Tuesday, June 13, 2023

RENGAA RENGAA -43

 RENGAA RENGAA -43

ரெங்கா ரெங்கா -43

ரயில்வே ஜங்க்ஷனில் ராமசாமியும் மாடசாமியும் கேன்டீனில் டீ அருந்த அங்கே நுழைந்தான் கஸ்தூரி ரெங்கன் .உடனே இரு சாமிகளும் பவ்யமாக எழுந்து உதட்டு டீயையை நாவா ல் துடைத்து விட்டு கைகளை கூப்பியபடி வெங்கடாஜலபதி முன் நிற்கும் பக்தர் போல் கண் மூடி நின்றனர். சார் சார் என்றார் ரெ .

நாங்க ஸ்டேஷன் ஸ்டாப் , குமாஸ்தா , நீங்க உயர் அதிகாரி --எங்களுக்கென்ன தெரியும் , வெறும் மர  மண்டைகள் -கோவிச்சிக்காதீங்க டீ குடிச்சுட்டு செக்ஷனுக்கு போயிருவோம், வேலையை கரெக்ட்டா முடிச்சுடுவோம் என்று மீதி டீயை ஒரே மடக்கில் விழுங்கி விட்டு ஓடி மறைந்தனர் . கரெ  வுக்கு சுப்பிரமணி தந்த அறிவுரையை செயல் படுத்த இயலவில்லை. கரெ வுக்கு முதன் முதலாக ஒன்று புரிந்ததது திட்டி ப்பேசும் இடத்தில் இப்போது தான் இல்லை என்று அழகாக உணர்த்தினார் இரு சாமிளும் என உணர்ந்தான் .இப்போது தனது தாயாரின் மீது கடும் கோபம் தோன்றியது ரெ வுக்கு.. கிருஷ்ண பரமாத்மாக்கள் இப்போது லக்ஷ்மண ரேகையை மீறிய ராவணன் போல் என்னை பார்க்கின்றனர் -எல்லாம் கிழவியால் வந்த துன்பம் ; இந்தக்கிழத்துக்கு அக்கவுண்ட்டாவது அஞ்சு பைசா வாவது எதுவும் தரக்கூடாது , என்று முடிவெடுத்த வினாடியில் கேப்ரியல் ஹஹ் ஹஹ் ஹா வந்திட்டியா மேன் .ரெண்டாவதூ சம்பளம் வாங்கிகினு ? அப்போ பார்ட்டி குத்துடு  மேன்  அல்லார்க்கூ ம் என்று சொல்லிக்கொண்டே செல் போனில் ராமசாமி சார் மாடசாமி கூட்டிகினு வாங்கோ ஒரு முக்கியமான மேட்டர் ஹஹ் ஹஹ் ஹா என்று சிரித்தார். அதிகாரியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு இரு சாமிகளும் வந்தனர். பார்ட்டி மறுநாள் என முடிவாயிற்று தலை விதியே என்று ஒப்புக்கொண்டு -ஆனால் உடல் நலம் சரியில்லை ஒரு வெஜ் கட்லெட் /காபி போதும் வேறு எதுவும் சாப்பிட இயலாது என்று கேப்ரியல் சாரை நம்ப வைத்தனர். அது போதூ மேன் ஒரு டோக்கன் பார்ட்டிசிபேஷன் என்று ஹஹ் ஹஹ் ஹா என்று சிரித்தார்மீண்டும் . ரெ க்கு புரிந்தது இன்றைய நிலையில் இரு சாமிகளும் மனம் நொந்த நிலைக்கு போய் விட தன்னை தாக்காமல் விட்டது கூட அதிர்ஷ்டம் தான் , இறைவா என்னைக்காப்பாற்று என்று உள்ளூர அழுதான். பளிச் என்று நினைவு வந்தவனாக சார் பஞ்சாபகேசன் சார் ஏதாவது லெட்டர் குடுத்தேங்கன்னா கவனமா கொண்டுவரச்சொல்லி இருக்கார் சார் என்று மாடசாமியிடம் பேச்சைதுவக்கினான் ரெ . மாடசாமி சொன்னார் நான் பதில் தகவல்களை திரட்டி விட்டேன் நீங்க கவனமா கொண்டு போய் சார் கிட்ட தந்திடுங்க என்றார். கண்டிப்பா சார் என்றான் ரெ கழுகுக்கு புரிந்து விட்டது ஏதோ முக்கிய மேட்டர் பேசுகின்றனர் என்று.. ராமசாமி இறுதியா சொல்லி விட்டார் ரெ இடம். உங்கள் தாயாருக்கு உதவி செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. நீ எங்களுடன் எப்போதும் போல் ஆபிஸ் தகவல் பேசு , வீட்டு விவரம் வேண்டாம் , உனக்கு உறவினர் வேண்டும் என்றால் அண்ணா நகர் தொடர்புகளை வளர்த்துக்கொள் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .. என்றார் . ரேவுக்கு சபலம் தொடங்கியாயிற்று,.   

அது என்ன கே மா சா பரிமாற்றம். அது ஒரு கதை அதை வெளிச்சத்திற்கு இழுத்த மூளையே மாடசாமி தான். சொல்லப்போனால் மா சாவுக்கும் கதைக்கும் தொடர்பில்லை . ஆனால் ஒரு சக TTE தனது பணியில் ஒரு மர்மம் அவ்வப்போது அரங்கேறுவதாக ரொம்ப கவலை கொண்டான். அதாவது ஒரு முகம் தெரியாத நபர் ரயில்வே துறையை கிள்ளுக்கீரை போல கையாளுகிறார் -ஆனால் எந்த வகையிலும் பிடிபடுவதில்லை. திட்டமிட்டு ஏமாற்றுகிறார் .மிக துல்லியமாக நடந்து கொண்டு தனது உயரிய அந்தஸ்தை வெளியில் காப்பாற்றிஉள்ளூர  ஊழல் செயகிறார்.  காகித ஆவணங்ங்களில் . மாட்டுவதே இல்லை. சரி இவர் தவறு செய்கிறார் என்று சொல்ல வேண்டிய காரணம் என்ன?

தொலை தூர ரயில்களில் அகர்தலா , சிம்லா , ஸ்ரீநகர் என்று முதல் வகுப்பு AC பெர்த் முன்பதிவு செய்வார் .அதே விவரங்களுக்கு ஒரு III AC புக் செய்வார் . 5/6 தினங்களுக்குப்பின் முதல் வகுப்பு பயணத்தை ரத்துசெய்வார். ஆனால் கீழ் வகுப்பில் பயணம் செய்வார். முதல் வகுப்பு முன் பதிவு சீட்டை ரத்து செய்யும் முன் சில காபிகள்  எடுத்து வைத்துக்கொள்வார்.. தனது துறையினரிடம் முதல் வகுப்பில் பயணித்ததாக XEROX பிரதியை சமர்ப்பித்து முழு டிக்கட் தொகையை யு ம் + 25% படியையும் [அலவன்ஸ்]கறந்து விடுவார்.   இப்படியாக வருடம் 3 அல்லது 4 முறை நெடுந்தொலைவு கருத்தரங்குகளில் முழங்குவார். சரி முழங்கிவிட்டு போகட்டுமே ரயில்துறைக்கு என்ன? என்ற கேள்வி எழும். தனது உயர் அந்தஸ்து பலத்தைக்காட்டிக்கொண்டு ரயில் சேவை மோசம் பயணிகளுக்கு எந்த பலனும் இல்லை டிக்கட் பரிசோதகர்கள் மோசமாக நடந்துகொள்கின்றனர் , மேலும் எந்த ரயிலும் உரிய நேரத்தில் சென்றடைவதில்லை பலமுறை எனது கருத்தரங்குகள் கால தாமதமாக துவங்கும் நிலைக்கு தள்ளப்பட்டன என்று கட்டுரைகளை ஆங்கில மற்றும் தமிழ் நாளிதழ்களில் வேப்பங்காய் என்று புனைப்பெயரில் வெளியிடுவார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரயில்வே துறையை கொள்ளையர்களின் கூடாரம் என்பதாக பெயர் சூட்டி ரயில்வே துறை அமைச்சரை கேலிப்பொருள் ஆக்க முயற்சிப்பர் . ரயில் துறையின் நேர்மை ஊழியர்கள்  மிகவும் வருந்தினார். இதனால் அந்த TTE மாடசாமியிடம் புலம்ப , மாடசாமி ஒரு வேலை செய்தான். ஒரு MP யை மிகுந்த உயர் பதவி வகிப்போர் விரை வாக சென்றடைய விமானத்தில் செல்லலாமே , ரயில் போல் நீண்ட தூரம் சிக்னல் போன்ற தடைகள் இன்றி போய்வரலாமே என்று கேள்வி எழுப்ப வைத்து விட்டான். உயர் அதிகாரி உடனே தனது எளிய வாழ்வியல் கோட்பாடுகளுக்கு இணங்க மக்களோடு மக்களாக பயணிப்பதில் என்ன தவறு என்று வாசகர் கடிதம் பகுதியில் எழுதி தனது சமுதாய அக்கறையை வெளிச்சம் போட்டார்.. கேள்வி எழுப்பிய MP மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று சிலர் முழங்கினர்மீண்டும் அதே MP மக்களோடு மக்களாக முதல் வகுப்பு AC இல் தான் பயணிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பி எதிரணியினர் விடை சொல்லுங்கள் என்று முழங்கினார். 4 நாட்கள் கழித்து உடல் நிலை காரணமாக உயர் வகுப்பில் பயணிக்க நேரிட்டது என்று மீண்டும்உயர் பதவி” ஒரு விளக்கம் எழுத ஒரு DEADLOCK ஏற்பட்டது.

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...