Wednesday, June 14, 2023

SAMIs COME TOGETHER-44

 SAMIs COME TOGETHER-44

சாமிகள் சங்கமம்-44

ஜ்யோதிஷ  பூஷண கிரஹ லோக பீஷ்மர் ஸ்ரீமான் .வே சுந்தரம் ஐயங்கார் என்று மாடசாமி பேச்சைத்துவங்க , இன்னும் அதை ஞாபகம் வெச்சுண்டிருக்கியா -அடப்பாவி எதுக்குடா ? என்றார் ராமசாமி . இல்லடா கௌரி, வேதாந்தம் யாரு னு கேட்டா , அப்ப இந்த உன்னுடைய பராக்கிரமங்களை சொல்லி அப்புறம் வெள்ளியில் கிள்ள, பள்ளியில் சாபம் னு சொன்னேன் , அடக்கமுடியாம சிரிச்சாங்க எல்லாரும் என்று பழைய நினைவுகளில் மூழ்கித்திளைத்தனர் இருவரும்

' ஜ்யோதிஷ பூஷண '  எல்லாம் சரிதான் நான் தான் சரியா கணிக்காம விட்டுட்டேன் -" ரா சா.

என்னடா சொல்ற? என்றார் மா சா.       இந்த கஸ் தூரிரெங்கன் அம்மா இவ்வளவு இன்டெர்நேஷன ல் லூசா இருக்கும் னு கணிக்க தவறிட்டேன். என்றார் ராசா.

2400/- ரூவாயே  போதும் னு குதிக்குது நீ சொன்னப்பவே இது பெரிய லூசா இருக்கும் போலிருக்கே னு தோணிச்சு. அதுதான் நிஜம் போல தெரியுது. அந்தக்கிழவி எப்படிப்போனா  நமக்கு என்னடா -என்றார் மா  சா. எவ்வளவு நேர்மையா ஹெல்ப் பண்ணினேன் என்னையே தூக்கி எரிஞ்சு பேசுது னா  எப்பிடிப்புரிஞ்சுக்கிறது. இனிமே யாருக்கும் ஹெல்ப் பண்ணவே கூடாது னு தோணுது--என்றார்  ரா சா

டேய் என்னையும் கை விட்டுறாதடா இந்த பொண்ணு படிப்பு முடியும் வரை யார் யார் உதவி தேவைப்படுமா? உன்னைத்தாண்டா மலை போல நம்பி இருக்கேன் என்று கலங்கினார் மா சா.                                                   உனக்கும் எனக்கும் எந்த கணக்கும் பொருந்தாது நம்ம நட்பு வேறடா என்றார் ராமசாமி. அப்பாடா என்று சற்று நிம்மதி அடைந்தார் மாடசாமி .

உன் மருமாள் க்ளாஸ் கரெக்ட்டா போய்ட்டிருக்கா என்றார் ரா சா. சூப்பரா  போய்க்கிட்டு இருக்குடா என்றார் மா சா டேய்  PG முடிக்கணும் னா  லேசு இல் லை போலிருக்கு டா என்றார் மா சா . அப்ப டி இல்லடா , சில து ரொம்ப கஷ்டம் , சிலது ரொம்ப ஈஸி -ரா சா . எப்பிடிறா சொல்ற? -மா சா .

டேய் உங்க செக்ஷன்ல காமாட்சி யு ம், அக்கவுண்ட் அலமேலு வும் M .A னு போட்டுக்குதுங்க . சுட்டுப்போட்டாலும் 4 சென்டென்ஸ் பேசவோ எழுதவோ தெரியாது , ஏதாவது கேட்ட 4 மாசத்துக்கு MATERNITY லீவு போட்டுருங்க ; இல்லேன்னா மூலைல  உக்காந்து அழும் என்றார் ராம சாமி . உனக்கெ ப்பிடிறா இவ்வளவு தெரியுது என்று கேட்ட மா சா , நீ தான் தூண்டி துருவி நோண்டி நொங்கு எடுத்துடுவியே யாரும் தப்பிக்க முடியாது -தெரிஞ்சுக்கிட்டே கேட்டேன் பாரு அதுதான் சரியில்லை என்றார் மா .சா

நான் சொன்னா நீ நம்ப மாட்ட BOSS ஜெயப்ரகாஷ்  கிட்ட கேட்டுப்பாரு , மூஞ்சி செவந்து , கிரிக்கெட் BAT ஆலியே அடிக்கணும் அதுங்கள என்று குமுறுவார் .ரா சா   ஏண்டா? என்றார் மாடசாமி . ஏண்டாவாவது போண்டாவாவது , உன் னுடைய ஏப்ரல் மாச ரிப்போர்ட்டையே நேத்து வரையிலும் முடிக்கல இன்னிக்கு தரலை உங்கள சஸ்பெண்ட்  பண்ணச்சொல்லி எழுதிகொடுத்டுருவேன் னு JP சொல்லிட்டார் , ரெண்டும்  பெருச்சாளி மாதிரி ராத்திரில குடைஞ்சுக்கிட்டு அழிச்சு அழிச்சு எழுதிக்கிட்டு இருக்குங்க . பியூன் வெங்கடாச்சலம்  நேரமாகுது  நீங்களே ரூமை பூட்டி  சாவிய SO ரூம் ல குடுத்துடுங்கனு சொல்லிட்டு 7.00 மணிக்கு கிளம்பிட்டாரு . இப்பிடியே காலம் தள்ளுதுங்க.என்றார் ரா சா . ஏன்டா சுபத்திரா மேடம் கிட்ட இதுங்கல்லாம் எப்பிடிறா வேலை செய்யும்? என்றார் மா சா . வேலை செய்யறதா ?ஒரே நாள் ல ஓடிருங்க இலை தலை கீழா கட்டி தொங்க விட்டுருவாங்க . பாத்தியில்ல எப்பிடி ஆம்பளப்பசங்க பஸ் ல லூட்டி அடிக்கரானுங்க ; மேடத்தைக்கண்டதும் கூழைக்கும்பிடு போட்டு ஹி ஹி  ஹி னு அமைதி ஆயிடறானுங்க.  இல்லைனா இடுப்பை ஓடச்சுருவாங்கனு பசங்களே பேசிகிட்டு இருந்தானுங்க பாத்தியா என்றார் ராமசாமி. இந்த மாதிரி நொண்டி முடம் [அதாவது மூளை ] எல்லாம் வேற இடம் பார்க்க வேண்டியது தான் , சுபத்திரா கிட்ட எல்லாம் பப்பு வேகாது.                           கௌரி நெறையா மேடத்தைப்பத்தி அப்பப்ப சொல்றா கேக்கவே மலைப்பா இருக்கு என்றார் மா சா 

மாடசாமியின் தத்துவம்

பெண்கள் இருவகைப்படுவர் ; அவையாவன என்று பள்ளி மாணவன் போல் மாடசாமி துவங்க -இரு நான் சொல்றேன் என்று ராமசாமி -1 சுபத்ரா நிகர்த்த ராணி வகையினர் 2. சாணிக்கிழம் நிகர்த்த மடசாம்பிராணி வகையினர்  ; முன்னவை மணம் வீசும் மலை  , பின்னவை குடலைப்பிரட்டும் சாணி மலை ; முன்னது விலை மதிப்பற்றது பின்னதோ மாதம் 2400/-ஈட்டவல்லது என்று நிறைவு செய்தார். மாடசாமி டேய் ஜவ்வாது எங்க சாணி எங்க ? வேற பேச்சு பேசுவோம் கேப்ரியல் வரார் என்றார் மாடசாமி. இன்னா  மேன் , குண்டூர் பையன் இந்த வாட்டி 2 வது சம்பளம் வாங்கும் இல்லே பார்ட்டி தர சொல்லூ மேன்; அல்லாக்காட்டி நான் சொல்ரேன் கண்டிப்பா பார்ட்டி வாங்கணும் மேன் என்றார்

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...