Monday, August 28, 2023

5 He

 5 He

5 அவன்

காலை 11.00 மணிக்கு சென்னை வந்தான் . பரிச்சயமான இடத்தில் ரூம் ஏற்பாடு செய்துவிட்டு மணி பார்த்தான் 11.23. விறுவிறுஎன்று எதிர் platform சென்று பஸ் ஸில் ஏறினான். 40 நிமிடங்களில் காலனி க்கு வந்தான். வெய்யில் மண்டையைப்பிளக்கிறது, சரி என்று ட்ரை சைக்கிள் வியாபாரியிடம் இளநீர் வாங்கிக்குடித்தான் 40/- ரூபாய் . மெல்ல நடந்தான் .எல்லா தெருவும் ஒரே மாதிரி     இருந்தது முன்பு ஒரு  முறை  பார்த்த அடையாளங்கள் மனதில்  வந்துபோக             ஒரு தெம்புடன் நடந்தான்.

பெரு நகரங்களில் நேற்று இருந்த அமைப்பு நாளை தொடராது. எனினும் மனம்  உந்த தெருத்தெருவாக அலசியாயிற்று . ஒன்றும் இது வரை பிடிபட வில்லை. திடீரென்று ARISE AWAKE STOP  NOT UNTIL GOAL IS REACHED எனும் வாசகம் உந்திய அழுத்தத்தில் வீறு கொண்டு தேடினான் . நேரம் நகர்ந்துகொண்டே போக மணி மூணு . இன்னும் சாப்பிடவே இல்லையே என்று கடிகாரப்பசி அவனை துரத்தியது ..சரி இந்த பகுதியில் ஹோட்டல் இருக்குமே போய் சாப்பிடுவோம் என்று இப்போது ஹோட்டல் தேடலில் இறங்கினான் . ஒரு 4 தெருக்களைத்தாண்டி 5 வதில் நுழையும் வேளையில் சுமார் அரைக்கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சந்து முனையில் அம்புக்குறி நடுவில் ஓட்டல் என்று எழுதி இருக்க அம்பு சந்துக்குள் இடம் காட்ட வேகமெடுத்துப்போனான் .                                       

சந்துக்குள் பெரிய பச்சை நிற போர்டில் ஹோட்டல் ரஹ்மானியா ஆம்பூர் பிரியாணி ரெடி என்று ஒரு சிதிலமடைந்த பலகையில் எழுதி    கு ஸ் கா தயார் என்று இடுக்கில் வாசகம். வாசலில் 5, 6 பேர் இடம் இன்றி காத்துநிற்க நம்ப ஹீரோவோ சைவ உணவுக்காரன் . இத்தனை களேபரத்துக்குப்பின் மனம் சோர்ந்து சரி திரும்பிப்போவோம் என்று வந்த வழியே மீண்டான். சுமார் 20 அடி தூரத்தில் "அவள்" . ஒலிம்பிக் வீரனைப்போல ஓடி விஜி என்று அலறினான். விஜி முகம் திருப்ப அதிர்ந்தான். அவளுக்கு இரண்டில் ஒன்று அரைக்கண் ஆம் அவள் ஒன்றரைக்கண்ணினள் . இப்போது அவன் தனது இருகண்ணும் ஒன்றைநோக்கி ஒன்று திரும்ப இவனுக்கே ஒன்றரைக்கண் போல காட்சி அளித்தது . ஹி ஹி ஹி தப்பா கூப்பிட்டுட்டேன் என்று மன்னிப்பு கோரினான் . பரவால்ல சார் என்றது 1 1/2. இவன் பஸ் ஸ்டாப் எங்கிருக்கு என்று  விசாரித்து ஸ்டாப்பை அடைந்தான். LIC இலக்கு கொண்ட பஸ்                        

 நாம் போகவேண்டிய இடம் போகுமா ? ஒரே குழப்பம் . ஒரே வினாடி தான் ஓட்டம் நடையுமாக கருத்த கண்ணாடியும் விரித்த கூந்தலுமாக இவன் தேடி அலைந்த விஜி . அவள் பாய்ந்து பஸ் படிக்கட்டில் நிற்க மீண்டும் 'விஜி' என்று அலறினான். கூலிங் கிளாசை உயர்த்தியவள் ஹாய் , பை என்று கை அசைக்க இவனுக்கு துக்கம் கொப்பளித்தது. இது போன்ற விலாசமில்லா தேடல்கள் இனி கூடவே கூடாது என்று சபதம் எடுத்து ஆட்டோவில் மயிலாப்பூர் சென்றான். முதல் வேலையாக சரவணபவனில்  டிபன் சாப்பிட்டான் . சிறிது நேரம் குளக்கரையில் நின்றான் எப்போதும் போல் பல வண்ண மாமிகள். இன்னொரு ஆட்டோவில் சென்ட்ரல் போய் ரயிலைப்பிடிக்க வேண்டும் . ஜில்லென்று மாலை நேரக்கடற் காற்று சுகமாக வீச தெற்கு பக்க வானில் வெண் மேகம்  . அண்ணாந்து ரசிக்க பாக்கெட்டில் கை விட்டுக்கொண்டு வாய் பிளந்து சிரிக்கும் ராமசாமியாய் தெரிந்தது கஸ்தூரி ரெங்கனுக்கு. ராமசாமி யின் சிரிப்பில் பல அர்த்தம் .

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...