CINE DIRECTION/ DIRECTOR-5
திரை இயக்கம் / இயக்குனர்-5
இயக்குனர் இன்னும் சிலரின் பங்களிப்பை ஏற்றுத்தான் பரிமளிக்க முடியும். அவர்களில் தலையாய இருவர் நடன இயக்குனர் [CHOREOGRAPHER], நிழற்படப்பதிவாளர் [STILL PHOTOGRAPHER ] .இவர்கள் கிட்டத்தட்ட பாடல்காட்சிகளில் படக்குழுவினருடனேயே தொடர்ந்து இயங்குவர். அதிலும்
நிழற்படப்பதிவாளர் படப்பிடிப்பு தளங்களில் [CINEMATOGRAPHER]
ஒளிப்பதிவாளருக்கு அருகில் நின்று நிழற்படங்களை சுட்டுத்தள்ளுவார்.
நடன இயக்குனர் FIELD க்கு வெளியே [அதாவது படப்பிடிப்பு காமெராவின் கண்ணில் /பார்வையில் படாமல்] உதவியாளர்களுடன் இருப்பார்.
அது ஏனெனில் பாதி கலைஞர்ளுக்கு நடனம் வேப்பங்காய் . ஆனால் படத்தில் நடித்து பொருள் குவிக்க ண்டும் எல்லா சமரசங்களையும் ஏற்று சாமரம் வீசி கதாநாயகி ஆனபின் இனி டைரக்டர் தான் சமரசம் செய்து கொள்ள [மற்றும் ரசிகர்களை கொல்ல ] வேண்டும். எனவே நாயகியின் நடன அசைவுகளை field [காமெராவின் எல்லை]க்கு வெளியே நடன இயக்குனர் மற்றும் அவரது உதவியாளர்கள் செய்யசெய்ய
அதைப்பார்த்து நாயகி அபிநயிப்பார்.ஆகா நாட்டிய தாரகை , ஊட்டியின் அழகி உல்லாசக்கிளி ஜிலுஜிலு ஸ்ரீ யின் நடனம் கொள்ளை அழகு என்று விமரிசனம் தூள் பறக்கும் [அங்கே நடனக்குழுவினர் குமுறிகொண்டிருப்பார்கள் -"களுதைக்கு ஆடவே தெரியாது” என்று]
யார் எப்படிப்போனால் என்ன சுட்டுத்தள்ளு என்று கருமமே கண்ணாக ஸ்டில் எடுப்பார் still photographer . இவர் சினிமாட்டோகிராபரின் கோணத்திலேயே still எனும் அசையாப்படங்களை எடுப்பார். அப்போதுதான் விளம்பரங்களில் , படக்காட்சிபோலவே படங்களை வெளியிட்டு மக்களைக்கவர முடியும். திரை அரங்குகளில் சிலர் முண்டி அடித்து க்கொண்டு ஓட , சிலர் லாபி பகுதியில் ஸ்டில்ஸ் பார்த்து , இங்க பார் ஜிலு ஜிலு அங்கபார் கொழுகொழு என்று அலை மோதி சுய விளக்கங்களை அள்ளிவீச அதை நம்பிக்கொண்டு ஆ என்று சிலர் அலைய, படம் லாஸ் தேன் என்று வரவு செலவு பேசித்திரிவதைக்காணலாம் . இதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல ;தேவைப்பட்டால் அடி தடி யிலும் இறங்குவார்கள்.
இது ஒரு புறம் இருக்க படப்பிடிப்பில் இயக்குனர் என்ன செய்வார் என்பதை அறிய முயலுவோம்
ஒவ்வொரு காட்சியையும் முறையாகப்படம் எடுக்கவும் , குழப்பமில்லாமல் விரைந்து செயல் பாடவும் உதவுவது திரைக்கதையே
. எனவே திரைக்கதை தொகுப்பு , இயக்குனரிடம் இருக்கும் ; ஒரு சிலர் அதை உதவி இயக்குனர் பொறுப்பில் கொடுத்துவைப்பர் .எப்படியாயினும் படப்பிடிப்பு திரைக்கதையின் அமைப்பிலேயே நகர்வது எளிதாக இருக்கும் .
தலைமை ஒளிப்பதிவாளர் , லைட்டிங் எனப்படும் ஒளி அமைப்புக்கு , கதாபாத்திரங்களின் நகர்வுகளுக்கு ஏற்ப செயல் பட திரைக்கதையை அவ்வப்போது சரிபார்த்துக்கொள்வார் , அதாவது அடுத்த 3 ஷாட் எவ்வாறு அமையவேண்டும் என்பதை முதல் முதலில் உள்வாங்கிக்கொள்பவர் தலைமை மற்றும் செயல் ஒளிப்பதிவாளர் [operative camera man]. பெரும்பாலும்
தலைமை +செயல் ஒளிப்பதிவாளர் இருவரும் தொழில் ரீதியாக இணக்க மானவர்கள் . என்ன லென்ஸ் , field view , perspective எனும் சரியான கோணம் அனை த்தையும் செயல் ஒளிப்பதிவாளர் [operative camera man] துல்லியமாக செய்துவிடுவார். சில விசேஷ வகை கோணங்கள்/ ஒளி அமைப்புகள் இவற்றை தலைமை -செய்து பின்னர் படப்பிடிப்பை தொடர ச்சொல்வார்.இது அனைத்தையும் இயக்குனர், தலைமையுடன் முன்பே தீர விவாதி த்திருப்பார் . களத்தில் அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படியே ஏதேனும் தேவைப்பட்டால் , குறிப்பால் உணர்த்துவார்கள் ;எல்லாம் பயங்கர கில்லாடிகள்.
ஒவ்வொரு நடிகை நடிகருக்கும் உதவி இயக்குனர்கள் தனித்தனியே வசன பயிற்சி உச்சரிப்பு எல்லாம் சொல்லிக்கொடுத்து
, அழைத்துவருவர்..
தயாராக படத்தின் பெயர் சீன் எண் , ஷாட் எண் எல்லாம் உரக்க சொல்லி கிளாப் அடிக்க 10-20 வினாடிகள் முன் காமெரா ஓடத்துவங்கும்.
டைரக்டர் "ஆக்ஷன்" என்பார். உடனே நடிப்பு /நடனம்/ வசனம்/ சிரிப்பு /விசும்பல் எதுவோ ஒன்று துவங்கி பொருத்தமான ஏற்ற இறக்கங்களுடன் நடிக்க துவங்குவர். 2 உதவி இயக்குனர்கள் முகபாவங்களை கூர்ந்து கவனிப்பர் , ஒருவர் வசனம் பேசுவதை கூர்ந்து சரிபார்த்துக்கொண்டே வர, யாராவது சொதப்ப, கட் என்று அலறுவார்
இயக்குனர். உடனே காமெரா நிறுத்தப்படும். இயக்குனர் ஓடிச்சென்று என்ன குறை என்பதை விளக்கி
, சில சமயம் தானே நடித்துக்காட்டுவார். உடனே டச் அப் [பவுடர் பூச்சு] சரி செய்யப்பட்டு
மீண்டும் தொடங்கும். இப்படியே எல்லா காட்சிகளும்
பதிவிடப்பட்டு படம் ஷுட்டிங் நிறைவடையும்
. அவ்வளவு தானா என்றால் இல்லை. படக்குழு ஸ்டூடியோ வை விட்டு வெளியேறும். முக்கிய தொழில்
நுட்ப கலைஞர்கள் அடுத்த கட்டப்பணிகளை நிறைவேற்றத்துவங்குவர்.
வாடகைக்கு வாங்கி வந்த காமெரா , வாடகையுடன் உரிய றுவனத்திற்கு
திருப்பித்தரப்படும். பிலிம் சுருள்கள் பிராசஸிங் lab க்கு அனுப்பப்படும்.. முக்கிய
ஒளிப்பதிவாளர் என்ன வகை ஒளிப்பதிவில் படம் பிடித்திருக்கிறார் image density எவ்வளவு வரும் வகையில்
process செய்யப்படவேண்டும் என்பதை
குறிப்பு எழுதி அனுப்புவார்.[இதை gamma value என்பர் ] பின்னர் இந்த
காமாவை விளக்குகிறேன். பிராச ஸ் முடிந்து வந்ததும் எடிட்டிங் என்னும் பட த்தொகுப்பு
துவங்கும்.
வளரும்
அன்பன் ராமன்