INDIAN RAIL LOCOMOTIVE
ரயில் எஞ்சின்
என்னடா இவன், சைக்கிள் என்றான் இப்போது எஞ்சின் என்கிறான் , இவனுக்கு என்ன வந்துவிட்டது ? என்று நினைப்போர் , தயவு செய்து ரயில் எஞ்சின் பற்றி நம்மில் பலருக்கு என்ன தெரியும் என்று சுயமதிப்பீடு செய்ய முயலுங்கள், முயன்றால் 2, 3 தகவல்கள் தெரியும் .இதைத்தாண்டி என்ன இருக்கிறது என்று கூட கேட்கத்தோன்றும் .இந்திய ரயில்வே எப்போதும் அமைதிப்புரட்சி செய்யும் நிறுவனம் ; அது விளம்பரத்தையும் ஆடம்பரத்தையும் விட பயனாளிகளின் தேவைக்கென பல முன்னேற்றங்களை முன்னெடுக்கும் ஆற்றலும் ஆர்வமும் கொண்டது.
அறிமுகம் ஆன பிறகே தேஜஸ், அந்தியோத்யா , வந்தேபாரத் போன்ற தகவல்கள் கசியத்தொடங்கின. இவை அனைத்தும் பயணியர் தேவைகளை முன்னிட்டு அறிமுகம் ஆனவை.
எந்த அறிமுகம் ஆனாலும் , ரயில் பெட்டிகளை விட ரயில் எஞ்சின் முக்கியத்துவம் உடையது .பயண நேரம் என்பது எஞ்சினின் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில் அமைவது. எஞ்சினில் கிழம், முடம் போன்ற குறைபாடுகள் சற்றும் இல்லாமல் ஆழ்ந்த பராமரிப்பு தேவைப்படும். . இதனாலேயே இந்தியாவெங்கணும் ஆங்காங்கே பராமரிப்பு பட்டறைகள் எனும் LOCO WORKSHOPS பரவலாக உள .
ஆரம்ப கால எஞ்சின்கள் அனைத்தும் வெளிநாட்டுத்தயாரிப்புகளே .படிப்படியாக இப்போது என்ஜின்களும் உள்நாட்டிலேயே உருவாக்கப்படுகின்றன.. சுற்றுச்சூழல் தேவைகளை முன்னிட்டு அநேக எஞ்சின்கள் மின் ஆற்றலால் [ELECTRIC POWER ] இயக்கப்படுவன , இவை மென்மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு டீசல் எஞ்சின்கள் பயன்பாடு பெரிதும் குறைக்கப்பட்டு விட்டது. என்ன முன்னேற்றம் வந்தாலும் ஊழியர் விதிகள் , செயல் முறைகள் [OPERATION RULES ]அனைத்தும் பயணியர் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த அக்கறையுடன் செயல் படுத்தப்படுகின்றன.
பயணியர் ரயிலை இயக்கு ம் எந்த ஓட்டுனரும் [driver ம் ] ஆண்டிற்கு 2 முறை கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார். வெளி மருத்துவமனை சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை . ரயில்வே மருத்துவ மனை தரும் அறிவிப்பே இறுதியானது. நீண்ட அனுபவத்தைக்காட்டி பார்வைக்குறைபாட்டை சமன் படுத்திவிட முடியாது. டிமோஷன் எனும் பதவிக்குறைப்பு DRIVER களுக்கு உண்டு. பார்வை குறையக்குறைய எக்ஸ்பிரஸ் சேவையில் இருந்து, பாசஞ்சர் , சரக்கு ரயில் [கூட்ஸ்] மற்றும் SHUNTING என்று ட்ரை வர்கள் பதவி இறக்கம் பெறுவர் . இதை டிரைவர்கள் இழிவாக நினைப்பதில்லை.சில ட்ரைவர்களிடம் பேசியதில் அவர்கள் சொன்னது "ஆமாம் சார் என் கண்ணில் குறையை வைத்துக்கொண்டு பயணிகளுக்கு உயிரிழப்பு ஏற்படுத்த எந்த அதிகாரமும் உரிமையும் என் போன்ற டிரைவருக்கில்லை.
எனவே நிர்வாகத்தின் முடிவு சரிதான் என்கின்றனர் சரிசெய்யக்கூடிய குறைபாடெனில் , நிர்வாகமே முறையான சிகிச்சை, ஓய்வு என்று ஏற்பாடு செய்து முழுமையான கண்பார்வைக்கு உதவும். நிவர்த்திக்க முடியாத குறைகளினால் எவரையும் கட்டாய ஓய்வுக்கு உட்படுத்துவதில்லை, மாறாக மனித உயிர்களுக்கு பாதகம் இல்லாத பிற மாற்றுப்பணிகளுக்கு பயன் படுத்திக்கொள்வர் .அந்த வகையில் ஊழியர் நலன் காப்பதில் ரயில்வேத்துறை மிகுந்த புகழ் பெற்றது. ரயில்வேயின் சட்டதிட்டங்கள் கடுமையானவை.
இதைப்புரிந்துகொள்ள
பின்னோக்கிப்பயணிக்க வேண்டும். குறிப்பாக நீராவி எஞ்சின் இயக்கத்தில்
ஈடுபட்ட ஓட்டுனர்கள் , ஒவ்வொரு எஞ்சினிலும் மூவர்
பயணிப்பர் சீனியர் ட்ரைவர், செகண்ட்
ட்ரைவர் , பயர்மன் [FIRE MAN ]. ஆம் அந்த எஞ்சின்களில்
இயங்கிய FURNACE எனும் உலை பல்லாயிரம்
லிட்டர் தண்ணீரை ஆவியாக்கித்தரும் அளவுக்கு
சீற்றமிகு எரிவை தரும். நிலக்கரியை
எரிபொருளாகக்கொண்டு இயங்குவது. ஆனால் ஒரு பயணியர்
வண்டியை இழுத்துக்கொண்டு எஞ்சின் விரைந்து ஓடவேண்டுமெனில் , சுமார் 5 மணிநேரங்கள் முன்பே எரியூட்டல் துவங்கும்
. அதாவது காலை 6.00 மணி ரயிலுக்கு முந்தைய
இரவு சுமார் 12. மணிக்கே எஞ்சின்
பணிகள் துவங்கிவிடும் . இதை
துவக்குவது FIRE MAN னின் வேலை. -முழுவதும் நீர்
நிரப்புவது , தேவையான அளவு கரி
யை ஸ்டோரில் நிரப்புவது , எரியூட்டுதல், தண்ணீர் டேங்கில் முழுகொள்ளளவுக்கும்
நீர் இருப்பதை உறுதி செய்யாமல் எஞ்சினை
இயக்கக்கூடாது . ஒரு எஞ்சினில் பணி புரியும்
மூவரும் ஒரே குழுவாக இயங்குவர்
. இயன்ற அளவு அந்தக்குழுவை கலைக்க
மாட்டார்கள்.அப்போதுதான் நல்ல புரிதலுடன் பணி
செய்வது எளிது.. ஒரே குழுவாக
இயங்குவதால் கருத்துப்பரிமாற்றங்கள் அதிகம் பேச்சில்லாமலே நிகழும்.
எரியும் உலையில் நிலக்கரி தேவை
எனில் கருவிகளின் தகவல் அடிப்படையில் ட்ரைவர்
சொல்ல உடனே FIREMAN , தேவையான கரி யை
எரியும் ஜ்வாலைகளூடே செலுத்துவார் ;எவ்வளவு கரி தேவை
என அவர்அறிவார். டேங்க் எனப்படும்
தொட்டியில்நீர் நிரப்ப
ரயில்
நிலையங்களில் ஊழியர் உண்டு. அவர்
கவனத்தை ஈர்க்க முதன்மை ட்ரை
வர் . எஞ்சினில் உள்ள கருவியை குகுகு
க்கக் குக் குகுகுக் கூ
என்று .ஒலிக்க
செய்வார்
தொடரும்
அன்பன் ராமன்
கரி என்ஜினில் பயணித்த போதெல்லாம் கண்ணில் கரியும் தலை முடியில் கரியும் இல்லாமல் பயணம் செய்தவர் எவரும் உண்டோ!
ReplyDeleteவெங கட்ராமன்