Thursday, June 15, 2023

RENGAA RENGAA -44

 RENGAA RENGAA -44

ரெங்கா ரெங்கா -44

உயர் பதவியில் இருந்த நபரின் இந்த பிரசினை குறித்து பல முறை மாசா  கே யிடம் சென்னை ரயில் நிலைய அலுவலகத்தில் பேசி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் தோன்றியது . மாசா தான் ஐடியா சொன்னார். சார் பயணம் முடித்த டிக்கட் சமர்ப்பித்தால் தான் முழுத்தொகை பெறலாம் என்றும். எனவே TTE தேவைப்பட்டால் தேதி/ PNR குறித்துக்கொண்டு பயணித்த டிக்கட் டை பயணியிடமே கொடுத்துவிடலாம் என்றும் தெரிவித்தார் மாடசாமி. XEROX டிக்கட் சமர்ப்பித்தால் ரயில் நிர்வாகம் பொறுப்பல்ல என்று துறை ரீதியாக சுற்றறிக்கை வெளியிட பஞ்சாபகேசன் கடுமையாக உழைத்து வெற்றிகண்டார். அடுத்தகட்டமாக I AC கேன்சல் தேதிகளில் இதே நபர் III AC OR III SLEEPER  க்ளாஸ் பயணம் செய்த எல்லாத்தேதிகளும் ஒத்துப்போவதை மாடசாமி தனது FILE காபிகளின் வாயிலாக தொகுத்து இனி இந்த FILE கே இடம் கிடைத்ததும் "உயர் பதவி"க்கு சஸ்பென்ஷன் மற்றும் பென்ஷன் தடை மிக நேர்த்தியாக செய்யப்பட்டுவிடும் . இதைத்தான் மாடசாமி மாதிரி எல்லாரும் இருந்தா இந்த நாடு எப்போதோ உருப்பட்டிருக்கும் என்று கே அடிக்கடி சொல்வார். வெறும் நேர்மை மட்டும் கொண்டு ஊழியர்கள் ஊழல் வாதிகளை ஊர் சிரிக்க வைக்க முடியும் என்பதே மாடசாமி- பஞ்சாபகேசன் இடையறா உழைப்பின் பலன்.

அராஜகம் கண்டு பொங்குகிற நேர்மையாளர்கள் முனைந்தால் எந்த ஊழலையும் தகர்த்திடவும் , ஊழல் வாதியை அலற விடவும் நேர்த்தியான அணுகுமுறைகளை வகுத்திட இயலும் . அப்படிப்பட்ட ஒரு நுணுக்கமான உழைப்பில் தான் கே மற்றும் மா சா வின் பங்களிப்பு எவ்வளவு அற்புதமாக புள்ளி விவரங்களை தொகுப்பதில் மிகச்சிறப்பாக செயல் பட்டனர் என்பதை விளக்கத்தான் வேண்டும். இதன் ஆரம்பமே விசித்திரமானது TTE கோகுல் இளைஞன் தொழிலில் அதிக அனுபவம் இல்லாதவன் ஆனால் மாடசாமி யின் அடி ஒற்றி நேர்மையாளனாக மிளிர வேண்டும் எனும் உயர் நோக்கம் உடையவன்.. பொதுவாக எந்த நிர்வாகமும் உயர் வகுப்பு பயணிகள் செல்வந்தர்கள் பண முடை இல்லாதோர் எனவே அவர்களை கண் காணிப்பது எளிது என்ற நோக்கில் அனுபவம் குறைந்த கோகுல் உயர் வகுப்பிலும், ஊழல் கோல்மால் நிறைந்த பிற பயணிகளை கண்காணிக்க , அனுபவமிக்க லோகு, பீட்டர், மா சா,  ரியாஸ் போன்றோரை பொதுப்பிரிவுப்பெட்டிகளில் நியமிப்பர். ஆனால் இவர்கள் புயல் வேக பரிசோதகர்கள் எவனும் தப்பிக்க முடியாது அதிலும் மாடசாமியின் உருவை ப்பார்த்தே  மிரண்டோடிய கயவர்கள் அநேகர்.

கோகுல் –“நமக்கு மொத்தமே 70-80 பயணிகள் தானே இதில் அனுபவம் என்ன வந்து விடுமென்று ஏங்கி பிற வகுப்புப்பணி கிடைக்குமா” என முயற்சிக்க அது தோல்வியானது- நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை. உயர் வகுப்பில் அவ்வப்போது ஊழல் நடப்பதாக தோன்றுகிறது எனவே ஒரு 8 மாதங்கள் எனக்கு உயர் வகுப்புப்பணி தாருங்கள் என மாடசாமி கோரிக்கை விடுக்க இதுவும் நிராகரிக்கப்பட்டது. இப்போது மாடசாமிக்கு ஒரு பொறி தட்டியது. நிர்வாகமே ஊழலுக்கு சாமரம் வீசுவது போல தோன்றியது. சரியான தருணத்தில் இந்த நடைமுறைகளை விளக்கி ப கே அசந்துபோனார் மாசா வின் சுறுசுறுப்பான திட்டமிடலில் மற்றும் ஊழலைக்களைவதில் உள்ள நாட்டம் பற்றி. நிர்வாகமே துணை போகுமோ என்ற நிலை ஆபத்தானது என்றுணர்ந்து ப கே ஒரு திட்டம் வகுத்து ரெசெர்வேஷன்  பழக்கங்களில் .மேலும் சில முடிச்சுகளை இறுக்க வேண்டும் என்று விரிவான செயல் வடிவங்களுடன் உயர் அதிகாரிகளை ஒப்புக்கொள்ள வைத்தார். அதன் ஒரு பகுதியாக உயர் வகுப்பு டிக்கட் சோதனையில் மாடசாமி, பீட்டர் இருவரும் இருப்பது நலம் என்று பரிந்துரைக்க -மாடசாமி களமிறக்கப்பட்டார். 3 நாளில் மாடசாமி கொக்கியைப்பிடித்துவிட்டார். இறுதி சார்ட்டுடன் கான்சல் ஆன விவரம் தேவை என்று கேட்டு வாங்கிவிட்டார் மா சா . எதிர்பார்த்தபடியே "உயர் பதவி" யின் I AC டிக்கட் கான்சல் ; அதே பயண நாளில் அதே பெயர் போன் நம்பருடன்  III AC இல் பயணம். III AC சார்ட்டில் பிடித்து குறித்துக்கொண்டார் மாடசாமி.. உயர் வகுப்பு கான்சல் லிஸ்ட் வாங்குவதை வழக்கப்படுத்தினார் மா சா . இப்படியே ஊழலின் ஊற்றுக்கண் காண்பதெப்படி என்று மாஸ்டர் பிளான் அமைத்தவர் மாடசாமி . பிறகென்ன இது போன்ற HIGHER CLAIM FRAUD பற்றிய நெளிவு சுளிவுகளில் மாடசாமி ஒரு எம கிங்கரன். இந்த நீண்ட ஊழல் பட்டியல் "உயர் பதவி" யின் போலி முகத்திரையை சுக்கல் சுக்கலாக  பிய்க்க இருக்கிறது.. இந்த ரகசியம் வெகு நேர்த்தியாக விளக்கப்பட்டு எந்த கொம்பனும் உயர் பதவி ஆசாமியைக்காக்க இயலாது. அதுவே மாசா--பாகே வின் நுண் இயக்கம் 

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...