Sunday, July 23, 2023

INDIAN RAIL LOCOMOTIVE-3

 INDIAN RAIL LOCOMOTIVE-3

ரயில் எஞ்சின்-3

  இயற்கை சீற்றங்கள் நீங்கலாக , பராமரிப்புப்பணிகள் எல்லா நாட்களிலும் நடப்பதுண்டு. அவை குறித்த குறிப்புகள்  நிலைய அதிகாரிகளால் டிரைவர்களுக்கு ரயில் புறப்படும் முன் வழங்கப்படும். அது ஒரு ஈசிஜி பதிவுபோல்   ரிப்பன் வடிவ காகிதத்தில் கிலோமீட்டர் அளவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் .

அதாவது இத்தனையாவவது  கிலோமீட்டர் பகுதியில் வண்டி எந்த வேகத்தில் செல்லலாம் என்பது தெளிவாக சொல்லப்பட்டிருக்கும்.    இருந்தாலும் டிரைவர்கள் மிக கவனமாக செயல் படுவர் .அதாவது 8 வது முதல் 9.40 கிலோமீட்டர் வரை ' ,கவன ப் கு தி யெ னில்  , சு மா ர்  6 வது கிலோமீட்டர் நிறைவுறும் நேரம்  எஞ்சினின் வேகம் குறைக்கப்பட்டு மெல்ல 8 முதல் 9.40 கி மீ கடக்கும் வரை கவனமாக செலுத்துவர். அந்த எல்லையை guard van கடந்த பிறகே இயல்பான வேகம் மீட்கப்படும். இதே போல் ஒவ்வொரு 'எச்சரிக்கைப்பகுதியிலும் கண்டிப்பாக இரவு /பகல் பேதமின்றி வேகக்கட்டுப்பாடு செயல்படுத்தப்படும்.      இத்தருணங்களில் டிரைவர்கள் தங்கள் மீது எந்தப்பழியும் வந்துவிடல் ஆகாது  என்று சிக்னல் விவரங்களை மிக தீவிரமாக பின்பற்றுவர்.

.ட்ரைவர் vs பிறர்   யுத்தங்கள் ரயில்வேயில் நிச்சயம் உண்டு.  ஏமாந்தால் ட்ரைவர்மீது பழிபோட்டு ,  தாங்கள் தப்பிவிட பிறர் முனைவர்.. அதனால் தான்  எந்த தவறுக்கும் எழுத்தின்மூலம் வாங்காமல் வண்டியை நகர்த்த டிரைவர்கள் மிகவும் தயங்குவர் .அது ஒன்றுதான்  அவருக்கும்,  guard க்கும் உதவி டிரைவருக்கும் கேடயம் போல உதவும். இல்லையேல், தண்டனை, சம்பளக்குறைப்பு , ப்ரோமோஷன் தள்ளிப்போதல் என்று பல வித இன்னல்கள் ஒன்றன்   பின் ஒன்றாக   துரத்தும்.  இயற்கை சீற்றங்கள் அல்லாது , அன்றாட பராமரிப்புபணிகளுக்கும் ஈடுகொடுத்து தான் எஞ்சினை இயக்கமுடியும்.     

ஒவ்வொரு வகை எஞ்சினிலும் இடையூறு உண்டு .

நீராவி எஞ்சின் :

எவ்வளவு  தொலைவானாலும்அமர சீட் இல்லை நின்று கொண்டே இயக்கவேண்டும், அமர்ந்தால் இருப்புபாதை/ சிக்னல் சரியாக கண்காணிக்க இயலாது. டீசல்  எஞ்சின் இயக்க இருவர் , மின் எஞ்சின் இயக்க ஒருவர் + ஹெல்ப் நெடுந்தூர பணிக்கு ஒருவர் என்பது மிகுந்த அழற்சி ஏற்படுத்தும். எந்த எஞ்சினிலும் டாய்லெட் கிடையாது .இதைகேட்டதுமே சிறுநீர் வருவது போல் இருக்குமே .இதன் காரணமாகவே டிரைவர்கள் மிகுந்த உணவு கட்டுப்பாடு உள்ளவர்கள்  .

வட மாநில இரவுக்குளிர் கொடூரத்தில் எஞ்சின் இயக்குவது எளிதன்று . இந்திய கோடை வேறுவகை கொடூரம் .ஓடும் போது காற்று மிக அதிகமாத் தாக்கும்; ஆகவே தலையில்    கர்சீப் காதை மூடி அணிவர். திடீரென லீவு கேட்க முடியாது...... டபிள் ட்யூட்டி பார்க்க நேரிடும்.

துயரம் என்று பார்த்தால் ஏராளம் ;ஆனாலும்  பலர் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டு வேலைக்கு போகும் நிலைக்கு உயர்த்தி கௌரவமாக வாழ்கின்றனர் .தொ டரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...