INDIAN RAIL LOCOMOTIVE-2
ரயில் எஞ்சின் -2
குகுகு
க்கக் குக் குகுகுக் கூ
ஒலித்தவுடன் இரவோ, பகலோ அந்த ஊழியர் ஓடிச்சென்று ராட்சத குழாழியின் வால்வ் எனும் அடைப்பு
விலகும்படி திறக்க வினாடிக்கு 80 லிட்டர் வேகத்தில் தண்ணீர் பாயும் . சுமார் 3
நிமிடத்தில் எஞ்சினின் சேமிப்பு நிரம்பி விடும் . இதற்கான நீண்ட
துணிக்குழாய் எஞ்சின் நிற்கும் பகுதிகளில் யானையின் துதிக்கை போல் தொங்குவதை பார்த்திருக்கலாம்
எஞ்சினின் தேவைகளுக்கேற்ப ஒலிப்பானை இயக்குதல் மிகுந்த கவனத்துடன் செய்வர். வழிநெடுகிலும்
ஒலிப்பது ஆள் இல்லா லெவல் க்ராஸிங் பயனாளிகளுக்கு கொடுக்கும் எச்சரிக்கை ஒலி .. மேலும்
ஆங்காங்கே மஞ்சள்நிற தகட்டில் நடுவில் W என எழுதப்பட்டு மூலைக்குறுக்காக கருநிற கோடுகள் ஒலிப்பான் இயக்கவேண்டிய இடம் என
டிரைவர்களுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கும்.இரவில் கூட எஞ்சின் முன்புற விளக்கொளியில்
இந்த மஞ்சள் தகடுகள் பளிச்சிட, தவறாமல் ஒலி
எழுப்புவர் டிரைவர்கள் . நீண்ட
ஆராய்ச்சியின் பயனாக இவ்வகை குறியீடுகள் ரயில்களின் இயக்கத்தை வழிநடுத்துவது ஒரு விந்தை
ஏனெனில் டிரைவர்கள் 30, 40 அலுவல்களுக்கிடையே முறையாக ஒலியெழுப்பாமல் செயல் பட்டால்
தண்டனை பெறுவது உறுதி. உனக்கு ரொம்ப தெரியுமா? என்று என்னை சந்தேகிக்க வேண்டாம் .பகல்
வண்டிப்பயணங்களில் நீங்களே கவனியுங்கள் இந்த மஞ்சள் தகடுகளை எவ்வளவு கவனமாக கடக்கின்றன
ரயில்கள் என்று.
உடல்,
மன மற்றும் ஆரோக்கிய கட்டுப்பாடுகள் இல்லையெனில் ரயில் எஞ்சின் ட்ரைவர் பணிக்கு தகுதி
அற்றவர் ஆக்கப்படலாம். பின் வரும் தகவல்களை கவனியுங்கள் .
இன்றைய
மின்சார எஞ்சின்/ டீசல் எஞ்சின்களில் சிறிய இருக்கை உள்ளது -டிரைவரின் பயன்பாட்டுக்கு.
அது மிகச்சிறியது அதில் நீண்ட நேரம் அமர முடியாது.அமர்ந்தால் , ட்ராக் எனும் பாதையை
நன்றாகப்பார்க்கமுடியாது. டிரைவர்கள் ட்ராக்கினை கவனிப்பதைப்போலவே பக்கவாட்டிலும் பார்க்க
வேண்டும், வெவ்வோறு சமிஞைகள் போர்டுகளாக வழி நெடுகிலும் உள்ளன .எதையும் நிராகரித்துவிட்டு
இயக்கவோ/இயங்கவோ கூடாது .
இவை அனைத்திலும் மிக நுணுக்கமான பணி
"SIGNAL READING '. அதாவது ட்ரைவர் 1, மற்றும் ட்ரைவர் 2ஆளுக்கொரு ஓரத்தில் நின்று
கொண்டு சிக்னல் தென்பட்டவுடன் ட்ராக் 4. கிளியர்
PROCEED என்று D 1 உரக்க சொல்வார், பின்னர் D 2, அவரும் அவ்வாறே SIGNAL இருப்பதாக நினைத்தால்
ட்ராக் 4. கிளியர் PROCEED என்று உரக்க சொல்வார்.
இவர்கள் இருவரிடையே ட்ராக் எண் ஒத்துவரவில்லை எனில், மிகவிரைவாக வண்டியின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு
சிக்னல் அருகில் நிறுத்திவிடுவார்.
எஞ்சினின் சிக்னல் குறித்த ஒலி எழுப்பி அருகில் இருக்கும்
ஸ்டேஷன் ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக உணர்த்துவர் .மேலும் வண்டியின் GUARD தொடர்பு
கொள்ளப்பட்டு [வாக்கி டாக்கி மூலம்] சிக்னல் குறைபாடு தெரிவிப்பர் .GUARD ரயில் நிலையத்தவரை
வலியுறுத்த முறையான சிக்னல் கிடைத்ததும் வண்டி நகரும். அந்த குறிப்பிட்ட ஸ்டேஷன் மாஸ்டரிடம்
அவரது நிலையத்தில் தான் தவறான சிக்னல் வழங்கப்பட்டது என்று எழுத்துமூலம். வாங்காமல் டிரைவர்கள் வண்டியை இயக்குவதில்லை.
ஏனெனில்
வண்டி குறித்தநேரப்படி வரவில்லை எனில் முதல் 'மரியாதை' டிரைவர்களுக்கு தான், பிறர்
செய்யும் தவறுக்கு எனக்கு ஏன் தண்டனை என்ற கொள்கையில் மிக உறுதியாக இருப்பர் டிரைவர்கள்
. ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு எங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது. என்று வாதிடுவதை மிகச்சிறப்பாகச்செய்வார்கள்.
மிக
மோசமான சந்தர்ப்பங்களில் டிரைவர்கள் வண்டியில் வந்த பயணிகளிடம் கூட சிக்னல் தவறானதால்
இந்த ஊரில் இவ்வளவு நேரம் வண்டி நின்றது என்று எழுத்துமூலம் வாங்கி பயணிகளின் விவரம்
போன் நம்பர் வாங்கி வைத்துக்கொள்வார்.பின்னாளில் விசாரணை என்று வந்தால் இது பயன் படும்
.இல்லையேல் ட்ரைவர் பெரும் தண்டனை பெறுவார்..
இவை அல்லாமல் வேறு பெறும் முக்கிய மாற்றங்களுக்கும் டிரைவர்கள் ஈடு கொடுத்துதான் ஆக வேண்டும். .அது மழை புயல் வெள்ளம் , நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் .குறித்தது .
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment