Saturday, June 10, 2023

SAMIs COME TOGETHER-42

 SAMIs COME TOGETHER-42

சாமிகள் சங்கமம் -42.

மறுநாள் காலை ஒரே பரபரப்பு , கௌரீ , லேட் இல்லாம போம்மா , மேடம் ஒரு மேடை நிகழ்ச்சிக்கே நேரத்துல கவனம் செலுத்தறவங்க , க்ளாஸ் விஷயத்துல ரொம்ப நேர அனுசரிப்பு எதிர்பாப்பாங்க ; அவங்களுக்கு எல்லாம் லேட்டா வர்றவங்க சோம்பேறிங்க , படிப்புல அக்கறை இல்லாதவங்க னு ஒரு மதிப்பீடு இருக்கும் ;அதுல மாட்டாம நேரத்துக்கு போய் வாம்மா ;யூனிவர்சிட்டி பஸ் இருக்கா என்ன ங்கற விஷயம் கேட்டு தெரிஞ்சுக்கிட்டு வா , அதுக்கு எவ்வளவு பீஸ் கட்டணும் னு கேட்டுக்கிட்டு வா என்றார் மாடசாமி. மாமா அதுக்கெல்லாம் நெறைய செலவாகும் -டவுன் பஸ்லியே போலாமே என்றாள்  கௌரி.

மாமா சொன்னார் . கௌரி  லேட்டா இல்லாம போகலாமே ; மேலும் யூனிவர்சிட்டி பஸ் லேட்டா ஆனா ஒன்னும் சொல்லமாட்டாங்க , டவுன் பஸ் லேட்டா ஆனா , முக்கால் மணி நேரம் முன்னாடியே கிளம்பி வர வேண்டியது தானே னு பேசுவாங்க. மேலும் உனக்கு தகுதி அடிப்படையில தான் ஸ்காலர்ஷிப் தரப்பட்டது னு DEFENCE ACADEMY CHIEF பொது மேடையில உன்னை பெயர் சொல்லி அழைத்து பாராட்டியது இதையெல்லாம் பாக்கும் போது நம்ம மரியாதையை காப்பாத்திக்கிட்டா மேல மேல வளர்ச்சிக்கு கை தூக்கிவிடுவாங்க , வேதாந்தம் WIFE பாரு எவ்வளவு பெரிய இடத்துல இருக்காங்க , அதெல்லாம் உழைப்பு இல்லாம வந்துட முடியுமா ? அந்த அம்மா லேசர் பயன்பாடுகள் உலக அளவுல அறியப்பட்டவங்களாம் , எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. யூனிவர்சிட்டி ப்ரோக்ராம் என்னை ரொம்பவே உலுக்கி விட்டது , ஸீட் கிடைக்குமா னு நெனச்சு ராமசாமி கிட்ட பேசுனேன் .அவன் ஒரே நொடியிலே உங்க மேடம் பேரைச்சொல்லி பேசிப்பாத்துட்டு சொல் றேன் னு சொன்னான். அப்புறம் பாக்கும் போது இது பயங்கர கெடுபிடியான போட்டி , எவனும் எதுவும் செய்யமுடியாது , தகுதி தவிர வேற எதுவும் பேசாது , அரசியல் வாதிகள் நிழல் கூட படாமல் நடக்கிற ஒரு கல்வி னு தெரிஞ்சு , நமக்கு  எங்க கிடைக்கும் னு சோர்ந்து போயிருந்தேன். ராமசாமி WIFE உனக்கு ஆசி வழங்கி எங்காத்து கூட்டத்துல நடக்கற எதுவும் நல்லபடியா முடியும் னு சொன்னாங்க அப்பதான் எனக்கு உயிரே வந்தது. உங்க மேடம் ரொம்ப பிகு பண்றாங்க னு நெனச்சேன் ;அப்புறம் தான் தெரிஞ்சுது, யார் ஆர்வம் காட்டுவதா தெரிஞ்சாலும் ஸ்காலர்ஷிப்ல அடி விழுந்துரும் அதுனால பாராமுகமா செயல் பட வேண்டியிருக்கு , இவளுக்கு ஸ்காலர்ஷிப் கெடக்கணுமே னு மடியில நெருப்பைக்கட்டிக்கிட்டு இருந்தது எனக்கும் சமயபுரத்தாளுக்கும் தான் தெரியும் னு ராமசாமி வீட்டுல சொன்னாங்களே , உண்மையிலே , தன் பெயரைக்காப்பாத்திக்க  ஒரு பேராசிரியர் எவ்வளவு போராட வேண்டியிருக்கு ; ஆனா அஞ்சாம போராடறாங்க அதே சமயத்துல அப்ளிகேஷன் நுணுக்கங்களை எவ்வளவு மறைமுகமா சொல்லிக்கொடுத்து XEROX க்கு அங்க போ , ஸ்கேன் பண்ணி அப்லோட் பண்ண இங்க போ னு எவ்வளவு பாதுகாப்பா செஞ்சு கொடுத்தாங்க . ஒரு 5 பைசா கூட காசு வாங்கல ; இதெல்லாம் சாதாரண விஷயம் இல்ல -யோசிச்சுப்பாரு உனக்கு புரியும் னு சொல்லி அவளை பைக்கில் பஸ் ஸ்டாண்டில் கொண்டுபோய் விடும் போது மணி 8.40. 8.55 பஸ் , யூனிவெர்சிடி வளாகம் அடையும்  போது மணி 9. 44. விழுந்தடித்து ஓடினாள் கௌரி தன் துறை நோக்கி.

யூனிவர்சிட்டி பாதையில் இருவர் "அதோ ஓடுது பார் அதுதான் கௌரி , சூப்பர் டான்சர் , சும்மா பிச்சு உதறுது , நல்லாவும் படிக்கும் போல இருக்கு, FULL MERIT SCHOLARSHIP -CENTRAL GOVT . வழங்கியிருக்குது சும்மாவா ? என்று முதல் நாளிலேயே நன்கறியப்பட்டவள் ஆனாள் கௌரி.அந்தக்கூட்டத்தில் ஆண்  பெண் அனைவரும் I PG யாம் , சுபத்திரா மேடத்துக்கு தான் இந்த மாதிரி TALENT  எல்லாம் மாட்டும் என்று பேசிக்கொண்டே நடந்தனர்.

விழுந்தடித்து ஓடி வகுப்பறை வாயிலில் நின்றாள் கௌரி. உள்ளே போங்கம்மா 10.00 மணிக்கு மேடம் வருவாங்க என்றார் அட்டெண்டர் ரெங்கசாமி . சரிங்க என்று கௌரி வகுப்பில் எங்கே அமர்வது என நோட்டம் விட்டாள் . இது புது அனுபவம் -அவள் 4 வது வரிசையில் அமரப்போனாள் அட்டெண்டர் ரெங்கசாமி .ஓடி வந்து கௌரி ம்மா பெண்கள் முதல் ரெண்டு வரிசையில உக்காருவா ங்க , மேடமும் அதைத்தான் சொல்வாங்க நீங்க முன்னாடி போய் உக்காருங்க என்று ஏற்பாடு செய்து வெளியே வந்தார். அங்கே சுந்தரம் [மாணவர்] நின்றிருந்தார் , ரெங்கசாமி சார் உள்ளே போங்க மேடம் வரும் நேரம் என்றார் , போய்யா , பெரிய மேடம் உன் வேலையைப்பாரு என்று திமிராக பேசிக்கொண்டிருக்க , சார் மேடம் வந்தா பிரச்சினை ஆயிடும் , உள்ள போங்க சார் என்றார்ரெங்கசாமி . யோவ் , நீ பியூன் தானே , உன் வேலையைப்பாத்துக்கிட்டு போ என்று கத்த , துர்க்கா தேவி யாக சுறுசுறுப்பாக சுபத்திரா வந்ததும் , ரெங்கசாமிமேடம் இவரு உள்ளே போகாம தகராறு பண்ணிக்கிட்டுஇருக்கார் , நீ பியூன் அது இதுனு பேசறாரு”. 

நீ 11.00 மணிக்கு என்னைப்பாரு என்று மாணவனிடம்  சொல்லிக்கொண்டே வகுப்பறையில் நுழைந்து உட்புறம் தாழிட்டுவிட்டார். வெளியே இவங்க யாரு என்றார் சுந்தரம். யாரா? என்று ரெங்கசாமி கொக்கரித்தார் . 11.00 மணிக்கு ப்பாரு அவங்க யாருனு தெரியும் , நல்லதுக்கு சொன்னா  கேக்க மாட்டீங்க . ஏதோ PG சேந்துட்டாலே கொம்பு னு நெனச்சுக்கறீங்க இங்க அவனவன் Ph .D  முடிச்சவனெல்லாம் மேடம் வந்தாலே அடங்கி ஒடுங்கி இருக்கானுங்க , நீங்க என்னமோ சட்டம் பேசறீங்க போங்க போங்க , அடி வாங்குனா --- தானே தெரிஞ்சுக்கிறீங்க . என்று சொ ல்லி விட்டு அவர் அட்டெண்டன்ஸ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு 2 வகுப்புகளுக்கும் [II and I PG ] சென்றார்.

சுந்தரம் அங்கேயே நிற்க அவனது நண்பன் II PG ரமேஷ் வந்து என்னடா இங்க நிக்கற என்றான், மேடம் 11.00 மணிக்கு பார்க்க சொல்லிருக்காங்க என்றான் சுந்தரம். எதுக்கு இன்னும் அட்மிஷன் கிடைக்கலையா ,இப்பிடியெல்லாம் அட்மிஷன் கொடுக்க மாட்டங்களே என்றான்  ரமேஷ். இல்ல நான் கிளாசுக்கு வெளியே நின்னுக்கிட்டிருந்தேன் , உள்ள போகல அதுக்குள்ள வந்துட்டாங்க மேடம் .அவுங்க யாரு என்றான் சுந்தரம். அவுங்க யாரா ?நீ என்ன போதையில இருக்கியா அவுங்க யாருன்னுக்கிட்டு இருக்க . டே லூசு அவங்க HOD - மேடம் சுபத்திரா . உன்னை மாதிரி கொசு வெல்லாம், சுண்டு விரலாலியே நசுக்கி ருவாங்க உஷார் என்றான் ரமேஷ்.. உன் துள்ளல் அலட்டல் எல்லாம் மூட்டைகட்டி வெச்சுட்டு மூலைல உக்காரு இல்ல உன்னை இடுப்பை ஓடிச்சு ஒக்காத்திருவாங்க ஆள் தெரியாம ஆடாதீங்கடா , உன் பப்பு இங்க வேகாது கண்ணு , சொல்ல வேண்டியது கடமை , கேட்டா கேளு இல்லைனா அனுபவி என்று சொல்லி மறைந்தான் APPLIED Phycology ரமேஷ் .

ஆஹ் என்று அலட்சியப்பார்வை பார்த்தான் சுந்தரம். வேளை சரியில்லாதவனுக்கு எந்த அறிவுரையும் பயன் தராது.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...