Tuesday, June 20, 2023

SAMIs COME TOGETHER- 47

 SAMIs COME TOGETHER- 47

சாமிகள் சங்கமம் -47

குழப்பிமில்லாமல் கற்றுக்கொள்ள என்ன வழி ? சொல்லித்தரமுடியுமா ?என அனைவர் சார்பிலும் கேட்டாள் கௌரி

.டாக்டர் .கண்ணன் “இதை குறித்துக்கொள்ளுங்கள்”.

1. ஒவ்வொரு வாதமும் நமக்கு [மாணவர்களுக்கு] ஆசிரியர்க்கல்ல . ஆசிரியர் பேசும் போது நீங்கள் வேறு உலகில் நீந்திக்கொண்டிருக்கிறீர்கள்..காது கொடுத்துக்கேளுங்கள் .

2 நன்கு தெளிவுபடும் வரை தொடர்ந்து விளக்கம் கேளுங்கள் -நிச்சயம் விடை கிடைக்கும் .விடையை உங்களுக்கு புரிகின்ற மாதிரி எழுதி வைத்துக்கொள்ளுங்கள் .நீங்கள் எழுதியதை நீங்களே படியுங்கள் , ஐயோ என்ன எழுதியிருக்கிறேன் ஒன்னும் புரியலையே எப்பிடி பரீட்சை எழுதுவேன் என்று புலம்புவீர்கள்.. அன்றன்றேபடிக்கும் போது ,திருத்தி எழுதிக்கொள்வது எளிதாகும். இதே பழக்கம் தொடர்ந்தால் 'சார் நோட்ஸ் தாங்க " என்ற கெஞ்சலுக்கு வேலையே இல்லை.

எவ்வளவு தெரிந்த சொல் ஆயினும் டிக்ஷ்னரி யில் உள்ள ஸ்பெல்லிங்கை பார்த்துப்பார்த்து மனதில் இறுத்திக்கொள்ளுங்கள் .

இதைவிடுத்து ப்ரொபஸர் மூக்கு படம் வரைந்து பாகம் குறித்து வகுப்பினுள் அந்தக்காகிதம் வலம் வருகிறது. இன்னொருவர் அவன் மண்டை பாரீர் என்று கேலிச்சித்திரம் தீட்டுகிறார்.. இந்த இடைவெளியில், சொல், பொருள், தாக்கம் என்னும் connotation போன்ற அற்புத தகவல்கள் பரிமாறப்படுவதைக்கூட கவனிப்பதில்லை.

இதையெல்லாம் பேராசிரியர்கள் கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார்களே என்றாள்  சுகன்யா

.MAY I INTERVENE ? என்று அனுமதி கோரி எழுந்து நின்றார் சுபத்திரா .      YOU CAN -VERY MUCH என்றார் டாக்டர் கண்ணன் .இந்தப்பேராசிரியர்கள் எப்படி இயல்பாக முகம் கோணாதபடி இடை மறிக்கிறார்கள்  என்று மாணவர் வியக்க ,சுபத்திரா விளக்கினார். We are least bothered of your efforts in making  caricature of we --teachers ;for we have ourselves done all these to our teachers and teachers can never escape the ignominy of ridicule from lesser mortals and if it helps their trivial pleasure why block it ? Soon enough they would realize the futility of these ephemeral distractions.and also recognize that none can ascend scales without the entity called teacher. So, as teachers our prime concern is to  give the very best to our wards and we want them to make the best of their tenure on the campus , because later on [you] they cannot join us even if they genuinely desire so. As Dr. Kannan has elegantly briefed, adhere to learning strategies avoiding the age-old practice of ‘learning by heart’ rather strive to learn by mind , making the very best of every session of learning. Good luck. She advised wards to avail of the fine tips from all the faculty and thoroughly equip selves in all the facets of the language. சூட்டோடு சூடாக      மேடத்திடம் எந்த முயற்சியும் செய்யாத மாணவர்கள் பட்டியலையும் தந்துவிட்டார். டாக்டர் .கண்ணன்     இப்படி உயிரோட்டமான விவாதத்திற்கு ப்பிறகு , பல்கலையில் பயில, நேரடி விவாதத்தில் இறங்குவது நல்ல பயன் தரும் என கிட்டத்தட்ட அனைவரும் புரிந்து கொண்டனர். நேரடி விவாதத்தில் எப்படி இறங்குவது என சிலர் தயங்கியபோது சுகன்யா சொன்னாள் .முக்கிய பகுதிகளை நாமே படித்துக்கொண்டு வந்தால் விவாதிக்க முடியும்“. லைப்ரரியை நன்கு பயன்படுத்திக்கொண்டால் பல வித கருத்துகளையும்  கருத்து மோதல்களையும் தெரிந்து கொள்ளலாம். லைப்ரரி நேரத்தை பயன் படுத்தினால் நல்ல புதிய புத்தகங்களைக்கூட எடுத்தது படிக்கலாம் என்று தேர்ந்த பேராசிரியை போல பேசினாள் கௌரிகல்யாணி. [சும்மாவா மெரிட் ஸ்காலர்ஷிப் வந்திருக்குது கௌரிக்கு] என்று நண்பர்கள் சிலாகித்தனர்.

சுபத்திரா உள்ளூர மகிழ்ந்தார் .இந்த முதல் ஆண்டு மாணவர்கள் முறையாகக்கற்க விரும்புகிறார்கள் .ஒரு 40 நாள் போகட்டும் சூப்பர் ட்ரெயினிங்கை போட்டுற வேண்டியது தான். பெர்மிஷன் கிடைக்கணும் மாரியம்மா தான் உதவணு ம் என்று சமயபுரம் நோக்கி கண் மூடி நின்று கை  கூப்பி மானசீகமாக வேண்டினாள்டாக்டர் சுபத்திரா .

தொடரும் அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...