EDUCATION - 5
கல்வி-5
இந்தக்காலத்தில் யாரை மணக்க வேண்டும் என்று பெற்றோர்
விரும்பும் தீர்மானத்தை ஏற்கும் நிலை வெகுவேகமாக வீழ்ச்சி அடைந்து வருவதைப்பார்க்கிறோம்.
அப்போது பெற்றோரின் பிடிவாதம் தூக்கி எரியப்படுவதைக்கண்டு துயருறும் பெற்றோர் அவன்/அவள்
மீது கல்வியில் உங்கள் விருப்பத்தைத்திணித்தீர்கள். உங்கள் ஆளுமை இப்போது ஜகா வாங்குகிறதே
ஏன்? அவன்[ள் ] உங்களை சார்ந்து இருந்தான்[ள்]. இப்போது தன்னிறைவு பெற்றுவிட்டதாக நம்புகிறான்/ள் . அதுனால உங்கள் பப்பு வேகலை.
ஒரு கட்டத்தில் உங்கள் விருப்பத்திற்கு செவி சாய்த்தான்/ள், என் விருப்பத்திற்கு செவி
சாயுங்கள் என வற்புத்துகிறான்/ள். சொல்லப்போனால் கல்வி குறித்து தீர்மானிக்கும் திறமையும்
ஆழமான புரிதலும் அநேக பெற்றோருக்கு இருப்பதில்லை .அதே சமயத்தில் நல்ல கல்வியுடன் உயர்
பதவிகளில் இருக்கும் பெற்றோர் வீட்டில் குழந்தைகளை எப்படி வழி நடத்துகிறார்கள் என்று
கவனித்தால் ஓரளவு புரிதல் ஏற்படும். நான் சொல்வது தர்மம்/ நியாயங்களைப்பின பற்றும்
பெற்றோர் வீட்டுக்குழந்தைகள் பற்றித்தான்
லஞ்சத்தில் திளைப்போரைப்பற்றி அல்ல.. லஞ்ச ஊழல் வழியே வாழும் பெற்றோர் ஒருநாளும் குழந்தை களின்
எதிர்காலத்திற்கு உத்திரவாதம் தர இயலாது. ஏனெனில் கல்விக்கு த்தேவை நல்வழி ஒன்றே. கல்வி
என்பது பட்டம் பெறுதல் அன்று. மாறாக எந்த நிலையிலும் புரிதலும் , குழப்பங்களுக்கு விடைகாணவும்
தேவையான தெளிந்த சிந்தனையும் தேவை . இவற்றைப் பெற மனம் ஒன்றிக்கற்ற கல்வி உதவி புரியும்.
ஏனைய அட்டைகளும் பட்டங்களும் பட்டயங்களும் “ஷோ கேஸ்’களை அலங்கரிக்க வேண்டுமானால் பயன்படும். . . செயல் ஆக்கங்களுக்கு
உதவாது. எனவே இப்போது நாம் அறிய வேண்டியது முறையான கல்விக்கான சரியான அணுகுமுறைகள்
குறித்தே..
வளரும் பருவத்தே விதைக்கப்பட வேண்டியது தான் கல்வி. கல்வி
வேறு நாம் வேறு அல்ல. நமது உடல் ஆரோக்கியம் எப்படி நம்முடனே தொடரும் ஒன்றோ அது போன்றதே
கல்வி; அது நம்முடனே வளர வேண்டும். பின்னால்
பார்த்துக்கொள்ளலாம் என்பது "திருமணம்" போன்ற நிகழ்வுகளுக்கு சரியாக இருக்கும்
கல்விக்கு அல்ல. கல்வி அவ்வப்போது பழுது நீக்கி தயார் நிலையில் இருக்கவேண்டிய யுத்த
தளவாடம் போன்றது.
படியுங்கள்
எனவே பாடங்களை புத்தகங்களிலிருந்து
படித்து புரிந்துகொள்ளத் துவங்குங்கள். தொடர்ந்து படிக்கப்படிக்க புரிதல் அதிகமாகும்.
அப்போது "உள்வாங்குதல்" இயல்பாக அமைந்து விடும். மனப்பாடம் செய்து உள்வாங்க
இயலாது. எனவே மனப்பாடம் செய்வதை தவிருங்கள் மனதில் அழுத்தம் குறையும். பாடங்களையும்
புத்தகங்களையும் பற்றிய அச்சம் விலகும்.
அச்சமும் சஞ்சலமும் கற்றலின் எதிரிகள். அவற்றை விரட்டி
அடிக்க "புரிதல்" ஒன்றே வலுவான ஆயுதம். எனவே எந்தப்பாடத்தையும் தொடர்ந்து
படிக்கப்படிக்க புரிதல் விரைவாகும்
படித்தும்புரியாவிட்டால்?
இதுதான்
உங்களின் நிலையை உணர்த்தும் கட்டம். ஆம் .இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் . 1 . இந்த குறிப்பிட்ட பாடப்பகுதி இன்னும் வகுப்பில் கற்பிக்கப்படாமல்
இருக்கலாம் . அல்லது 2 ஆசிரியர் சொல்வதை செவிமடுக்காமல்
வேறு எங்கோ கவனம் செலுத்தி , இப்போது படித்தாலும் புரியவில்லை / .புரிவதில்லை . இந்த
"புரியவில்லை" யின் அடிப்படையை புரிந்துகொள்ளாமல் ட்யூஷன் வகுப்புக்கு ஏற்பாடு
செய்யும் பெற்றோர் எளிய மொழியில் சொல்வதானால் "வெறும் அவசரக்குடுக்கைகள்
". ட்யூஷன் வகுப்பு புரியவில்லை / .புரிவதில்லை என்ற அங்கலாய்ப்பை மழுங்க வைக்கும் ஆனால் புரியவைக்காது
. அநேக ட்யூஷன் வகுப்புகள் 30-40 பேர் கூடும் இடம் அது இன்னொரு வகுப்பறை போன்றது. புரியவில்லை
என்ற அவலத்தை நாமே வளர்த்துக்கொண்டு ட்யூஷன் வைத்துக்கொண்டால் படித்துவிடலாம் என்ற
மாயையில் சிக்குண்டு அல்லல் உறுகிறோம். சொற்கள்,
அவற்றின் பொருள் இரண்டையும் புரிந்து கொள்ளாமல் ஒரு கருத்தைப்புரிந்து கொள்ளுவது எளிதன்று.
அதற்கான தீர்வு யாது?
தொடரும்
அன்பன் ராமன்
புத்தகத்தை படித்தால் தானே மண்டையில் ஏறுவதற்கு
ReplyDeleteபுத்தகத்தை ப்படி என்பதை மண்டையில் ஏற்றுவதற்கு த்தானே இவ்வளவு மெனக்கிடல்களும் .
ReplyDeleteநாட்டில் பல்வேறு பாட திட்டங்கள் பல்வேறு தரத்தில் இருக்கும் நிலையில் கற்பிக்கும் திறனும் குறைவாக இருக்கும் நிலையில் O C வகுப்பினர் மிக நல்ல மதிப்பெண் பெற்றால்தான் மருத்துவத்தில் சேர முடியும் என்ற நிலையில் நீட்டிற்கு தனிப் பயிற்சி தேவை குறித்து தங்கள் கருத்து?
ReplyDeleteNEET is a well-designed scheme to assess the candidates' grasp/ comprehension through incisively framed questions. unless a concept is fully understood facing such competitive schemes will prove herculean. NEET expects competitors to understand 'kinks' by clarity of conceptual learning. Those who vomit predigested answers will miserably fail -no matter how tall a score they have managed in the traditional question-answer pattern. to be very clear NEET is reckoned as the qualifying step to enter profession study. So one has to be professional in learning.
ReplyDeleteThank you, sir. I fully agree.
ReplyDelete