Saturday, June 24, 2023

SAMIs COME TOGETHER-49

 SAMIs COME TOGETHER-49

சாமிகள் சங்கமம் -49

கௌரி இப்போது மேடத்துடன் மிக நெருக்கம் ;அதன் பயனாக அவளது PASSIVE LEARNING திறன் வெகுவாக பட்டை தீட்டப்பட்டுவிட்டது. ஆம் வகுப்பறையில் கற்பதில்உள்ளதைப்போல்  40% பார்த்துஉணர்ந்து கற்கிறாள்.ஆனால் இருவருமே இந்த நட்பின் மேன்மை கெடாமல் மிக கவனமாக தத்தம் எல்லையில் இருந்து பிறர் யாரும் புறணி பேசாதவாறு நடந்துகொள்கிறார்கள். மேலும் கௌர் பெரும்பாலும் ஆங்கிலச்சொல்லாடல் சரியாக அமையுமாறு பிரேமா சொல்லிக்கொடுத்த நுட்பங்களைப்பயன்படுத்தி சொல், பொருள் பிரயோகம், நினைவில் நிறுத்தல் என அனைத்தையும் வசப்படுத்திவிட்டாள் .அவளுக்கே ஆச்சரியம் தன்னால் இவ்வளவும் செய்ய முடிகிறதா. அப்படியென்றால்  முன்பெல்லாம் முட்டாளாகவல்லவோ இருந்திருக்கிறேன். பலரும் ஏன் ஆங்கிலத்தை தங்களுக்கு அப்பாற்பட்ட வித்தையாக நினைக்க , ப்ரேமாக்களும், மேடம் களும் மிருணாளினி களும் பேரா .கண்ணன் போன்றோரும் எப்படி வெளுத்துக்கட்டுகிறார்கள் ?ஏன் யாரும் யோசிப்பதில்லை என்று யோசித்தாள் . இன்னும் நல்ல சந்தர்ப்பம் வாய்க்கும் போது மேடத்திடம் விவாதித்தது புரிந்துகொள்ளலாம் என்று தீர்மானித்து, மேடம் நான் மிருணாளினி இடம் ஆங்கில உச்சரிப்பு கற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறேன் என்றாள். நல்லது கற்றுக்கொள் ஆனால் கவனம் அந்த உச்சரிப்பு மேடையில் காம்பியரிங் செய்யத்தான் பயன்படும் ; செமினார் , சிம்போஸியம், டிபேட் இவற்றில்            முதலிடம் பெற உதவாது. அப்படியென்றால் நீ இரண்டு வகை PHONETIC SKILLS வளர்த்துக்கொள்ள வேண்டி வரும் என்று தீவிர அறிவுரை சொன்னார் மேடம்  .      ஆங்கில உச்சரிப்பில் கீழ்த்திசை வகை மற்றும் ஐரோப்பிய வகை என இரண்டு உள்ளது. நாம் இயற்கையாக  அறிந்தவற்றையே [கீழ்த்திசை வகை]  முறையாக அழுத்தம் குறைவாக பயன் படுத்தினால் போதும். ஆனால் ஏதோ உயர்வகை கல்வி பெற்றிருப்பதாக காட்டிக்கொள்ள 'பாதிக்கப்பட்ட உச்சரிப்பு" எனும் AFFECTED TONE" நன்கு பயன்படும். உபயோகிக்காவிட்டாலும் அதை அறிந்து வைத்துக்கொண்டால் நல்லது என்றார் மேடம்.

ஐயோ இந்த மேடம் எதைக்கேட்டாலும் எளிதாக சொல்லிவிடுகிறார்களே -எப்படி தேடித்தேடி பயின்றிருப்பார்கள் என்று வியந்தாள் கௌரி.

நினைத்தபடியே மிருணாளினி இடம் உச்சரிப்பு பயிற்சி மேற்கொண்டாள்  கௌரி  மிருணாளினி சில உத்திகளை தெரிந்து கொள்ளச்சொல்லி ஆங்கிலத்தின் நளினம் அதன் உச்சரிப்பே. இந்திய மொழிகளைப்போல வாய் திறந்து பேச வேண்டியதில்லை. அதே போல A என்ற எழுத்தை அ என்ற அளவில் ஒலித்தால் கேட்பவர் மயங்குவர் . After என்பதை அ fta என்று "R " இல்லாதது போல் பேசினால் LANCASHIRE தான் என்று பொடிவைத்து சொன்னாள் .கௌரிக்கு வெட்கம் வந்தது . மேலும் சொன்னாள் "லண்டன்" என்பதை விட "லண்ட்ன் " நேர்த்தியாக இருக்கும். I have to என்பதை அ ஹ வ் டூ என்பது நளினம் . GOOD என்பதில் Gu D என்று சுருக்கினால் அழகு let us go என்பதை லெட்ஸ் gyo என்பார்கள் ஐரோப்பியர் ;நாமோ let அஸ் கோ என்று எல்லா வார்த்தைகளையும் தனித்த னியே ஒலிக்க வைத்து நம்மை ஓரியன்டல்ஸ் என்று அடையாளப்படுத்திவிடுவோம் Beautiful என்ற சொல்லை ஆங்கிலேயர் biyootiful என்றும் அமெரிக்கர் byoodiful என்றும் ஒலிப் பர். . அமெரிக்கர்கள் T யை D போல் WHAT EVER   என்பதை WHADEVE என்பார்கள். இவ்வாறு உச்சரிப்பின் உத்திகளை கௌரிக்கு சொல்லிக்கொடுத்தாள் . இது இன்னொரு பிரேமா தான் சும்மா பிச்சு உதறுது என்று மிருணாளினியை ஒரு முதிர்ந்த ஒலி ஆசானாக வணங்கி ஏற்றுக்கொண்டாள் கௌரி .

தொடரும்  அன்பன்  ராமன்

1 comment:

  1. Lieutenant ஐ pronounce பண்ணுவதுபோல

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...