SAMIs COME TOGETHER- 45
சாமிகள் சங்கமம் -45
கௌரிக்கு வகுப்புகள் வெகு சிறப்பாக நடக்கின்றன
.அவளுக்கு ஆங்கில பயம் முற்றிலும் இல்லை என்றே சொல்லலாம் . மேடத்திடம் கூட தேவையில்லாமல்
அச்சம் கொள்வதில்லை. சொல்லப்போனால் மேடத்திடம் [வீட்டிலிருந்தும் கூட ] புத்தகங்கள்
வாங்கி படித்து , குறிப்பெடுத்துக்கொண்டு , நினைவாற்றலை பிரேமா சொன்ன முறையில் நன்றாக
வளர்த்துக்கொண்டு விட்டாள் ஒரு 40-50 நாளில். அபரிமிதமான CONFIDENCE .பிற வகுப்பு நண்பர்கள்
மேடத்தை சந்திக்க வேண்டிவந்தால் கௌரி தான் LIASON என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
என்ன சிறப்பாக நடந்ததென்ன ? சுந்தரத்துக்கு 3 மாச பிரேக் .அது கிட்டத்தட்ட கல்விக்கே பிரேக் விட்ட மாதிரி ஒரே சொல்லில் மேடம் அவனது திமிர் மற்றும் எதிர்காலம் இரண்டையும் கேள்விக்குறி ஆக்கிவிட்டார். இது குறித்து எந்த வக்கீல் துணை கொண்டும் சுபத்திரா விடம் சட்டம் பேசவோ எதிர் வாதம் செய்யவோ இயலாது. ஏனெனில் அவர் ஒரே பிடியில் நிற்பார் 3 மாத க் கெடு அந்த மாணவரேசொன்னது தான் அதுவரை அவருக்கு அவகாசம் இருக்கிறது என்று அந்தப்புள்ளியில் அசையாமல் நிற்பார் மேடம் .
. புத்திசாலித்தனமாக பதில் சொல்லி முட்டாள் தனமாக மாட்டிக்கொண்டேன் என்று சுந்தரம்[அட்டெண்டர் ரெங்கசாமி சொன்ன விளக்கத்தின் உட்பொருள் உணர்ந்து] ஊமைக்குயில் போல் உள்மனதில் சோக கீதம் இசைத்தான். உண்மையான ஆளுமைஎப்படி இருக்கும் என்பதை இப்போது தான் அவன் சந்திக்கிறான்.
பலரும் கல்லூரி மற்றும் பல்கலை என்பது காதலிப்போர் காணும் களம் என்பதாக இன்றைய திரை இயக்குனர்கள் சித்தரித்துவிட , உண்மை அறியாத மாந்தர்கள் ஏதோ கல்லூரி மாணவர்கள் எல்லாம் இஷ்டத்துக்கு நடந்துகொள்ளலாம் என்று [பெற்றோர் உள்பட அனைவரும்] திடமாக நம்புகிறார்கள் .அதனால் வீட்டிலும் எந்தக்கட்டுப்பாடுமின்றி சுந்தரங்கள் முளைக்கிறார்கள்.
ஆனால் சீராக தத்தம் துறைகளை நிர்வகிக்கும் பேராசிரியர்கள் / பேராசிரியைகள் இது போன்ற அராஜக விரும்பிகளை முளையிலேயே முற்றாக கிள்ளி எறிந்துவிடுவார்கள். .அவர்கள் கல்வியின் உயரம் , ஆளுமை, மொழிப்புலமை, அப்பழுக்கற்ற செயல் பாடுகள் போன்றவற்றால் அவர்களை எந்த சட்டத்தின் பிடியிலும் சிக்கவைக்கவோ, அரசியல் உத்திகளாலோ மடக்கவோ முடக்கவோ இயலாது.. இத்துணையையும் விசாரித்து அறிந்து கொண்ட சுந்தரம் வீட்டில் ஒரு பொய்யை சொன்னான். அதாவது பல்கலைக்கழகத்தின் கெமிஸ்ட்ரி துறை யில் இருந்து வெளிப்படும் புகை/ வாயு தனக்கு மயக்கம் தருகிறது எனவே அங்கே தொடர்ந்து உயர் கல்வி பெறமுடியாது வேறு ஏதேனும் கல்லூ ரியில் சேர்ந்து கொள்கிறேன் என்று தந்தை போலீஸ் ஆபிசர் ராஜசேகரபாண்டியன் இடம் சொல்லி TC வாங்கிக்கொள்ள ஏற்பாடு செய்துவிட்டான் . TC விண்ணப்பம் சுபத்திரா ஒப்புதலுக்கு வந்தது.
மேடம் இந்த சுந்தரம் , புத்தங்கள், உபகரணங்கள் எதையாவது திருப்பித்தராமல் வைத்திருக்கிறானா என்று சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் எழுத்து மூலம் கேட்க , அவர்கள் இவன் வகுப்புக்கோ , லைப்ரரிக்கோ, பயிற்சிக்கூடத்திற்கோ வந்ததே இல்லை என்றும் NO DUES என்று சான்றளிக்க சுமார் முக்கால் மணி நேரத்தில் சுந்தரம் விடுவி க்கப்பட்டான். . இவன் போன்றோர் இங்கிருந்து அகலுவதே நலம் என்று சுபத்திரா எந்த குறுக்கீடும் செய்யாமல் மிக எளிதாக ஒரு துன்பத்தை அண்டவிடாமல் செய்துவிட்டார். பியூன்களும் அட்டெண்டர்களும் மகிழ்வுற்றனர் ஏனெனில் சுந்தரம் கள் ஏதாவது அக்கப்போர் செய்துகொண்டே இருப்பர் என்பது அவர்களின் அனுபவம்.
தொடரும் அன்பன் ராமன்
No comments:
Post a Comment