Thursday, June 22, 2023

SAMIs COME TOGETHER -48

 SAMIs COME TOGETHER -48

சாமிகள் சங்கமம் -48

பல்கலையில் பயில்வதும் , உயர் சிந்தனைகளுடன் நட்புவட்டத்தில் பழகுவதும் செயல்பாடுகளில் வேகமும் விவேகமும் பின்னிப்பிணைந்து போட்டியிடும் காலகட்டத்தில் வெகுவாக உயர்ந்து விட்டிருக்கிறாள் கௌரி. வகுப்பு அன்பர்களுக்கும் , துறை ஆசான்களுக்கும், இதர ஊழியர்களுக்கும் கௌரி ஒரு பெருமைகொள்ள வைக்கும் நட்சத்திரம் எனில் மிகை அன்று . ஒரு நாள் காண்டீனில் சாப்பிட வேண்டிய சூழல் ஆம் தாயார் தலை சுற்றல் வந்து  ஓய்வில் இருந்தார் ;எனவே முன்பின் அறிந்திராத காண்டீன் நோக்கி வகுப்பு தோழி உமாவுடன் செல்ல, திடீரென்று நெடிதுயர்ந்த பெண் கௌரீ என்று உரத்தகுரலில் அழைத்துக்கொண்டு அவளைக்கட்டிப்பிடித்தாள் . மிக அருகில் அண்ணாந்து பார்த்தால் ...மிருணாளினி . ஒஹ் இது ஆங்கிலப்பறவை ஆயிற்றே என்று பளிச்சென்று ஆங்கிலத்தில் நுழைந்தாள் கௌரி. Sorry couldn't  fix you without those parrot rings என்றாள் கௌரி.  மிருணாளினி குழப்பத்தில் விழித்தாள்.       I MEANT THOSE MASSIVE EAR RINGS DANGLING AROUND என்றதும் மிருணாளினி  அதிர்ந்தாள் .ஐயோ என்ன இப்பிடி தாக்குறீங்க என்றாள் மிருணாளினி

 உங்களுக்கு தமிழ் தெரியுமா ?- கௌரி. உடனே மிருணாளினி. “ஏன் தெரியாம , நான் புதுக்கோட்டைக்காரி தானேஎன்றாள்      I thought  you are from Lancashire என்று மெல்ல வம்புக்கிழுத்தாள். சும்மா கிண்டல் பண்ணாதீங்க ஏதோ காம்பியர் பண்ணு னு சுபி மேடம் சொன்னாங்க செஞ்சேன் . அதுக்காக --      LANCASHIRE, YORKSHIRE    அது  இதுனு கிண்டல் பண்ணாதீங்க                                                                "   JUST IN A LIGHTER VEIN  என்றாள் கௌரி .                                                                                                                       மிருணாளினி “எனக்கு அவங்கள [சுபி மேடம்] ரொம்ப பிடிக்கும்” ; TALENT கப்புனு பிடிக்கறதுல  அவங்கள  மாதிரி நான் யாரையும் பாத்ததே இல்ல . ஒரே ஒரு நாள் நான் பஸ் ஸ்டாப் எங்க HOD சார் கூட பேசிக்கிட்டிருந்தப்ப தான் என்னை மோத மொதல்ல பாத்தாங்க. அந்த INAUGURAL க்கு ரெண்டு நாள் முன்னாடி நீ காம்பியர் பண்ணு  னு சொன்னாங்க , நான் எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னேன். சொன்னா   நம்ப மாட்டீங்க      நான்  அப்பிடியே வெலவெலத்துட்டேன்.     அம்மாடியோவ்            என்ன சொன்னாங்க தெரியுமா?                                            " அடியே என்னடி ரொம்பதான் பேசிக்கிட்டிருக்க , எனக்கு ஒன்ன  தெரியாது னு நெனச்சியா ? நல்லா தெரியும் , தகுதியான வங்களைதான் கூப்புடுவேன்..வர OPPORTUNITY          யூ ஸ் பண்ணிக்கோ -அப்புறம் பாருன்னாங்க . நெஜம்மாவே இப்ப காம்பஸ் நெறைய பேர் எனக்குஹை” னு வணக்கம் சொல்றாங்க . நானும் யோசிச்சு யோசிச்சு பாக்கிறேன் எப்பிடி என்ன LOCATE பண்ணாங்கன்னு புரியவே இல்லை. இப்ப நான் அவங்களுக்கு பயங்கர FAN ஊஹூம் அதுகூட இல்ல அடிமையே தான்என்றாள் மிருணாளினி.

 கௌரி திட்டம் போட்டாள் இந்த "உழ் ", "இழ்"  "'சழ் " இதெல்லாம் நைசா இவங்ககிட்ட கத்துக்க வேண்டியது தான் -ஐயா என்று முடிவெடுத்தாள் சரியான சூழலும் ,வளமான ஆசிரியர் பட்டாளமும் கிட்டினால் கற்பது ஒன்றும் கலையோ கவலையோ இல்லை. அது ஒரு இயல்பான பொழுதுபோக்குபோல் வலியோ வேதனையோ இல்லாத விளையாட்டு போல் அமைந்து விடும். அது போன்ற அமைப்புகள் தான் இன்றளவும் ஒரு சில மாணவர்களையாவது அவ்வப்போது ஏற்றம் பெறச்செய்து வருகிறது. அதன் ஒட்டு மொத்தப்பெயர் தான் கொடுப்பினை. கௌரிக்கு அது நிறையவே வாய்த்திருக்கிறது மாரியம்மன் அருளால் .

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...