INDIAN RAIL LOCOMOTIVE-5
ரயில்
எஞ்சின் – 5
எவ்வகை எஞ்சின் ஆயினும் அடிப்படையில் பணிகளும் அவற்றின் நடைமுறை வழிகாட்டுதல்களும் அநேகமாக ஒன்றே தான். இயக்குகின்ற கருவிகளும் அவற்றின் செயல் பாட்டுக்கு உரிய ஸ்விட்ச்களும் சற்று மாறுபட்டிருக்கலாம் . எனவே எஞ்சின்கள் தொன்று தொட்டு பலவாறாக பெயரிடப்பட்டுள்ளன .
அதில் வினோதம் யாதெனில் ஒவ்வொரு முறை ரயில்வண்டியைக்காண நேரிடும் போதும் எஞ்சினைப்பார்க்க பெரும்பாலோனோர் தவறுவதில்லை. ஆனால் அதன் புற அமைப்பு , உருவபரிமாணம் , பெயர் இவற்றை ஆழ்ந்து கவனிப்பதில்லை.
எஞ்சினில் தான் எத்துணை வடிவங்கள்/ பெயர்கள் . பெயரிடுவதில் சில நுணுக்கங்கள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன., அவை M , Y மற்றும் W என்பன. இவற்றில் சிற்றினங்கள் [Species] உண்டு . அந்த சிற்றினங்கள் , எஞ்சின் எந்தவகை பணிக்கு உகந்தது என்பதை உணர்த்தும் .
W என்பது [WIDE /BROAD GAUGE ] என்பதன் சுருக்கம் பின் வருவனவற்றை கவனியுங்கள்
Y =[METER GAUGE =1000 mm wheel base ]
W =[BROAD GAUGE =1676 mm ]
Z = [NARROW GAUGE =762 mm ]
N =NARROW GAUGE = 610 mm ] இவை தண்டவாள அமைப்பின் தகுதிக்கு ஏற்ப சக்கர அமைப்புடையன .
மேலும் எரிபொருள் அடிப்படையிலும் எஞ்சின்கள் பெயரிடப்படுகின்றன. அவை
D =டீசல் , DC =எலக்ட்ரிக் DC கரண்ட் , AC = எலக்ட்ரிக் AC கரண்ட் ,,CA =எலக்ட்ரிக் DC /AC . B =BATTERY
செயல் திறன் அடிப்படையில் எஞ்சின்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
G = கூட்ஸ் , P =PASSENGER , MIXED =GP =கூட்ஸ் அண்ட் பாசஞ்சர் ,S =Shunting
U =MULTIPLE யூனிட் [-டீசல் /எலக்ட்ரிக் ]
R =RAIL CAR [முன்னாளில் மோட்டர் கோச் என்பர் ]
Class WAG-9
தற்கால எஞ்சின்களில் மிகவும் வலிமையானது .அசுர பலம் கொண் டுசரக்குகள் நிறைந்த 55 கூட்ஸ் பெட்டிகளை அனாயாசமாக இழுத்துக்கொண்டு விரைவாக ஓடும் திறன் கொண்டது.
WDM-3A
இந்திய ரயில்வேயின் புகழ் பெற்ற பந்தையக்குதிரை இது. இதன் அம்சங்கள் வருமாறு.1993இல் இந்தியாவில் வாரணாசி டீசல் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தினரால் வடிவமைக்கப்பற்று இயங்கிக்கொண்டிருக்கிறது.
W =BROAD GAUGE ,D =டீசல் , M = MIXED [கூட்ஸ் + பாசஞ்சர் ]பயன்பாட்டுக்குரியது , மிகுந்த பலம் கொண்டது.
இது போன்ற அசுரர்கள் இன்றைய இந்திய ரயில்வேயின் தயாரிப்புகள். MIXED என்பன பணியிலும், தேவைகள் அடிப்படையிலும் அமையும் பெயர்கள். உதாரணமாக அவை கூட்ஸ்/பாசஞ்சர் எனவும், எலக்ட்ரிக் /டீசல் எரிபொருள் இரண்டிலும் இயங்க வல்லது . மேலும் தற்கால எஞ்சின்கள் டூயல் வகையினை. அதாவது இவ்வகை என்ஜின்களுக்கு முன் புறம்/ பின் புறம் என்ற பாகுபாடு இன்றி இருபுறமும் ஒரே திறனில் இயங்கும் வல்லமை கொண்டவை. .எனவே என்ஜினை திருப்பி வைத்து இணைக்க வேண்டியதில்லை ,இருபுற இயக்கம் கொண்டதால் DUAL எனப்படுகின்றன.
தொடரும் அன்பன் ராமன்
I have seen YG, YP ,YL engine in Shengottai track
ReplyDeleteST and SG engines on Thiruchendur track
Thiruchendur track is provided by District Board and weak and hence YG , YP engines are not used in that line
F class engines are used only for shunting