Friday, July 28, 2023

AN ANNOUNCEMENT

 AN ANNOUNCEMENT

ஒரு அறிவிப்பு

அன்பர்களே --

வரும் திங்கள் [31-07-2023 ] முதல் ஒரு அட்டவணை அடிப்படையில் BLOG பதிவுகளை வெளியிடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அன்றாடம் எதையாவது பதிவிட வேண்டியுள்ளது 

அதற்காக உப்பு சப்பு இல்லாத தகவல்களை எழுதி பிறரை நோகடிக்க விருப்பமில்லை. சரி ஏதாவது கதை எழுதலாம் என்றால் என்னதான் எழுதிவிட முடியும் ? எவ்வளவு ஜென்மத்துக்கு கஸ்தூரி ரெங்கனையும், கௌரியையும் ,அல்லாடுபவர்களாகவே காட்சிப்படுத்த முடியும்

அன்பார் ஒருவர் தமாஷாக சொன்னார் "நான் கௌரியும், கஸ்தூரி ரெங்கனும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்தேன் ",நான் ஆடிப்போய் விட்டேன்

பொருந்தாத ஜோடி மட்டும் அல்ல நண்பர்களிடையே கசப்பை விதைத்துவிடும். அதுவும் மாடசாமியும் ராமசாமியும் கௌரிக்கு மாமியாராக 2400/- ரூபாய் சாணிக்கிழவி யை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்

இவ்வளவு குழப்பங்களை உருவாக்க கதை எழுத வேண்டுமா. மேலும் திரும்ப திரும்ப ஒரே மாதிரி கதைகளை எழுதினால் காலையில் வாட்ஸாப் பார்க்கும் செயலை கொலை செய்த பாவம் எனக்கு  ஏற்படும் 

.இப்போது கல்யாண பரிசு சினிமாவில் தங்கவேலு கதை எழுத ஆரம்பித்து, "என்ன கதை எழுதறது? ஆமைக்கதை எழுதலாமா என்று தனக்குத்தானே புலம்புவார். அதே நிலையில் தான் அடியேன் இப்போது இருக்கிறேன்.

எனவே ஒரு அட்டவணை அடிப்படையில் எழுதினால் என்ன என்று தோன்றுகிறது . வாசக அன்பர்கள் ஆர்வம் கொள்வார்கள் என்று நம்புகிறேன். சரி சரி ஹூம் நீ நம்பிக்கொண்டே இருஎன  சிலர் புலம்புவது நன்றாகவே புரிகிறது .                         

                                                  சரி அட்டவணை இதோ:

ஞாயிறு - ஆங்கிலம்

திங்கள் - அறிவியல் [SCIENCE ] தலைப்பு

செவ்வாய் - சிறு கதை

புதன் - கல்வி

வியாழன் - திரை இசை

வெள்ளி - திரை இயக்குனர்

சனி- பொது கட்டுரை .

இந்த செயல் திட்டம் வாசக அன்பர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.

திங்கள்----------சனி நாட்களில் தமிழிலும் ஞாயிறு ஆங்கிலத்திலும் பதிவுகள் இடம் பெறும்

 

நன்றி     அன்பன் -ராமன்

 

 

2 comments:

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...