Saturday, June 17, 2023

Rengaa Rengaa -45

 Rengaa Rengaa -45

ரெங்கா ரெங்கா -45

ரயில்வே துறையின் உயர்மட்டக்குழுவின் ஆலோசனையின் பேரில் சென்னையில் ஒரு செயல் விளக்கம் கோரி விவாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் . முக்கிய ஆலோசகர் திருவாளர் பஞ்சாபகேசன் அவர்கள்.அவர் கிளப்பிய வாதம் பயணத்தொகையையும், மேல் அதிகமாக ஒரு % தொகையையும் பல நிறுவனங்கள் -அதிகாரிகளுக்கும் சில வகை ஊழியர்களுக்கும் வழங்கிட பயண டிக்கட் பிரதி [காபி] ஒரு ஆவணம் . பலர் முன்பதிவு செய்த டிக்கட்டினை காபி [கள் ] எடுத்துக்கொண்டு , பயணச் சீட்டை கான்சல் செய்துவிட்டு குறைந்த வகுப்புகளில் பயணித்து உயர் வகுப்புப்பயணச்சலுகைகளை பெற XEROX பிரதிகளை பயன் படுத்தி முழுப்பலனும் பெறுகின்றனர். இது மோசடிவேலை. இதற்கு ரயில்வே துறையின் சட்டதிட்டங்கள் ஒத்துழைப்பதைப்போல் தோன்றுகிறது. இதைத்தடுக்க பயனாளிகள் பயண டிக்கட் ORIGINAL கொடுத்தால் மட்டுமே பணம் பெறலாம் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தால் பொதுப்பண விரயம் தவிர்க்கப்படும். இச்சலுகை ரயில்வேயில் சில சந்தர்ப்பங்களில் பயன் படுத்தப்படுவதால் அனைவர்க்கும் பொதுவான திருத்தம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டுகிறேன் .என்றார் பஞ்சாபகேசன் .

 குழு உறுப்பினர் ஒருவர் "இப்படி யாரோ செய்யும் ஊழல்களுக்கு நாம் ஏன் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.                   பகே சொன்னார் நமது துறை யின் பலன்களை  அனுபவித்து விட்டு , ரயில்வே துறை சரியில்லை, ஊழியர்கள் சரியில்லை என்று ஒரு பயனாளி கட்டுரை எழுதி, அது நாடாளுமன்றத்தில் விவாதப்பொருளானது. அந்தக்குறிப்பிட்ட நபர் இது போன்ற சலுகைகளை ஆண்டிற்கு 4 , 5 முறை [70,000/- முதல் 100, 000/-வரை ] பணம் பெறுகிறார் .இதுபோன்ற பண விரயத்தை எளிதில் தடுத்துவிட முடியும் என்றே இந்த கோரிக்கையை பரிசீலிக்க கோருகிறேன்.                                                               

சரி இவற்றிற்கு ஆதாரம் இருக்கிறதா ? என்று ஒரு டெல்லி அதிகாரி கே ட்க , கே அனைத்து ஆதாரங்களும் ரயில்வே துறையின் SENSITIVE ஆதாரங்கள் , தேவைப்பட்டால் எந்த நீதி மன்றத்திலும் வெளியிடலாம். தற்போதைக்கு அவற்றின் உண்மை நகல்கள் இங்கே உள்ளன என்றார்.             

4 அதிகாரிகள் அதைப்பார்த்து விட வேண்டும் என்று நேர்மையான ஆர்வம் காட்டினர் .ஏனையோர் மீட்டிங்கை முடித்துவிட்டு காஞ்சிபுரம் சேலை வாங்கப்போவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். பஞ்சாபகேசன் துல்லியமாக விளக்கி எப்படி பணத்தை சுருட்டுவது தெரியாமல் சுருட்டி பெரு வாழ்வு வாழ்கின்றனர் என்று BOOKING ,CANCELLATION ,BOOKING IN LOWER CLASS FOR  ACTUAL TRAVEL,  COMPLETE  TALLYING OF BENEFICIARY NAME ,ADDRESS , PHONE NUMBER அண்ட் TRAVEL  DATE என்று சங்கிலித்தொடராய் தொடர்ந்து திட்டமிட்ட ஏமாற்றுதல் மூலம் வருவாயை பெருக்கிக்கொள்ள நமது சட்டத்தில் உள்ள தொய்வு, கை கொடுக்கிறது என்று நிறுவி அதிகாரிகளின் பெரு மதிப்பையும் மரியாதையையும் பெற்றார் .கே.

ஆனால் மறவாமல் அவர் தெரிவித்தது இந்த ஊழலின் ஆணி வேர் வரை சென்று அயராமல் அஞ்சாமல் உழைத்தவர் ஒரு கீழ் மட்ட பணியாளர் ரயில்வே TTE மாடசாமி தென்னக ரயில்வேயில் திருச்சிநிலையத்தின் கம்பீரமான சிங்கம் போன்ற ஊழியன் என்று சொல்லிக்கொண்டே கண்ணைத்துடைத்துவிட்டு மேலும் சொன்னார். இந்த ஊழலை நிறுத்தியதும், ரயில்வே துறை திரு மாடசாமிக்கு ஒரு முறையான பாராட்டு தெரிவிக்க வேண்டும். CANCELLATION LIST மற்றும் LOWER CLASS TALLYING கொண்டுதான் இந்த தில்லுமுல்லுகளை நிரூபிக்க இயலும் என்று ஆரம்பத்திலேயே முனைந்தவர் தான்  திரு மாடசாமி, திறமையான ஊழியர் என்று அவர் பெயரை உயர் அதிகார பீடத்தின் காதுகளில் ஒலிக்கச்செய்தார்.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...