Monday, June 19, 2023

Rengaa Rengaa -46

 Rengaa Rengaa -46

ரெங்கா ரெங்கா -46

ஸ்ரீரங்கம் SBI ல் ஒரு E or S கணக்குதுவங்கினான் க. ரெ . தாயாரை 2 ம் பெயராக இணைத்து.  வாயைத்திறந்தால் உதை பிய்த்துவிடுவான் என்ற பயம் பீடிக்க க ரெ காட்டிய இடத்தில் கையெழுத்திட்டாள் ரெங்கம்மா . ஒரு 4000/- ரூபாயை அக்கவுண்டில் வைத்துவிட்டு தாயிடம் 2000/- ரூ தந்தான். இவ்வளவு தானா என்றாள் தாய். நீ தான் 2 பேருக்கு 2400/- கிடைத்தால் போதும் என்றாயே , உன் ஒருத்தருக்கு 2000/- ரூபாய் எதேஷ்டம் என்றான். பேசினால் அறைந்து விடுவான் என்று நடுங்கிகிடந்தாள் தாய். பாஸ்புக் நகல் ஒன்றை XEROX செய்து கொண்டு பாஸ் புக்கை ரெங்கம்மாவிடம் தந்தான். இதை வைத்து என்ன செய்ய ? எனக்கு ஒன்றும் தெரியாதே என்றாள் கிழவி. தெரியாதா அப்பாடா நல்லது , நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் பாஸ், புக் பத்திரம் என்று கவனமாக இருக்கும்படி வலியுறுத்தினான் க. ரெ  மீண்டும் அம்மாவிடம் யாரையும் இளக்காரமாக பேசாதே என்று கட்டளையிட்டு கிழவி நடுங்கிக்கிடக்கிறாள் . இரவு ரயிலில் மாடசாமி நன்கு PACK செய்யப்பட கவரைத்தந்து மிக கவனமாக பஞ்சாபகேசன் சாரிடம் மாத்திரம் கொடுக்க வலியுறுத்தி , வாழ்த்தி விடை பெற்றார் குறித்த நேரத்தில் குண்டூர் வந்தது. ரூமில் பெட்டியை மூலையில் கிடத்திவிட்டு அதி விரைவாக ஓடி மாடசாமி சார் கொடுத்த PACKக்கினை ப கே இடம் ஒப்படைத்து விட்டு ரூமுக்கு விரைந்து குளித்தான். சுப்பிரமணி சூடான சாப்பாடுடன் ஒரு மணிக்கு வந்தான். இருவரும் மதிய உணவை ருசித்து உண்டனர். க ரெ வுக்கு 2.30 க்கு வகுப்பு துவங்கியது.

கஸ்தூரி ரெங்கன் கொண்டுவந்த கவர் மிக நேர்த்தியாக PACK செய்யப்பட்டிருந்தது தன் உள்ளிருக்கும் எரிமலையை அடக்கியிருந்தது. தனது துறையில் பாதுகாப்பாக தாழிட்டுக்கொண்டு புகைக்கண்ணாடி [SMOKED GLASS] பகுதிக்குள் அமர்ந்து நுணுக்கமாக கவனிக்கத்துவங்கிய பஞ்சாபகேசன் ஆடிப்போய் விட்டார் மாடசாமியின் அயராத உழைப்பின் ஆழத்தின் தீவிரத்தை எண்ணி. ஒரு தனி நபர் நிகழ்த்தியிருந்த COMPLEX ஊழலின் குரல் வளையை பாம்பு பிடிப்பவன் பாம்பின் குரல் வளையை இறுகப்பற்றுவது போல "நச்" என்று கிடுக்கிப்ப்பிடி போட்டு அழுத்திப்பிடித்தது போல் அமுக்கி முடக்கி விட்டிருந்தார் மாடசாமி.    செயல் முறை :     1ஒரு டிக் கட்டின் முதல் பதிவு, 2 ரத்து [அதற்கு முன்போ, பின்போ ] 3 கீழ் வகுப்பில் புதுப்பதிவு ,இவற்றிற்கான 4 ORIGINAL APPLICATION PHOTOCOPY , அனைத்து 5 விலாசம், 6 நபர் , 7வயது, 8 போன் நம்பர் எல்லாம் ஒருவரின் தகவலே என்பதை பல பழைய படிவங்களிலிருந்து திரட்டி முறையாகத்தொகுத்து , 9 இதுதான் ஊழலின் முழு சித்திரம் என்பதை எவ்வித ஐயமும் எழுப்ப முடியாத படி வெகு சிறப்பாகத்தொகுத்து , ஆங்காங்கே ஒரு தேர்ந்த TTE ன் கைவண்ணம் எனும்படி 10 துல்லியமான குறிப்பு எழுதி "உயர் பதவி" ஆடியிருக்கும் ஆட்டம் என்ன என்பதை குழந்தைக்கும் புரியும் படி flow chart முறையில் நேர்த்தியாக விளக்கியிருந்தார்மாடசாமி.

FLOW CHART,  2 தினங்கள் முன் துல்லியமாக வடிவமைக்கப்பட்டது -உபாயம் மற்றும் உபயம் சாஃஷாத் கம்ப்யூட்டர் சாரதா வே தான். காதும் காதும் வைத்தாற்போல் சுமார் 7 மணி நேர அவகாசத்தில் வெகு நேர்த்தியாக வடிவமைத்து வண்ணப்பிரதி எடுத்துக்கொடுத்துவிட்டாள். ஒரு எச்சரிக்கையாக Pen drive ஒன்றில் அனைத்து தகவல்களையும் பதிவிட்டு ஒரு சிறு NAIL CUTTER போல் மாடசாமியிட ம் கொடுத்தாள் சாரதா .

மாடசாமிஇதை எப்படி கையாள் வது என்று தெரியாதே” என்றார் மா சா. இது மிக சிறந்த ஆவண காப்பு முறை. எந்த மீட்டிங்கிலும் மிக எளிதாக அனைத்து தகவல்களையும் சிறப்பாக SCREEN PROJECTION செய்யலாம் எந்த கம்ப்யூட்டர் நபரும் எளிதாக உதவுவார் என்று சொல்லிவிட்டுசார் நீங்க கௌரியின் மாமா தானே”? என்றாள்  சாரதா .  நடுங்கிப்போனார் மாடசாமி .எப்பிடி என்று மாசா கேட்க நான் ஈசியா புரிஞ்சுக்கிட்டேன் என்று சொல்ல இது ராமசாமிகூட்டத்தை சேர்ந்தது போல என்று நினைத்துக்கொண்டு பணம் செலுத்திவிட்டு விடைபெற்றார் மாடசாமி.

எவ்வளவு தகவல்களை தொகுத்திருக்கார் மனுஷன் என்று பெருமூச்செறிந்தாள்சாரதா.   தகவல் தெளிவும், வடிவமைப்பும், பஞ்சாபகேசன் சாரை கவர்ந்ததுடன், மாடசாமி ஒரு அசகாயசூரன் -எங்கோ இருக்க வேண்டியவன் இங்கே உழலுகிறான் என்று அனுதாபம் கொண்டார்  மாசா மீது.                                                     இந்த விவரங்களைத்திரட்ட அந்தந்த தேதிக்குரிய பழைய காகிதக்கட்டுகளை மிக கவனமாக எடுத்து , பிரித்து நகல் எடுத்து தனி ஒரு தொகுப்பாக்கி எல்லா தகவலுக்கும் உரிய விவரங்கள் பலமுறை சரிபார்க்கப்பட்டு தொகுக்கப்பட வேண்டும். இது பழைய ஆவண க்காப்பு  கிடங்கை தோண்டி துருவி செய்வது -இமாலய முயற்சி. .மேலும் மாடசாமி இதைதொகுக்கிறார் என்னும் தகவலே பலருக்கும் எச்சரிக்கை மணி யை ஒலிக்கச்செய்யும்.

இதை நன்குணர்ந்த கே,  மாடசாமி குறித்து கொண்ட உவகையும் பெருமையும் முற்றிலும் நியாயமானதே.

இவற்றிற்கெல்லாம் அசைக்கமுடியாத ஆதாரமாக தொடர்ந்து ரயில் டிக்கட் XEROX-- I AC இல் பயணித்தாற்போல் காண்பித்து பெருந்தொகையை அந்தஉயர் பதவி நபர்” அவ்வப்போது ஈட்டியிருந்ததை -தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் [RTI ACT] வாயிலாக முற்றிலுமாக த்திரட்டிவிட்டார் பஞ்சாபகேசன் சார். ஊழலுக்கு எதிரான போர் குருஷேத்திரத்திற்கு சமமானது, ஆழ்ந்த ஞானமும் , துல்லியமான போர்முறைகளும் மயான அமைதியும் ஒருங்கிணைந்தால்தான் களத்தில் இறங்க முடியும். நம்மவரிலும், நல்லவர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று .

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...