Wednesday, August 30, 2023

CINE MUSIC –V DECORATIVE STRATEGIES

 CINE MUSIC –V    DECORATIVE STRATEGIES

திரை இசை - 5   அலங்கார உத்திகள்

திரைப்பட பாடல்கள் முன்னர் நாம் அறிந்திராத சொல்லமைப்புகளுடன் காட்சிக்கேற்ற உணர்வுகளை சுமந்து வருவன . எனவே இசை அமைப்பாளனின் பங்களிப்பு அபரிமிதமானது. நம்மை ஒவ்வொரு பாடலையும் கேட்கத்தூண்டும் வகையில் பாடலை ரசிகனின் காதுகளில் ரீங்கரிக்கச்செய்ய வேண்டும் அதுவும் படத்துக்குப் படம் , பாடலுக்குப்பாடல் இந்த நிலைப்பாடே நிரந்தரம் என்பதை யோசித்தால் இசை அமைப்பாளர் மீது வைக்கப்படும் சுமை எவ்வளவு கொடூரமானது என்பது விளங்கும். அதனால் தான் ஒவ்வொரு இசை அமைப்பாளரும் ஏதாவது ஒரு "அக்மார்க்" முத்திரையால் இது அவரது பாடல் என அடையாளப்படுத்திவிடுகிறார். ஆனால் இந்த அக்மார்க் வித்தையெல்லாம் ஒருவர் புகழ் எய்திய பின்னர் பயன்படும். ஆனால் துவக்கத்தில் ஒவ்வொரு இசை அமைப்பாளரும் தன்னை வேரூன்றிக்கொண்டு தழைக்க படாத பாடு பட வேண்டியிருக்கும் .

இரண்டாவதாக,  கால ஒட்டத்தில், இசைக்கருவிகள், ஒலிக்கோர்வைகள் அவ்வப்போது வெவ் வேறு  அவதாரம் தரித்தால் தான் தொடர்ந்து திரை இசை கேட்பவரை வசீகரிக்கும் . இசைமாற்றம் அவ்வப்போது ஒலிக்கும் பழைய பாடல்களில் இருந்த கட்டமைப்பில் பின்னர் நுழைந்து விட்ட மாற்றங்கள் இசையின் metamorphosis என்னும் உருமாற்றத்தை நினைவூட்டுகிறது. ஒரு அடிப்படை வித்தியாசம் பழைய பாடல்கள் குரலை வெளிப்படுத்த , பின்னர் வந்தவை ஒலியையும் , கருவிகளில் பிசாசுத்தனம் அதிகரித்திருப்பதையும் வெளிச்சம் போடுவதையும் நன்றாக உணரலாம் .

எப்படியானாலும் பாடல் கவனத்தை ஈர்க்க வேண்டும் ; அதை நிறுவுவதே இசை அமைப்பாளாரின் திறமை ;ஆகவே பல உத்திகளை கைக்கொள்வார் இசையமைப்பாளர். அவற்றுள் எளிய உத்தி ரிதம் என்னும் தாள அதிர்வில் தோன்றும் வசீகரத்துள்ளல் . கேட்பவரை தாளமிடத்தூண்டும் beat என்னும் நரம்பை முறுக்கேற்றும் உத்தி. இந்தவகைப்பாடல்கள் அவை வந்தவுடன் பெரும் வரவேற்பைப்பெறும் . உதாரணம்

 

1 யாரடீ நீ மோஹினி – ‘உத்தமபுத்திரன் - ஜி. ராமநாதன்

2 மாமா மாமா மாமா – ‘குமுதம் - கே .வி. மகாதேவன்

3. அடி  என்னடி ராக்கம்மா – ‘பட்டிக்காடா பட்டணமா - எம். எஸ். விஸ்வநாதன்

4 கண்ணாடி மேனியடி –‘கொடிமலர் -எம் எஸ் விஸ்வநாதன்

5. அம்மனோ சாமியோ, அத்தையோ , மாமியோ – ‘நான் - டி . கே ராமமூர்த்தி

6 மச்சானப்பாத்தீங்களா – ‘அன்னக்கிளி - இளையராஜா

ஆனால் பாடலின் சொற்கோர்வை மற்றும் காட்சியின் தன்மை இவை பொருந்தி வராமல் , தாளத்தை வைத்துக்கொண்டு பாடலை கரை சேர்க்க முடியாது. ஆரம்ப நாட்களில் தூக்கலான லயம் [தாளம்] கொண்ட பாடல்கள்                            டப்பாங்குத்து ப்பாடல்கள் என்பதாக விமரிசர்கள் குரல் எழுப்பி வந்தனர் . இப்போது பெரும்பாலும் டப்பாங்குத்து , பிளவுபட்டு டப்பாவும் குத்தும் என்று ஆகி  குத்துப்பாடல்கள் , ஏனைய டப்பாப்பாடல்கள் என்றே ஆகிவிட்டதை என்ன சொல்ல? இப்போது எந்த விமரிசகனும் வாயை என்ன , எதையும் திறப்பதில்லை

பிற வகை பாடல் கட்டமைப்புகள் யாவை என்று பார்ப்போம் . நான் இசை அறிவு இல்லாத பாமரக்கூட்டத்தில் ஒருவன் . எனவே கலைச்சொற்கள் மற்றும் ராக நாமதேயங்கள் குறித்துப்பேசும் தகுதியும் தெம்பும் எனக்கில்லை. பாடல்களை உன்னிப்பாக கவனித்து அவற்றின் தூக்கலான தன்மைகள் கொண்டு எழுத முற்படுகிறேன். பிழை இருப்பின் பொருத்தருளவும்

ராக அமைப்பில் பொருத்தப்பட்ட பாடல்கள் எளிதில் வெற்றி பெறுவதையும் காணலாம்

அவற்றில் சில

முல்லை மலர் மேலே [அம்பிகாபதி] ஜி ராமநாதன்

ஏரிக்கரையின்  மேலே [முதலாளி ] கே வி மகாதேவன்

சிங்கார வேலனே தேவா [கொஞ்சும்  சலங்கை ]எஸ் எம் சுப்பையா நாயுடு

மன்னவன் வந்தானடி [திருவருட்செல்வர்] கே வி மஹாதேவன்

ஒருநாள் போதுமா [திருவிளையாடல் ] கே வி மஹாதேவன்

ஆடாத மனமும் உண்டோ [ மன்னாதி மன்னன் ] விஸ்வநாதன் -ராமமூர்த்தி

தங்கரதம் வந்தது [கலைக்கோயில் ] விஸ்வநாதன்- ராமமூர்த்தி                                                                                  

மனமே முருகனின் மயில் வாகனம் [மோட்டார் சுந்தரம் பிள்ளை ] எம் எஸ் விஸ்வநாதன்

முத்துக்களோ கண்கள் [நெஞ்சிருக்கும் வரை ] எம் எஸ் விஸ்வநாதன்

மாதவிப்பொன் மயிலாள் [இருமலர்கள் ] விஸ்வநாதன்

7 ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் [அதிசய ராகம்] எம் எஸ் விஸ்வநாதன்

மல்லிகை என் மன்னன் மயங்கும் [தீர்க்க சுமங்கலி] எம் எஸ் விஸ்வநாதன்

மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே [நூல் வேலி ] எம் எஸ் விஸ்வநாதன்

என்று ஏராளமான பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம் -அதுவும் பழைய திரைப்படங்களில் அள்ளக்குறையாத செல்வ ஊற்றாக பொங்கி பிரவகிக்கும் ராகக்குவியல்கள் ஏராளம்.

அதிலிருந்து அமைதியாக மெல்லிசை என்ற புதிய இசை வடிவத்தை வெளியே எடுத்தவர்கள் விஸ்வநாதனும் -ராமமூர்த்தி யு ம் என்பதை அறிவோம்.

அப்போது ஏராளமான உத்திகளை தமித்திரையில் கம்பீரமாக ;லவவிட்டவர்   எம் எஸ் விஸ்வநாதன் என்பதை செம்மையாக நிறுவிட பல சான்றுகள் உளபார்ப்போம்

வளரும்

அன்பன் ராமன்  

No comments:

Post a Comment

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...