Monday, June 12, 2023

SAMIs COME TOGETHER- 43

SAMIs COME TOGETHER- 43

சாமிகள் சங்கமம்-43

காலை 11.00 மணிக்கு மேடம் வந்தார்    சுந்தரம் "என்னை பாக்கணும் னீ ங்களெ என்றான். உன்னை என்ன பார்வை நீ என்னை வந்து பாருன்னு சொன்னேன் , இந்த வார்த்தை விளையாட்டெல்லாம் உங்கூர்ல வெச்சுக்கோ , இங்க க்ளாஸ்ல உக்காராம வெராண்டா   என்ன வேலை? சரி அவரை பியூன் போயா னு சொன்னியா மே .ஓஹ் நீங்க இங்க என்ன ரெஜிஸ்திரார் னு நெனப்பா . எந்த ஊழியரா இருந்தாலும் மரியாதைக்குரியவர் தான். சரி நீ என்ன பண்ற உங்க தகப்பனாரை கூட்டிக்கிட்டு வா நான் அவர் கிட்ட பேசிக்கிறேன். இந்த சண்டியர் வேலையெல்லாம் செல்லாது போயிட்டு வா.

மேடம் அவர் காம்ப் போயிருக்கார். அப்படியா ? எப்ப வருவார் ? 3 மாசம் ஆகும் . சரி அவர் வந்தப்புறம் கூட்டிக்கிட்டு வா . அதுவரைக்கும் என்றான் சுந்தரம். இப்பிடி வெராந்தா , போர்டிகோ, காரிடார்  எங்க வேணும்னா  நில்லு, பைன் போடுவாங்க கட்டு . ஆனா உங்க தகப்பனார் வராம உனக்கு க்ளாஸ் கிடையாது. திடீர் னு அப்பா வந்துட்டார்னு கூட்டிக்கிட்டு வந்தாலும் NO  PERMISSION .செப்டம்பர் 7 ம் தேதி தான் 3 மாசம் ஆகுது டைரியில நோட் பண்ணிருக்கேன் , அந்த டைம் கூட  நீ fix பண்ணினது தான் .I HAVE SUFFICIENTLY OBLIGED YOU , YOU MAY GO என்று துரத்தி அடித்தார். வீர வசனம் பேசிய சுந்தரம் அட்டெண்டர் ரெங்கசாமியை தேடி ஓடி சார் மன்னிச்சுக்குங்க தெரியாம பேசிட்டேன் மேடத்துகிட்ட ஒரு வார்த்தை சொல்லுங்க , க்ளாஸ் சேத்துப்பாங்க , தயவு பண்ணுங்க என்று கெஞ்சினான் தம்பி இப்ப உங்கள க்ளாஸ்ல சேக்கல, நான் ஏதாவது சொல்லப்போய் , நீயும் வெளியபோய்யா , ஆளாளுக்கு நாட்டாமை பண்றீங்க னு என் வேலைக்கே ஒல வெச்சிருவாங்க. அவங்க யாரு னு எங்கிட்ட கேட்டியே அவங்களையே கேக்க வேண்டியது தானே இங்கிலீஸ் லியே பதில் சொல்லிருப்பாங்களே -ஆனா உங்களுக்கு இங்கிலீஸ் வருமா என்று கிண்டல் செய்தார் ரெங்கசாமி.. போங்க சொன்னபடி செய்ங்க வேற வழியே இல்ல என்றார் ரெங்ஸ் . ஐயோ மூணு மாசம் ஆகுமே என்றான் சுந்தரம். ஏன் ?என்றார் ரெங்ஸ் .அப்பா வ கூட்டிகிட்டு வர சொன்னாங்க அவரு வெளியூர் போய்ட்டார் மூணு மாசம் ஆகும் னு சொன்னேன் , சரின்னுட்டாங்க

.தம்பி பாத்தீங்களா கெட்டிக்கார த்தனமா பதில் சொல்லி முட்டாத்தனமா மாட்டிக்கிட்டீங்க . உங்கள மாதிரி எத்தனை எத்தர்களை பாத்திருப்பாங்க மேடம் .ஆனா எந்த எத்தனும்  இங்க ஆட முடியாது. போங்க போய் ட்டு சொன்ன தேதிக்கு வாங்க அது ரொம்ப முக்கியம் என்று ரெங்ஸ் நல்ல புதுப்புளியாகக்கரைத்தார்.. சுந்தரம் காற்றுப்போன பலூனாய் துவண்டு பஸ் ஸ்டாப் நோக்கி போக வழியில் ரமேஷ் குறுக்காக போய்க்கொண்டிருக்க ரமேஷ் ரமேஷ் என்று அலறினான் சுந்தரம் . திரும்பிப் பார்த்த ரமேஷ் அய்யா சாமி நீ ஆள விடு என்று புயல் வேகத்தில் ஓடி மறைந்தான். . தன்னை பெரும் வீரனாக கற்பனை செய்தவர்கள் இப்படித்தான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்வார்கள்..

ஏனையோர் வகுப்புகள் மிகவும் சிறப்பாக இருப்பதாக உணர்ந்தார்கள் மகிழ்ச்சியுடன் கற்க தலைப்பட்டார்கள்

மாலை வீட்டில் கௌரி

மாமா வேதாந்தம் யாரு னு காலைலியே கேட்டேன் இன்னும் சொல்லாம இருக்கீங்க என்றாள்

மாமா : ஐயோ உனக்கு தெரியாதா , நானு, ராமசாமி, வேதாந்தம் மூணு பேரும் ஒரே பெஞ்ச் உக்காருவோம் அவன் நல்ல சிவப்பா இருப்பான் , நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கருப்பனுங்க , அதுனால ஏதாவது பிரச்னை னா , இவனுக தான் னு வாத்தியாருங்க எங்களை அடிக்க வருவாங்க. அப்பல்லாம் ராமசாமி எதையாவது சொல்லி சமாளிச்சுருவான் . அடிக்க கைய ஓங்கினார் நரசிம்மன் , சார் இன்னிக்கு அம்மாவாசை சார் , அம்மாவாசைல பையன்களை அடிச்சா அம்மாவாசை இருட்டு மாதிரி பொண்ணுகளா பொறந்துண்டே இருக்கும்னு  எங்க பெரியப்பா ஜ்யோதிஷ பூஷண கிரஹலோக பீஷ்மர் ஸ்ரீமான் உ.வே சுந்தரம் ஐயங்கார் சொல்லிண்டே இருப்பார் சார் னு அள்ளி  விடுவான் , எப்ப கேட்டாலும் ஜ்யோதிஷ பூஷண கிரஹலோக பீஷ்மர் ஸ்ரீமான் .வே சுந்தரம் ஐயங்கார்னு வரிசை மாறாம சொல்வான் ; இல்லாட்டி இன்னொண்ணு  சொல்வான் வெங்கோப ராவ் னு ஒரு வாத்யார் அடிக்க மாட்டார் ஆனா மூஞ்சி, கை கால், கன்னம் எங்கபாத்தாலும் நறுக்கு னு கிள்ளுவார். சார் வெள்ளில கிள்ளி னா பள்ளி சாபம் வந்து தூளில ஜீவன் சமாப்தி னு ஜோதிடத்துல இருக்கு சார் ம்பான் அவருக்கு 3 மாசக்குழந்தை இருக்குனு தெரிஞ்சுக்கிட்டு பயமுறுத்துவான். . இந்த வம்புக்கே வராதவன் வேதாந்தம் , திடீர்னு சூப்பரா படிக்க ஆரம்பிச்சு பெரிய வேலைல இருக்கான், அவன் WIFE தான் நேத்து வந்தாங்களே VIP வித்யா மேடம் அவங்க, ரொம்ப HIGH POST இருக்காங்க. என்றார் மாடசாமி

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...