Friday, June 23, 2023

RENGAA RENGAA -48

 RENGAA RENGAA -48

ரெங்கா ரெங்கா -48

நீங்கள் [ரயில்வே] புதிதாக கொண்டுவர இருக்கும் கட்டுப்பாடு குறித்த வரைமுறையை  ஏன் quash செய்யக் [தகர்க்க]கூடாது என்று விளக்கம் அளிக்கவும் 14 நாட்களுக்குள் என்று சென்னை நீதி மன்றம் விளக்கம் கோரி இருந்தது. ரயில்வே துறை யின் இந்த புதிய அணுகுமுறையை செயல் படுத்தக்கூடிய நீதி மன்ற உத்தரவைப்பெற்று தர வக்கீல்கள் இருக்கின்றனர்.    ஆனால் அரசினர் முயற் சி தோல்வியுறுவது அடிப்படை வாதங்களை சரியாக வைக்காமல் , புள்ளி விவரங்கள் தெளிவாகத்தராமல் ,மேலோட்டமாக செயல்படுவதால் என்பதை யாவரும் அறிந்ததே. எனவே பஞ்சாப கேசன் மேலதிகாரிகளுக்கு statistical data , curious  manipulative approach concealing the  intent of  beneficiaries என்பதை வாதிடும் போது வலுவான கேள்விகளை முன் வைத்தால் தான் திட்டமிட்டு மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் போக்கை தடுக்க முடியும். எனவே துறை யின் சார்பில்  கருத்துகளை எடுத்துவைக்க என்னையும் ரயில்வே சார்பில் அனுப்பி வையுங்கள் , திடீரென்று கிளப்பப்படும் எதிரணியார் வாதங்களை முறியடிக்க துறைசார்ந்த செயல்முறைகளை நன்கறிந்த ரயில்வே செயல் ஊழியர்களால் தான் எதிர்கொள்ளமுடியும் , எனவே வாதங்கள் நடைபெறும் முன் எனது கோரிக்கைக்கு ஒப்புதல் கிடைத்தால் இந்த குறிப்பிட்ட கேசில் , நமது நிலைப்பாடே சரி என்று நீதி துறையை ஏற்றுக்கொள்ள வைக்க இயலும் என்பதால் எனது கோரிக்கையை விரைவில் பரிசீலித்து ஒப்புதல் தர வேண்டுகிறேன்.

ரயில்வே துறைக்கு இது ஒரு prestige fight என்பதால் பஞ்சாபகேசனின் நிலைப்பாடு சரியாக இருக்கும் என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டு , பாஞ்சாப கேசன் வக்கீல்களுடன் இனைந்து வாதங்களுக்கு உதவட்டும் என்று தீர்மானித்து அவரையும் குழுவில் ஒரு உறுப்பினராக அங்கீகரித்து ஒப்புதல் அளித்து , மிக கவனமாக செயல்படும் படி வலியு றுத்தி இருந்தனர்.

பொதுவாகவே பஞ்சாபகேசன் எச்சரிக்கை உணர்வு மிகுந்தவர் , நேர்மை தவறாதவர்.இது போன்ற பொறுப்புகளைக்கையாள என்னெவெல்லாம் தேவைப்படும் என்பதை மிகத்துல்யமாக கணித்து வைத்துக்கொண்டு சுமார் மூன்று தடவைக்கு மேல் மாடசாமியிடம் ஆழ்ந்த கருத்துப்பரிமாற்றம் செய்து வாதத்தில் இண்டு இடுக்கு இல்லாமால் மிகச்சிறப்பாகத்தயார் செய்து கொண்டு ஆயத்தமானார்.

குறித்தநாளில் காலை 11.00 மணிக்கு வழக்கு துவங்கும் என அறிவித்திருந்தனர் .11.20க்கு மேல் மதியம் 2.30 க்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாயிற்று காரணம் வழக்குத்தொடுத்த "உயர் பதிவின்" சார்பில் எவரும் வந்து சேரவில்லை ,flight தாமதம் என்று தகவல். . நாளை மறுநாள் பேப்பரில் flight களின் அவலம் பற்றி கட்டுரை எதிர் பார்க்கலாம் என்று  வக்கீல்களின் காதுபடவே பேசினார் . கே.

ஒருவழியாக மாலை 3.00  மணிக்கு வாதம் துவங்கியது

நீதிபதி : ரயில்வே துறை புதிய நடைமுறை தேவை என்று ஏன்   நினைக்கிறது?

ரயில்வே வக்கீல் : ஒரு சிலர் அரசாங்க /பொது நிறுவன சலுகைகளை தவறாகப்பயன்படுத்தி பணம் சேர்க்கிறார்கள் .அது பொதுப்பணகையாடலுக்கு ஒப்பானது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவே இப்போதுள்ள குறைபாடான முறையை மாற்றி கட்டுக்கோப்பான நடை முறைக்கு மாற நினைக்கிறது ரயில்வே நிர்வாகம்.

நீதிபதி :ஏன் முதலிலே யே வலுவான சட்ட திட்டங்களை உருவாக்கி இருக்கலாமே ?

. வக்கீல் : திருடனின் நுணுக்கங்கள் தெரிந்தபிறகு தான் நாம் சட்டத்தையே கூர்ந்து நோக்குகிறோம்

நீதி :அதென்னவோ சரிதான்

 உயர்பதவியின்  வக்கீல்  : அப்ஜெக்ஷன் பயனாளியை திருடன் என குறிப்பிடுவதற்கு

. வக்கீல்: சட்டத்தின் சந்து பொந்துகளை பயன்படுத்தி பணம் ஈட்டுவது WHITE COLLAR ROBBERY தான் , வேறென்ன?

நீதி "திருட்டு" என்பதை பின்னர் விளக்கம் கேட்கும் போது தெளிவுபடுத்துங்கள். என ரயில் துறையினருக்கு அறிவுறுத்திவிட்டு

உயர் பதவியின் வக்கீலிடம்:   உங்கள் தரப்பு வாதம் என்ன ?

உயர்பதவியின்  வக்கீல்  தற்போதுள்ள நடை முறை பயனாளிகளுக்கு எளிதாக இருக்கிறது அதை ஏன் மாற்றவேண்டும் ?

நீதி     வர இருக்கும் நடை முறை எளிதாக இருக்காது என்று உங்களுக்கு எப்படி தெரியும்.?

உயர்பதவியின்  வக்கீல்  இதோ பாருங்கள் என்று PROPOSED  MODIFICATION படி இனிமேல் பயணித்த டிக்கட் சமர்ப்பித்தால் மட்டுமே REIMBURSEMENT மற்றும் உரிய அலவன்ஸ் பெறமுடியும் , டிக்கட் PHOTOCOPY /XEROX அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்தால் ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல என்று அறிவிப்பு செய்திருக்கிறார்கள் . இது மிகுந்த இடையூறுகளை பயனாளிகளுக்கு ஏற்படுத்தும் ,இதை நீதிபதி அவர்கள் உடைத்தெறிய வேண்டும் என்று உரத்த குரலில் அலறினார்.

நீதி நீங்கள் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறீர்களா என்று ரயில்வே வக்கீல் இடம் கேட்டுக்கொண்டே கடிகாரத்தை ப்பார்த்தார் மணி 4.00 .

ரயில்வேவக்கீல்: ஆம் உடைத்தெறியவேண்டும் திருட்டுத்தனமாக நிர்வாகத்தினை ஏமாற்றும் போக்குகளை அதற்கெனவே இந்த திருத்தம் பரிந்துரைக்கப்படுகிறது

நீதி: இருவர் வாதங்களும் உட்பொருள் கொண்டுள்ளன.

மீண்டும்   இந்த வழக்கு நாளை மறுநாள் காலை 11.00 மணிக்கு துவங்கும் என்று ரெஜிஸ்டராரிடம் தெரிவித்து ADJOURNMENT எதுவும் யாரும் கோர வேண்டாம் மீறினால் EX-PARTE தீர்ப்பு வழங்க வேண்டி வரும் .இப்போது கோர்ட் கலையலாம் என்று எழுந்து விடை பெற்றார்.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...