Sunday, June 11, 2023

RENGAA RENGAA -42

 RENGAA RENGAA -42

ரெங்கா ரெங்கா -42

வீட்டில் தாயார் வாடா,காபி கொண்டுவரவா என்றார். ரெ,முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு , காப்பி யாவது பீப்பியாவது , நீயே இங்க பணம் இல்லாம அல்லாடிண்டு இருக்க , இந்த அழகுல உன்கிட்ட காபி வாங்கி சாப்பிட்டா அந்த தரித்திரம் எனக்கும் ஒட்டிக்கும் . கோபம் கொப்பளிக்க ரெ வின் தாயார் நான்  என்ன தரித்திரத்திலா இருக்கேன் .நாலு காசு சம்பாதிக்கற னு என்னை ஓட்டாண்டினு நெனச்சுண்டு பேசாத , நான் தான் உன்னை சோறு போட்டு வளத்தேன் ". எல்லாருமே சோறு போட்டு தான் வளக்கறா , பின்ன உரம் போட்டு வளக்க நாமெல்லாம் மரமா செடியா? என்றான் ரெ .                                                                  நீ ரொம்ப மாறிட்ட வாய் ஜாஸ்தியா வளந்திருக்கு என்றார் தாய்.

உனக்கு தானே ஆமாம் அடையவளஞ்சான் வரைக்கும் வளந்திருக்கு னு எனக்கே தெரியும் என்றான் ரெ . காபி சாப்படறயா னு கேட்டா என்னென்னெவோ பேசறியே -இதெல்லாம் சரியில்ல .

அஹ்ஹ்ங் சரியில்ல  -நீ ரொம்ப அப்பிடியே ராஜாஜி மாதிரி பேசிட்டனு  நெனப்போ ?-ஒரே ஒளறல் , போறும் உன்னால என் மானமே போறது என்று கொதித்தான்க ரெ . நீ பெரிய கலெக்டர் -உன் மானம் போறதாக்கும் என்று பூமிக்கும் வானுக்கும் குதித்தாள் தாய்.. கொஞ்சமா குதி , ரொம்ப எம்பிக்குதிச்சு ஓட்டயெல்லாம்  ஒடச்சு ஓடு பொறுக்கி , ஆண்டி மடம் மாதிரி ஆக்கி வெச்சுடப்போற . உள்ளதுக்கே வழியைக்காணும் இன்னும் ஓடு, மரம் னு செலவை இழுத்துவிட்டுரப்போற என்று கொதித்தான் ரெ . இன்னிக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ இந்த அனுமார் கிட்ட மாட்டிண்டு பேச்சு கேக்கவேண்டிருக்கு என்று விசும்பினாள் . ஆமாம் உன் லட்சணத்துக்கு அனுமார் வராராக்கும் , ஏதோ குரங்கு வந்தாலே பெரிசு ; பின்ன உன் பிள்ளை உன்ன மாதிரி தானே இருப்பான் . அஞ்சனா தேவியே என் பேச்சு கேள் என்று வாய் முழுதும் காற்றை நிரப்பிக்கொண்டு , கன்னத்தை உப்பிக்கொண்டு , உள்ளங்கையில் சூட்கேஸை வைத்துக்கொண்டு அனுமன் போல் நின்றான். இவனுக்கு வெளியூர் போய் , பைத்தியம் பிடிச்சுடுத்து ஈஸ்வரா என்று புலம்பினாள். மாம் , எனக்கு நெஜம்மாவே பைத்தியம் தான் இல்லேன்னா உன்னநம்பி 4000/-ரூபாய் கொடுத்தேன் பாரு நான் பைத்தியமே தான். என்கிட்டே பணம் கொடுத்தா பைத்தியமா டா என்று கொந்தளித்தாள் . 4000/- த்த 15-16 நாள் காலி பண்ணிட்டு பேங்க் கணக்கு வெக்கலாம் னு 500/- ரூவா கேட்டா இங்க என்ன 500ம் 1000ம் கொட்டியா கிடக்கிறது னு ருத்ர தாண்டவம் ஆடினயாமே , வீடியோ பாத்தேனே , நீ மட்டும் சினிமாலே இருந்திருந்தேன்னா எப்பெல்லாம் லூஸ் வேஷம் வருதோ அப்பெல்லாம் கூப்பிடு ரெங்கம்மா னு எல்லா டைரக்டரும் அலறிருப்பான் -சூப்பர் லூசு நீ எங்கெங்கு காணினும்                           கி ட்டாதடா னு பாரதியாரே உன்னைப்பாடிருப்பார். ஆமாம் பாரதியார் பாடறார் என்று கொதித்தாள்  ரெங்கம்மா . பாரதியாருக்கே பாட முடியாம ஏதாவது ஆயிருக்குங் கறயா .. அதுவும் சரி தான் போச்சு  உன்னால பாரதிக்கும் போச்சு என்ன ஜென்மமோ என்றான் ரெ . என்னமோ 4000/-ரூபா குடுத்துட்டோம் னு ரொம்ப பேசாத ; பிஸாத்து 4000/--நான் வெச்சிருக்கேன் நீ  தராட்டா ,எங்கிட்ட இல்லையாக்கும் என்று உள்ளேசென்று எட்டு 500/-  நோட்டுகளை விசிறி போல் ஆட்டினாள் . இது ஒண்ணு ம் நீ குடுத்தது இல்லை , அது இதோ இருக்கு பார் என்று ஒரு பர்சில் 3000/- ரூபாய் வைத்திருந்தாள் . இப்போது ரெ அதிர்ந்தான் .என்னம்மா சொல்ற என்றான் ரெ .

ஹஹ் ஹஹ் ஹா என்று சினிமா சிரிப்பு சிரித்துக்கொண்டே தான் வைத்திருந்த 8 நோட்டுகளை ரெ இடம் தந்தாள் . இப்போது ரெ கிட்டத்தட்ட மயக்கமுற்றான் . அம்மா என்று அலறினான் . என்னடா ?என்றாள்  தாய் .

உன்ன யாரோ வசமா ஏமாத்திட்டா அதெல்லாம் 2016 ம் வருஷமே தடை பண்ணின நோட்டு . உன்ன நல்லா  வேலை வாங்கிட்டு செல்லாத நோட்டை இந்தா 500/- னு அப்பப்ப கொடுத்து……. , ஐயோ என்று நெற்றியில் அடித்துக்கொண்டான்.

 நீ  லூசில்லாம வேற என்ன. ? நல்ல வேளை  இந்த நோட்ட பேங்க் குல                       குடுத்திருந்த உன்னை விலங்கு மாட்டி செல்லாத நோட்டுகளை மாத்தறாயா னு உள்ள வெச்சிருப்பான். . நீ உள்ளூரிலேயே 2400/- வருதே னு சாணி தட்டறதுக்கு ரெடி ன்னயே அப்பவே நீ லூசுன்னு சீரங்கத்துக்கே தெரிஞ்சு போச்சு.

குடு குடு னு ஓடி சுதா மாமி கிட்ட கேட்டுண்டு வரேன் னு போனியே அவா என்ன கேட்டா ? உனக்கு என்ன பைத்தியமா கவர்மெண்ட் வேலை  வேணா ங்கரியே னு சொன்னாளா இல்லையா?உனக்கு ஏதாவது அறிவு இருக்கா , ஒழச்சு ஒழச்சு செல்லாத நோட்ட சம்பளமா வாங்கிருக்கியே , பட்டாணி கடைல வேலை செய்யறவன் கூட இந்த நோட்ட தொடமாட்டான் நீ விசிறி ஆட்டற -சுத்த லூசு என்று பொறிந்தான். இந்த அழகுல இங்க என்ன தரித்திரமா வந்திருக்கு னு அப்பப்ப வீர வசனம் வேற . இது தரித்திரத்துக்கே தரித்திரம் வந்த மாதிரி . யாராவது செல்லாத நோட்டை சம்பளமா வாங்கி வாங்கி சேத்து வெச்சுபப்பானா . பாத்தான் இதை விட லூசு  அகில உலகத்துலயும் கிடைக்காது னு உன்னையே மிளகாய் வாங்கித்தரச்சொல்லி உன் தலைலியே வெச்சு மழுங்க அரைச்சு சாப்பிட்டிட்டு போய்ட்டான். அவா யாரு எங்க இருக்கா?

இப்ப மெட்றாசோட போய்ட்டா என்று முனகினாள் தாய் . போய்ட்டாளோனோ , போ நன்னா காவேரில தீர்த்தமாடி தலை முழுகு . இந்த அழகுல எதிராளியை எதுத்து பேசி என் நிம்மதியை கெடுக்கற. மரியாதையாபேங்க் குல அக்கவுண்ட் வெக்கல 10/-பைசா தரமாட்டேன் ஆமா. உன் வக்கிரத்தை நிறுத்து உன்னால எனக்கு அவமானமு ம் அசிங்கமும்  மேல மேல வரது. சீ என்ன பொழப்பு இது . இன்னும் ஒரு தடவை ஏதாவது ஜம்பமா பேசின மாடசாமி இல்ல நானே ஒன்ன கைய/ காலை ஓடிச்சுடுவேன். எல்லார்கிட்டயும் கௌரவம நடந்துக்கோ , போ என்று கதி கலங்க வைத்தான் குளித்து விட்டு ரயில்வே ஜங்க்ஷன் நண்பர்களைக்காண புறப்பட்டான்.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...