RENGAA RENGAA -47
ரெங்கா ரெங்கா -47
ஆமாம் ஏதோ ஒரு மூட்டையை குண்டூருக்கு க ரெ விடம் கொடுத்து அனுப்பினாயே என்றார் ராமசாமி .அது ராஜாங்க ரகசியம் இப்போதைக்கு சொல்லக்கூடாது பொறுத்திருந்து பார். என்றார் மா சா.
ஆமாம் இந்த ஓட்டை ரயில்வே ல ராஜாங்க ரகசியமாம் போடா என்றார் ரா சா. சரி ஓட்டையா இருந்தா என்ன நம்ம சோறு இங்கதான் இருக்கு ஓட்டையோ கீட்டையோ நமக்கு இதாண்டா கோட்டை ஹஹ்ஹா என்றார் மாசா. போச்சு கேப்ரியல் சிரிப்பு உனக்கும் வந்தாச்சு. சரி நீ சொல்லாட்டி போ நானே கண்டுபிடிச்சுக்கறேன் என்றார் ரா சா. .அவர் க ரெ விடம் கேட்டு வாங்கிவிடலாம் என்று நினைத்தார் .பாவம் க ரெ அவனால் என்ன சொல்ல முடியும்.?
இது ஒரு புறம் இருக்க அலமேலுவும், காமாட்சியும் சஸ்பெண்டட் -10 days for DERELICTION OF DUTY என்று கொட்டை எழுத்தில் செக்ஷன் வாசலில் நோட்டீஸ் வைத்துவிட்டார் ஜெயப்ரகாஷ். . நல்லாவேணும் இந்த சோம்பேறிக்கழுதைகளுக்கு என்று ஊழியர்கள் அகமகிழ்ந்தனர் . டேய் நான் அன்னிக்கே சொன்னேன் பார் இப்ப சஸ்பெண்ட் பண்ணிவிட்டார் JP என்றார் ராமசாமி,மாடசாமியிடம்.. வேறு ஒரு செக்ஷனில் இருந்து ஜோதிமணி என்னும் எழுத்தர் JP செக்ஷனுக்கு விசேஷமாக அழைக்கப்பட்டு அவர் [24] மூன்றே நாட்களில் மாடசாமி யின் ஏப்ரல் -மே டைரி குறிப்புகளை தொகுத்து அறிக்கை தயாரித்துக்கொடுத்துவிட்டார்.
மேலும்
ஜோதிமணி, மாடசாமியை
நேரில் பார்த்து சார் இவ்வளவு நீட்டா
டைரி பண்ணிருக்கீங்க பின்ன ஏன் சார்
ரிப் போர்ட் தயாரிக்க திணற
றாங்க ஒண்ணுமே புரியாம வேளைக்கு
வேலைக்கு வந்திடறாங்க இத்தனைக்கும் அவங்கள்லாம் சீனியர் என்று பெருமூச்சு
விட்டார் ஜோதிமணி..இன்னொரு க ரெ தான்
ஜோதிமணி என்று மா சா
நினைத்துக்கொண்டார். 11ம் நாள் ஞாயிறு எனவே 12ம் நாள் திங்கள் அன்று வேலைக்கு வந்தனர்
காமாட்சியும் அலமேலுவும் ஏதோ கல்யாண வீட்டுக்கு வந்த விருந்தினர் போல , மை , பை flask சகிதம்.. எங்கே வந்தீங்க என்றார் ஜெயப்ரகாஷ் . இருவரும் விழித்தனர்
வேலையே போய்விட்டதோ என்று.
உங்களுக்கு
TRANSFER போட்டாச்சு. அலமேலுக்குபொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியில் . RECORD
MAINTENANCE ,காமாட்சிக்கு ZTS [ZONAL TRAINING SCHOOL] ல அட்டெண்டன்ஸ் எழுதி டெய்லி
ரிப்போர்டிங் . ENGINEER Mr RODRIGUEZ தான் ப்ரின்ஸிபல் போங்க நல்லா பெண்டை நிமித்து நிமித்து னு நிமுத்துவாரு .10.மணி ஆனாலும் வேலை
முடிக்காம வீட்டுக்கு போக முடியாது அல்லது திரும்ப வந்தா வேலையே இருக்காது . S .Rly லியே பயங்கர பிரின்சிபால்
, உங்களுக்கு சரியான இடம் .வீடா வேலையா னு முடிவு பண்ணிக்கிட்டு போங்க என்று துரத்தினார்
ஜெயப்ரகாஷ்.
காமாட்சி Rodriguez இடம் மாட்டிக்கொண்டு படாத பாடு பட்டாள் . புதுக்கோட்டைக்கு மாற்றல் கேட்டு எழுதிப்போட்டாள் . புதுக்கோட்டையில் ரயிலுக்கு மணி அடிக்கும் அட்டெண்டர் வேலை தான் இருக்கிறது. கிளெர்க் வேலை இல்லை என்று பதில் வந்தது . ஐயோ ஐயோ என்று முனகிக்கொண்டே 8 மணி வரை வேலை செய்தாள் . தொழிற்சங்க ஆதரவைத். தேடினாள் . தொழிற்சங்கம் உதவிக்கு வருமுன் இவள் எந்த வேலைக்கும் லாயக்கு இல்லை எனவே மாற்றல் செய்ய RODRIGUEZ ஏற்பாடு செய்துவிட்டார். இனி வேலை கோவில்பட்டி புக்கிங் ஆபிஸ் அக்கவுன்ட்ஸ் பிரிவில் -மண்டை வெடிக்கும்-- வேலையினாலும் வெயிலினாலும்
அங்கே
அலமேலுவுக்கு எச்சரிக்கை விடுத்தார் டாக்டர்.கோதண்டம் . சுறுசுறுப்பாக
வேலை செய்யாவிட்டால் , தூக்க மருந்து கொடுத்து
,இங்கே வேலை நேரத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறாள்
என்று போட்டோ எடுத்து மொத்தமாக
வேலையை காலி செய்துவிடுகிறேன் என்று
மிரட்டினார். ஒழுங்காக JP அலுவலகத்தில் வேலை
செய்யாமல் இப்படி மாட்டிக்கொண்டேனே
என்று தனித்தனியே வருந்தினர்.
ரா
சா, க
ரெ வுக்கு போன் செய்து
அந்த பாக்கெட் கொடுத்தானே மாடசாமி அதில் என்ன
இருக்கு? என்றார். ஐயோ எனக்கு ஒன்றும்
தெரியாது சார் ஆனா ரொம்ப
முக்கியமான தஸ்தாவேஜு ,எனவே மாடசாமி சார்
கிட்ட முதல் ல குடுத்துட்டு
தான் வீட்டுக்கு போகலாம் என்று ப
கே சார் சொல்லி அனுப்பினார்
அதே போல மாசா வும்
நேர பாகே விடம் கொடு
என்று பாக்கெட் தந்தார் அப்பிடியே கொடுத்துட்டேன்
எனக்கு வேற எதுவும் தெரியாது
என்று பயந்து கொண்டே சொன்னான்
க ரெ . முதல்
முறையாக ஒரு தகவலை ராமசாமியால்
கண்டு பிடிக்க முடியவில்லை –அதுதான் ப
கே, மா
சா, கடைப்பிடிக்கும்
கட்டுப்பாடு
தொடரும் அன்பன்
ராமன்
No comments:
Post a Comment