இருக்கைக்கு வந்தார் நீதிபதி . கேஸ்
பதிவை 1 நிமிடம் பார்த்துவிட்டு உயர்
பதவியின் வக்கீலை -வாதத்தை துவங்க சொன்னார்.
உ ப .வ : நீண்ட நெடுங்காலமாக இருந்துவரும் எளிய முறையை மாற்றி அதிகப்படியான கெடுபிடிகளை உருவாக்கி பயனாளிகளுக்கு இடையூரினை உண்டாக்கி காலப்போக்கில் பணம் திரும்பப்பெறும் முறையை கொடூரமானதாக்கி , பயனாளிகள் பணம் பெரும் முறையை வெறுத்து ஒதுங்கிடச்செய்ய முதலாளித்துவ நோக்கில் புதிய நடைமுறையை அரங்கேற்றிடத்துடிக்கிறது..
ரயில்வே வக்கீல் : "வழக்குக்கு தொடர்பில்லா -இடையூறு ,முதலாளித்துவநோக்கு போன்ற சொற்களை பயன்படுத்தி ஏதோ க்ளாஸ் வார் போல மிகைப்படுத்துகின்றனர் எதிரணியினர். இது கண்டனத்துக்குரியது " என்றார்
உ ப .வ: ஏன் தொடர்பில்லை?
ர. வ : என்ன தொடர்பு என தெளிவுபடுத்துங்கள் என்று காட்டமாக வே கேட்டார்.
உ ப .வ : அதாவது அதாவது என்று தயங்கி , மீண்டும் அதாவது பயணித்த டிக்கட் இல்லாமல் பணம் பெறமுடியாது என்பது கொடூர நிபந்தனை.
நீதிபதி : என்ன கொடூரம் ?
உ ப .வ : பயணித்த டிக்கட்டை யாராவது காப்பாற்றி வைத்திருப்பார்களா?
நீதிபதி: பணம் claim செய்து வாங்கும் வரை பயணித்த டிக்கட்டை, பாதுகாப்பாக வைத்திருக்கத்தான் வேண்டும் , இது ஒரு கொடூரமா?
உ ப .வ ; அது மட்டுமல்ல மி லார்ட் .பயணம் முடித்து வெளியே போகும் போது பல ரயில் நிலையங்களில் வெளி வாயிலில் டிக்கட் கேட்டு வாங்கி வைத்துக்கொள்வார்கள் .அப்படி என்றால் பயணித்த டிக்கட் பயணி யி டம் இருக்காது அவர் பணத்தை மீ ட்டு வாங்கிட முடியாதே -அது தான் கொடூரம் .
நீதிபதி: இவ்வாறெனில் எதிராணியரின் கூற்றில் "கொடூரம்" என்பது சரிதானே என்றார் ரயில்வே வக்கிலைப்பார்த்து ;.
ர. வ: மி லார்ட் , புதிய மாறுதல் செயல்படும் போது அதற்குரிய மாற்றங்கள் செய்யப்படும்
நீதிபதி: உதாரணமாக ?
ர. வ: டிக்கட்டின் முக்கிய தகவல்களைக்குறித்துக்கொண்டு பயணித்த டிக்கட்டை பயணியிடம் திருப்பித்தரப்படும் .அதைக்கொண்டு உரிய அலுவலகத்தில் பணம் பெற்றுக்கொள்ளலாம்.
உ ப .வ : ஒரு டிக்கட் தகவலை குறித்துக்கொள்ளும் வரை , ரேஷன் கடையில் பொருள் வாங்குபவன் போல உயர்பதவி வகிப்பார் நிற்க வேண்டுமா. ? இது திட்டமிட்டு அவமானப்படுத்தும் செயல்., இது வேண்டவே வேண்டாம் பழைய முறையே நீடிக்க உத்தரவிடுங்கள் யுவர் ஆனர் ;
நீதிபதி : அப்படியா ? உணவு இடை வேளை க்குப்பின் 2.00 மணிக்கு வழக்கு தொடரு ம்.
பஞ்சாப கேசன்
ரயில்வே
வக்கீல்களிடம்
சொன்னார்
,மதியம்
என்னை
அழையுங்கள்
நமது
தேவை
என்ன
என்று
சரியான
கேஸ்
விளக்கங்கள்
மூலம்
நமது
நியாயத்தைப்புரிய
வைப்போம்
என்றார்
..ர
.வக்கீல்கள்
சரி
என்றனர்
மதியம் நீதிபதி இடம் ரயில்வே வக்கீல் விண்ணப்பித்தார் .அதில் ரயில்வே துறையின் சில முக்கிய சூழ்நிலைகளை விளக்க ஒரு அதிகாரியை ரயில்வே இந்தக்குழுவில் அனுப்பியுள்ளது. அவர் தர இருக்கும் புள்ளி விவரங்கள் கூர்ந்து பார்க்கப்படவேண்டும் , எனவே துறை சார்பில் பேச அவரை அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி அவரைப்பேசச்சொன்னார் .
பஞ்சாபகேசன் பேச்சை முறையான மரியாதை நடைமுறைகளோடு தொடங்கி ரயில்வே துறையின் நிலைப்பாடு பற்றி விளக்கினார். நடைமுறை மாற்றம் ஒரு அலங்கார மாற்றம் அல்ல. எங்களின் வாடிக்கையாளரை இன்னலுக்குட்படுத்துவதும் நோக்கம் அல்ல. மாறாக சில முறைகேடுகளைத்தவிர்க்க முயலுகிறோம்; எதிரணி வக்கீல் தொடர்ந்து பழைய முறையே நீடிக்கவேண்டும் , பழைய முறையே நீடிக்கவேண்டும் என்று குரல் எழுப்பிகிறாரே அல்லாமல் புதியமுறையில் ரயில்வே என்ன சாதிக்க விரும்புகிறது மற்றும் புதியமுறையில் எழும் இன்னல்களை களை வதெப்படி என்ற வாதங்களைத்தவிர்க்கிறார். பழைய முறை பழைய முறை என்ற அவரது நிலைப்பாட்டின் அடிப்படை ரகசியம் என்ன என்பதை விளக்குவாரா?
உ ப வ : அதாவது வந்து பழகிய முறை அதான் பழைய முறை சிறப்பானது , அதை அதை ஏன் மாற்ற வேண்டும் என்று ஏதோ கடனுக்கு பதிலளித்தார் . நீதிபதிக்கு ஒரு ஐயம் எழுந்தது ஏதோ ஊழலுக்கு பழைய முறை வசதியாக இருக்கிறது அதை மாற்றுவதற்கு எதிர்ப்பும் தடையும் ஏற்படுத்தப்பார்க்கிறார்கள். என்று.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment