Wednesday, July 26, 2023

INDIAN RAIL LOCOMOTIVE-4

 INDIAN RAIL LOCOMOTIVE-4

ரயில் எஞ்சின் - 4

எஞ்சின் ஓட்டுநர் வாழ்வில் பல வித இன்னல்கள் இருக்கும் . உடல் ரீதியான கோளாறெ னில் ரயிலே மருத்துவர் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் .மேலும் , அவ்வப்போது மருத்துவ பரிசோதனை தேவைப்படுவதாக நிர்வாகம் நினைத்தால் ,ஒத்துழைத்தால் மாத்திரம் தான் பணியில் நீடிக்க இயலும்.கண்ணாடி அணியும் பார்வைக்குறைபாடுகளில் சில   அனுமதிக்கப்படும்; மிகப்பெரிய பூதக்கண்ணாடிகள் நிச்சயம் மாற்றுப்பணிகளுக்கு வழி வகுக்கும் . இவற்றை விட மிகுந்த இன்னல் தருவது எஞ்சின் ஒலி .ஒருவித இரைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.   

முன்புறம் பார்த்தால் நீண்ட நெடிய இரட்டைக்கோடுகளாக தண்டவாளத்தை தவிர வேறேதும் தெரியாது. தொடர்ந்து 1 மணி நேரம் எஞ்சினில் பயணித்தால் சூனியத்துக்குள் வெறித்துப்பார்ப்பது போல் இருக்கும். நம்மைப்போன்ற ஒன்றும் தெரியாதவர்கள் எஞ்சினில் ஏறி நின்றுகொண்டால் சிறிதும் பெரிதுமாக கடிகாரங்கள் போல் மீட்டர் எனும் கருவிகள் .நீராவி அழுத்தம் [pressure gauge ] circulation rate மானிட்டர், நீர் அளவு , வெப்ப நிலை மீட்டர் , நீண்ட இரும்புக்கம்பியாக எஞ்சினின் உள்ளே குறுக்காக விரிந்து நிற்கும் brake  , தலைக்கு மேல் தொங்கும் கொடிபோன்ற கம்பி [எஞ்சின் விசில் ஒலிக்கவைக்க ] நம்மால் இழுக்கக்கூட முடியாது அவ்வளவு வலிமை , ஒரு அலாரம் பெல் [யாராவது சங்கிலியை இழு க்க  ] எஞ்சின் உள்ளே ஓலமிடும் , guard இருக்கும் அறையிலும்  ஓலமிடும்.

மட்டுமல்ல , சங்கிலியை இழுத்ததும் இரு ரயில் பெட்டிகள் இடையே     இருக்கும் vacuum இணைப்பு துண்டிக்கப்பட ரயில் செயல் பாட்டில் தடை உருவாகி ட்ரைவர் எஞ்சினை அடக்கி நிறுத்துவார். ஊழியர்கள் பதறிப்போய் ஓடி எந்தப்பெட்டியில்   சங்கிலி இழுக்கப்பட்டது என்று எளிதில் கண்டு பிடித்துவிடுவர். குறிப்பிட்ட பெட்டியில் மேற்பகுதியில் உள்ள விசை நீண்ட சாவி போல் வெளியே நீட்டிக்கொள்ளும் . அந்தப்பெட்டியில் சோதனை செய்து கண்டுபிடிப்பார் கள்.. பின்னர் vacuum திருத்தி அமைக்கப்பட்டு பயணம் தொடரும். vacuum சீர்  செய்யப்படாமல் வண்டி ஒழுங்காக இயங்காது .

எஞ்சினில் ஒரு டெலிபோன் இருக்கும் .அது guard-ட்ரைவர் தகவல் பரிமாற்றத்திற்கானது . எஞ்சின் ஒலியில் இந்த போனின் முனகல் மிகவும் மெலிதாக கேட்கும். ஆனாலும் முக்கிய தொழில் முறை விவரங்கள் பேசப்படும். ரயில் எஞ்சின் ஒரு வினோதமான அமைப்புடையது. ஆம் தொழில் நுட்பக்கருவிகள் முன் பகுதியிலும் , துணைக்கருவிகள் [கரிக்குவியல், தண்ணீர் அல்லது டீசல் டேங்க் , பின் பகுதியில் .இவ்விரு பகுதிகளும் இடைவெளியால்       பிரிக்கப்பட்டு, அவ்விடைவெளி இரும்புத்தகடால் மூடப்பட்டிருக்கும் . இருப்பினும் எஞ்சினின் இரு பகுதிகளும் தனித்தனியே குதிப்பது போல் தோன்றும். இதனால் எஞ்சினில் ஊழியர்கள் குதித்துக்கொண்டே பயணிப்பதாக தோன்றும்.எஞ்சின் வேகம் மிதமானதாக இருக்கும் போது [எஞ்சின் ரயில் நிலையத்தில் மெல்ல ஊர்ந்து வரும்போது ]  .குதிப்பது நன்கு தெரியும்.

நீராவி எஞ்சின் காலத்தில் சிறிய ஊர்களில் எஞ்சின் டிரைவர்கள் தெய்வங்கள் போல் பார்க்கப்பட்டனர் . ஆம் மிக வறண்ட ஊர்களில் பெண்கள் தண்ணீர் தேடி அலைவார்கள் . எஞ்சினில் இருந்து ஒரு 10-15 பேருக்கு தலா 1 அல்லது 2 குடம் நீர் தருவர் . நீர் வரும் குழாயினை திறந்ததும், வேகமாக நீர் பாயும். பெண்கள் அண்ணே அண்ணே என்று நீர் பிடித்துக்கொள்வர் . சிலர் டிரைவருக்கு எரிச்சலூட்டப்போக , அவர் தள்ளிப்போங்     என்றெ  ச்சரித்து , நீராவியை வெளியேற்றுவார் ட்ரைவர். அளவுக்கதிகமான நீராவி அழுத்தம் ஆபத்தானது எனவே நீராவியைத்திறந்து விட்டு எஞ்சினில் அழுத்தத்தைக்குறைத்து விடுவார் ட்ரைவர்.

நீராவி வெளியேறும் சப்தம் கிலி ஏற்படுத்தும் , அருகில் நின்றால் தோல் பாதிக்கும். .எனவே நீராவி வெளியேற்றம் பயம் தரவல்லது.

அடிப்படையில் டிரைவர்கள் மனிதாபிமானிகள் எனவே இயன்ற அளவு சிறு ஊர் பெண்களின் நிலை கருதி தண்ணீர் கொடுப்பார்கள். பனி காலங்களில் வெந்நீர் கூட லா 1 குடம்  தருவார்கள் . அந்த வெந்நீர் கொதிநிலையில் இருக்கும் . எனவே அதை சைக்கிளில் பின் புறம் கட்டி பெண்கள் சைக்கிளில் கொண்டு செல்வர். கிராமத்துப்பெண்கள் அனாயாசமாக சைக்கிள் ஓட்டுவர்.

இதில் சுவையான சம்பவங்களுக்கும் இடம் உண்டு. என்றாவது தாமதம் ஏற்பட்டால் , அந்தப்பெண்கள் ஏன் அண்னே லேட் டு? என்பர். ஏனெனில் அவர்கள் நீருக்காக காத்திருப்பவர்கள். ட்ரைவர் -II  சொல்வார் அண்ணெ ன்  பொண்ணுபாக்க போய்ட்டாரு -அதான் லேட்டு” . அப்படியாண்ணே ? என்று  உரிமையுடன் கேட்கும் பெண்கள் ஏராளாம் . திடீரென்றுஅண்ணே நீங்க அம்புட்டு ஊரும் பாத்திருவீகள்ல” என்பர் . “ஆமாம் பாக்கிராஹ” என்பார் ட்ரைவர். ஒரு ஊர் விடாம போர்டை பூராவும் பாத்திருவோம் என்பார் ட்ரைவர்-II . இவ்வாறு ஒரு நீண்ட பெண்கள் பட்டாளம் ட்ரைவர் கள் பெயர் குலம் கோத்ரம் என்று சகல விவரங்களையும் தெரிந்து வைத்திருக்கும். டிரைவர்கள் இதை ஒரு பொழுதுபோக்காக அவ்வப்போது பயன் படுத்துவர்  . சில பெண்கள் அண்ணே புளியம்பளம் இந்தாங்க என்று ஒரு பை  நிறைய தருவர். இது போன்ற அன்யோன்யங்கள் ரயில் தண்டவாளங்கள் அருகில் வெகுவாகக்காணலாம்.

தொடரும்   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...