Friday, July 21, 2023

CYCLE-2

                                    CYCLE-2

                                    சைக்கிள் -2

ஞானதேசிகன் பிடியில் பல்லி போல் தொங்கிக்கொண்டிருந்தான் கோவிந்து அவனது சட்டையை இரறு கப்பற்றிக்கொண்டு  அடிக்க கையை ஓங்கினார் ஞா .தே . சார் சின்ன பையன் அடிக்காதீங்க பாவம் என்று சொல்லிக்கொண்டே கணேசமூர்த்தி விந்தி விந்தி வந்தார்.

இப்போது மரத்தின் பின்னிருந்து சுந்தர் வந்தான் சைக்கிளை எடுக்க. சைக்கிள் கோணலாக தலை சாய்த்து நின்றது உடனே கோவிந்து வை அடிக்க ஓடி வந்தான் சுந்தர். கணேசமூர்த்தி அவனை தடுத்து நிறுத்தி அடிக்காத , அடிச்சா தேவையில்லாத முரண்டு குணம் வரும். உ ன் சைக்கிள் கோணலா இருக்கு-- -அதானே? என்றார். “ஞானம் சார் அந்த சைக்கிளை நிமித்திக்கொடுங்க” என்றார் கணேசமூர்த்தி. ஞானதேசிகன் ஓடிச்சென்று சைக்கிளின் முன் சக்கரத்தை தனது கால்களுக்கிடையே நுழைத்து ஹாண்டில் பாரை இரு கைகளில் பிடித்து வலுவாக திருப்பி, சைக்கிள்நேர்முகம் காட்டி ஒயிலாக நின்றது. தம்பி கிரௌண்ட் ல சைக்கிள் கத்துக்கணும் னா அந்த கிழக்கு ஓரமா போ ;இங்கல்லாம் நடமாட்டம் அதிகம் என்று கோவிந்துவுக்கு அன்பாக சொல்லி . ஞானம் சார் இப்ப அவனுக்கு சைக்கிள் கத்துக்க சரியான வயதும் உடலும் இருக்கு. இன்னும் 2 வயசு போனா உடம்பு சரியா வளையாது, கூச்சமும் ரொம்ப வந்துடும். சரியா கத்துக்க முடியாது. கவர்மெண்ட் என்னென்னவோ செலவு செய்யுது சைக்கிளும் கம்ப்யூட்டர் வேலைகளும் கத்துக்கொடுத்தா , பின்னாளில் பைக் /ஸ்கூட்டர் எல்லாம் கீழ விழாம ஓட்ட முடியும். நீங்க ஒரு உதவி செய்யணும் என்றார் கணேசமூர்த்தி -ஞானதேசிகன் சாரிடம் . சொல்லுங்க சார் என்றார் ஞானதேசிகன் கணேசமூர்த்தி சொன்னார் “ நீங்க தினமும் லஞ்ச் டைம் ல இந்த பையனுக்கு சைக்கிள் கத்துக்குடுங்க .ஒரு மாசம் கத்துக்குடுத்தா போதும் னு நெனைக்கிறேன் . ஏம்பா நீ 5ம் க்ளாஸ் தானே என்றார்” .கோவிந்து ஆம் என்பதாக தலை அசைத்தான் . “சரி --ஞானம் சார் இந்த சைக்கிள் பயிற்சிக்கு எவ்வளவு ஆகுதோ அதை நான் குடுத்துடறேன் என்று நாளை முதல் பயிற்சி ஆரம்பியுங்கள்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.

உடனே ஞானதேசிகன் இவனுக்கு போய் ஏன் சார் நீங்க இவ்வளவு கஷ்டப்படறீங்க என்றார் ஞானதேசிகன்.

இல்ல சார் சைக்கிள் கத்துக்கணும்ங்கற  ஆர்வத்துல தானே இப்பிடி ஆயிடுச்சு அதனால என்ன ? என் பேரன் இடிச்சிருந்தா என்ன செய்வேன் அதமாதிரி நெனச்சுக்கிட்டு இதைக்கடந்து போகவேண்டியது தான்..

தம்பி நான் உனக்காக ஏற்பாடு பண்ணிருக்கேன் -ஞானம் சார் முறையா கத்துக்கொடுத்து , சாலை-போக்குவரத்துவிதிகள் எல்லாம் சொல்லித்தருவார். மேலும் அவரே நம்ப மாவட்டத்தில் சைக்ளிங் போட்டியில் gold medal வின்னர் .அவரை நல்லா பயன் படுத்திக்கோ , சார்கிட்ட கேட்டு அவர் சொல்ற  நேரத்துக்கு வந்து தினமும் கத்துக்கோ - குட் லக் என்று கைகுலுக்கி விட்டு விந்தி விந்தி நடந்து தனது வீட்டிற்கு புறப்பட்டார்.   ஞானதேசிகன் ஒரு அற்புத கோச் அதனால் கோவிந்து சரியான புளியங் கொம்பைப்பிடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.. தம்பி நாளைக்கு 1.10 க்கு வா முதல் வாரம் சின்ன சைக்கிள் , அப்புறம் பெரிய சைக்கிள் குரங்குப்பெடல் போடு -ஒரு 4 , 5 நாள் அப்புறம் 4 நாள் complete பாலன்ஸிங் on cycle by slow cycling .கடைசியா தனித்தனி சைக்கிள் ல நம்ப ரெண்டு பேரும் bazaar ல போய் வருவோம். சூப்பரா கத்துக்குடுத்துட றேன் , கவலைப்படாத perfect cycling எப்படினு நல்லா புரிஞ்சுக்கோ , நாளைக்கு வா என்று அனுப்பி வைத்தார்.

மறுநாள் குறித்த நேரத்தில் கோவிந்தன் PT  மாஸ்டர்  அறை வாயிலில் நிற்க ஞா தே மணியைப்பார்த்தார் மணி 1.08. சொன்னபடியே ஒருவன் சிறிய சைக்கிள் கொண்டு வந்தான். அவன் தான் கற்றுத்தரப்போகிறான் .PT மாஸ்டர் சைக்கிளில் எப்படி அமர வேண்டும் , முதுகு வளையாமல் குதிரை ஓட்டுபவன் போலஇடுப்பு பொருந்தி அமர , கைகள் சரியான அழுத்தத்தில் சற்று தளர்வாக ஹாண்டில்பார் பிடிக்கவேண்டும் , முழங்கை வலிக்காமல் இருந்தால் தான் சரியாக கற்றுக்கொள்ள முடியும் என்று நன்றாக கற்றுக்கொடுத்தார். அவர் நினைத்ததை விட கோவிந்து விரைவாகக் கற்றுக்கொண்டான். பயிற்சிக்கு வந்த பையன் பரஞ்சோதி அவனே ஒரு சைக்கிள் வீரன் ;சிறப்பாகக்கற்றுக்கொடுத்தான். பெரியசைக்கிளில் குரங்குப்பெடல் வெகு நேர்த்தியாக கோவிந்து செயல் பட , பரஞ்சோதி ஆச்சரியப்பட்டான். . பாலன்ஸிங் செய்வதற்கு சில உத்திகளை பரஞ்சோதி செய்து காட்டினான் ;அவற்றை ஆழ்ந்து கவனித்து கற்றுக்கொண்டான் கோவிந்து .சைக்கிள் ஒரு குதிரை போல் செயல் பட்டது கோவிந்துவிடம். . இறுதிப்பயிற்சியாக ஆசிரியர் ஞானதேசிகன் சாருடன் , நெரிசலான கடைத்தெரு பகுதிகளில் சர்வ நிச்சயத்துடன் சைக்கிள் ஓட்டினான்..ஞானம் சார் மிகுந்ந்த மகிழ்ச்சி யுற்றார். அவனைப்பாராட்டினார். கோவிந்து உடனே PT மாஸ்டர் முன் சீடனாக விழுந்து நமஸ்கரிக்க மாஸ்டர் மனம் நெகிழ்ந்தார். நேரே இருவரும் கணேசமூர்த்தி சார் அறைக்கு சைக்கிளில் சென்றனர் . அவர் முன் சைக்கிள் ஒட்டி எல்லாபாலன்ஸிங் முறைகளையும் செய்து காட்டி கணேசமூர்த்தி மிகுந்த பாராட்டு தெரிவித்து மொத்தம் எவ்வளவு ஆயிற்று எனக்கேட்டு 100/- ரூபாய் பரஞ்சோதிக்கு கொடுத்து ஞானம் சாருக்கு நன்றி தெரிவித்தார். கோவிந்து ஓடி வந்து கணேசமூர்த்தி சாரின் பாதம் தொட்டு வணங்கி , தெரியாம இடிச்சுட்டேன் சார் என்னை மன்னிச்சுருங்க என்று அழுதான். கோவிந்து இவ்வளவு பண்புள்ளவன் அவனுக்கு இந்த பயிற்சி கொடுத்தது எனக்கு மிகுந்த நிறைவைத்தருகிறது என்று கணேசமூர்த்தி ஞானம் சாரிடம் தெரிவிக்க , அவர் இவனை சரியா ட்ரைனிங் குடுத்தா நம்பஸ்கூலுக்கு ஒரு அற்புத SPORTSMAN கிடைப்பான். எல்லா ஷீல்டையும் அள்ளி ராலாம் சார் என்றார் ஞானதேசிகன்சார். நல்லா செய்யுங்க என்று வாழ்த்தினார் கணேசமூர்த்தி .

இப்போது கோவிந்து FOOTBALL /HOCKEY இரண்டிற்கும் PT சாரிடம் சிறப்பு பயிற்சி பெற்றுக்கொண்டு  இருக்கிறன். . வீட்டில் சைக்கிள் சைக்கிள் என்று கேட்பதில்லை.. அப்பா நினைத்துக்கொண்டிருக்கிறார் கோவிந்துவுக்கு சைக்கிள் மோகம் போய்விட்டது என்று .

எதிர்காலத்தில் கோவிந்து ஒரு பிரபல விளையாட்டு வீரன் ஆவான் -இது சத்தியம்.

நன்றி அன்பன் 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...