Sunday, June 18, 2023

SAMIs COME TOGETHER- 46

SAMIs COME TOGETHER- 46

சாமிகள் சங்கமம் -46

வகுப்புகள் சீராகப்போய்க்கொண்டிருந்த நிலையில் இவர்களுக்கு ஆங்கில தெளிவு அவசியம் என்று மேடம் ஒரு 4 நாட்களுக்கு சில குறிப்பிட்ட பேராசிரியர்களை தனது துறைக்கு வரவழைத்து சில  சிறப்பு பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தார் அவை சொல்லாட்சி [vocabulary ] பயன்பாடு [usage] உச்சரிப்பு [pronunciation ] மற்றும் ஒலி ஆளுமை [modulation ] போன்ற அதி அத்யாவசிய மொழிப்பயிற்சி. தொடர்பானவை 

வகுப்பு நடத்திக்கொண்டிருந்த பேராசிரியர் கண்ணன் "PALINDROME ' பற்றிக்கேட்க, கௌரி உள்பட அனைவரும் திருதராட்டிரர்கள் போல வெவ்வேறு கோணங்களில் விழித்தனர். சரி நாளை அறிந்து வாருங்கள் என்று கூறிவிட்டார் . மறுமுறை வந்ததும் மறவாமல் டாக்டர் கண்ணன் PALINDROME குறித்து கேட்க 4 பேர் மட்டும் தங்கள் தேடுதலில் கிடைத்த விவரங்களை தங்களுக்கு புரிந்திருந்த வகையில் விளக்கினர். அவர்களில் கௌரி முதலிடம் ஏனெனில் அவள் விளக்கம், மாதிரி வாசகம், சொல் என பல வகைகளை சேகரித்து வந்திருந்தாள். ஏனைய மூவரில் இருவர் தகுதி ஸ்காலர்ஷிப் பெறும் சுகன்யா , அகிலா மற்றும் உதவித்தொகை கிடைக்காத   பாலன்.அனைவரையும் டாக்டர் கண்ணன் பாராட்டி , எதுவுமே முயற்சி செய்யாமல் இருந்தவர்களை கோபித்துக்கொண்டுஇருந்தபோது அந்த வழியே சென்ற மேடம் உள்ளே வரலாமா என்று அனுமதி பெற்று வகுப்பில் அமர்ந்து கொண்டார். ஆகட்டும் உங்கள் விவாதம் தொடங்கட்டும் என்றார் ஒவ்வொருவராக பேச அழைத்தார் டாக்டர் கண்ணன். முதலில் அகிலா ; அவள் சொன்னாள் NUN , MOM அடுத்து ஆனந்தன் :TACOCAT ,, பாலன்:NOON .

கௌரி: PALINDROME may be a word /verse /statement that reads the same forward or  backward  example :MADAM IN EDEN I'M  ADAM .                                  Dr. Kannan “Sit on a potato pan Otis         Saying excuse me, மேடம் குறுக்கிட்டார் “ WHY CRACK YOUR HEADS” ? Why not "MALAYALAM” - a simple palindrome?  Also another Example: Able was I ere I saw Elba

மேடத்தின்விரைவான குறுக்கீடுகண்டுஅனைவரும் நாக்கை க்கடித்துக்     கொண்டு கீழே குனிந்தபடி நாம் எதையும் சரியாகக் கற்றுக்கொள்ளாமல் பட்டதாரி என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமே என்று சற்றே நொந்தனர். டாக்டர் கண்ணன் சொன்னார் "நீங்கள் கற்றுக்கொள்வதை நினைவுபடுத்திக்கொள்ளாமலே "உருப்போட்டுவிடலாம் 'என்று நம்புகிறீர்கள் . உருப்போடலாம் ஆனால் உறுப்படமுடியாது. பேராசிரியரின் இந்த விளக்கம் கௌரிக்கு பிரேமா வை நினைவுபடுத்தியது .மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தாள் .சரியாக தகவல்களை புரிந்து கொள்ளாமலே லெக்சரர் என்று வந்துவிட்டு ஒழுங்காக சொல்லித்தரத்தெரியாமல்  கழுத்தை அறுப்பவர்களிடம் எதை உருப்படியாகக்கற்றுக்கொள்ள முடியும்?.அதனால் தான் ஆர்வம் இருந்தும் வழிதவறி தடுமாறுகிறோம். நல்ல வேளை எனக்கொரு பிரேமா கிடைத்தார் -பிறருக்கு?. அப்போது கௌரி ஒரு கேள்வி எழுப்பினாள் டாக்டர் கண்ணனிடம் [டாக்டர் சுபத்திரா முன்னிலையில்] சார் , குழப்பிமில்லாமல் கற்றுக்கொள்ள என்ன வழி ? சொல்லித்தரமுடியுமா ?என அனைவர் சார்பிலும் கேட்டாள் .பிறர் மனதார கௌரியை வாழ்த்தினர்

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...