Friday, July 28, 2023

INDIAN RAIL LOCOMOTIVE-6

 INDIAN RAIL LOCOMOTIVE-6

ரயில் எஞ்சின் – 6

நீராவி எஞ்சின் குறித்த அநேக தகவல்களும் பிற வகை என்ஜின்களுக்கும் பொருந்தும் .எனவே பிற முக்கிய தகவல்களை பார்ப்போம் .

ரயிலின் இயக்கம் குறித்த கண் காணிப்பு.

எதிர்பாராத விதமாக ஏதேனும் வேகக்கட்டுப்பாட்டை நிர்வகிக்க நேர்ந்தால் ரயில் நிலைய அதிகரி [ஸ்டேஷன் மாஸ்டர் , இப்போது ஸ்டேஷன் சூப்பிரென்டென்ட் ] குறிப்பிட்ட ரயிலின் guard க்கு தகவல் சொல்ல, அது டிரைவருக்கு தெரிவிக்கப்பட்டு உரிய வேகக்கட்டுப்பாடு அமல் படுத்தப்படும். .

அன்றாட கட்டுப்பாடு:

ரயில் நிலையங்களில் ஒரு பெரிய பிரம்பு வளையம் [சாவி என்பார்கள்] வலுவாக பின்னப்பட்டு ஒரு 2 அடி நீள  கைப்பிடியுடன் இருக்கும். அதன் கீழ் மையத்தில் ஒரு தோல் பை இருக்கும் ,அதில் ஒரு இரும்பு ஆணி போல் கம்பி பொருத்தப்பட்டிருக்கும் . அந்தக்கம்பியில் பொருந்தி அமர துளை யுடன் ஒரு உலோகப்[பந்து இருக்கும்   அப்பந்தின்  மீது நம்பர் பொறிக்கப்பட்டிருக்கும் .இந்த உருண்டை தான் அதிகாரப்பூர்வ சாவி. . இந்த உருண்டை ஒரு இரும்புப்பெட்டகத்தில் இருந்து கோழி முட்டை இடுவது போல் வெளி வரும். ரயில் நிலைய அதிகாரி ரயில் தங்களது எல்லைக்குள் வந்து விட்டதை [போன் தகவல் முந்தைய நிலைய அதிகாரி இடமிருந்து ]  அறிந்ததும் இரும்புப்பெட்டகத்தின் வயிற்றில் இருக்கும் பிடியைத்திருகுவார். பந்து வெளி வரும் .அதன் நம்பரை ஒரு பதிவேட்டில் குறித்துவிட்டு சாவியை பிரம்பு வளையத்துள் வைத்து விட்டு  , அடுத்த நிலைய அதிகாரிக்கு போன் மூலம் நம்பர் சொல்வார். உரிய ரயில் நின்றாலும் நிற்காமல் சென்றாலும் இந்த சாவி எஞ்சின் டிரைவரிடம் ஒப்படைக்கப்படும் . நிற்காமல் கடக்கும் ஸ்டேஷன் எனில் ஒரு ஊழியர் பிளாட் பாரத்திற்கு வெளியே ஒரு உயர்ந்த பீடத்தின் மீது நின்று கொண்டு , சாவி வளையம் எஞ்சின் பக்கம் சாய்வாக இருக்குமாறு தளர்வாக பிடித்துக்கொண்டு நிற்பார். அப்போது புழுதியைக்கிளப்பிக்கொண்டு எஞ்சின் பாய்ந்து வர , ட்ரைவர் -II தனது முன்கையை வளையத்துக்குள் செலுத்தி , கையை மடக்கிக்கொள்ள சாவி இப்போது எஞ்சினில்.

சாவி கொடுப்பது ஒரு கலை

ஆம் ஓடும் எஞ்சினில் சாவியை கை மாற்றுவது ஓர் நுண்கலை .சாவியை வலுவாகப்பற்றிக்கொண்டிருந்தால் ,எஞ்சின் வேகத்தில்சாவியுடன் சேர்ந்து , கொடுப்பவனையும் இழுத்து ரயில் மீது மோதி சாவி கொடுத்தவர் உயிர் இழக்க நேரிடும்..தேவையான 'பிடி' இல்லாவிடில் சாவி கீழே தொங்கி , ட்ரைவர்-II வின் எல்லைக்கு வெளியே போய்விடும். வண்டியை நிறுத்திதான் சாவியைப்பெற்றுக்கொள்ள நேரிடும் . அது ஒரு அவப்பெயர் உண்டாக்கும் நிகழ்வு.

மேலும், விரைந்து செல்லும் எஞ்சின் புழுதி, தூசி , குப்பை அனைத்தையும் வாரி வீசும். சாவி கொடுப்பவன் கண், காது மூக்கு வாய் அனைத்திலும் இந்த இயற்கைச்செல்வம் அமர்ந்து கொள்ளும் . எனவே சாவி கொடுப்பவர் சாவியை சரியான கோணத்தில் வைத்து , முறையாகப்பிடித்துக்கொண்டு , முகத்தை ரயில்போகும் திசையில் திருப்பிக்கொள்வார் . ரயில் முற்றிலும் கடந்தே பிறகே கீழிறங்குவார். ஒவ்வொரு ரயிலும்  ஸ்டேஷனைக்கடைக்கும் பகுதியில் தான் சாவி வழங்குவர் . நின்று செல்லும் ரயில்களுக்கு , ரயில் புறப்படும் முன் எஞ்சினில்கொண்டு போய் சாவியை கொடுப்பர். . இந்த சாவியை அடுத்த ரயில் நிலையத்தில் நுழைவுப்பகுதியில் ட்ரைவர்-II , இந்தா  வைத்துக்கொள்  என்பது போல பிளாட்பாரத்தில் வீசி விடுவார். நிலைய ஊழியர் ஸ்டேஷன் அதிகாரியிடம் சாவியை சேர்ப்பார். அவர் அந்த எண்ணை  சரிபார்த்துவிட்டு , இரும்புப்பெட்டகத்தில் தலைப்பகுதியில் உள்ள ஓட்டையில் , உலோகஉருண்டையை போட்டுவிடுவார். இதுபோல வந்து போன ரயில்களின் உருண்டைகள் பெட்டகத்தில் உள்ளே இருக்கும் RANDOM முறையில் முட்டை வெளியே வரும் , இன்ன நம்பர் தான் வரும் என்ற ஹேஷ்யம் பலிக்காது. ஏதோ ஒரு நம்பர் வரும் எனவே ஒரு அச்ச உணர்வுடன் இந்த கோழி முட்டைகளை கையாள்வர். குறிப்பிட்ட . எல்லைக்குள் ரயில் வந்ததும் தான் மெஷின் முட்டையிடும். அதற்கு முன் திருகி பயன் இல்லை.

இதனால் ரயில்கள் சரியான இடங்களில் நின்று செல்வது உறுதி செய்யப்படுகிறது. டிரைவர்கள் உரிய ஸ்டேஷன்களில் நின்றுதான் செல்ல முடியும். 

நீராவி எஞ்சின்களில் நிலக்கரி தான் எரி பொருள் . எனவே சாம்பல் கரி துகள்கள் உலையின் அடிப்பகுதியில் குவியும். அவற்றை அகற்ற எஞ்சின் கீழ் பகுதியில் உள்ள அகன்ற மூடி திறந்து அவை கீழே கொட்டப்படும். அதற்கென்றே சில பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் .அவ்விடங்களை இரும்பு ஸ்லீப்பர் கட்டைகளால் அமைத்து  பொருத்தப்பட்டிருக்கும். தீ பிடிக்கும் அபாயம் இல்லை. இப்படி உருவான ஒரு பகுதி தான் மதுரையில் கரிமேடு என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறாக பல சுவையான தகவல்களை கொண்டது தான் ரயில்வே துறை..

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...