Sunday, August 27, 2023

SCIENCE -5 VACCINE

 SCIENCE -5

அறிவியல்வாக்ஸின் -5

வைரல் PLATFORM டெக்னாலஜி உதவியுடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் [ ஹைராபாத் ] கொரோனாவுக்கு எதிரான வாக்ஸின் தயாரிப்பில் இறங்கி இரவுபகலாக உழைத்து உருவாக்கிய வாக்ஸின் தான் கோவாக்ஸின் [COVAXIN] முற்றிலும் இந்தியத்தயாரிப்பு. கோவாக்ஸின் தயாரிப்பில் பாரத் பயோடெக் +இந்திய மருத்துவ ஆராய்ச்சி கௌன்சில் +தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட் களின் பங்களிப்பு உண்டு

கோவாக்ஸின்

செயலிழக்கச்செய்யப்பட்ட வைரஸ் அமைய்ப்புகள்  SARS-CoV-2 strain (NIV-2020-770);  பயன்படுத்தப்பட்டு கோவாக்ஸின் உருவாக்கப்பட்டது . வைரஸ் ப்ரோடீன் [ஆன்டிஜென்] அமைப்புகளை சந்தித்து விட்ட நமது நோய் எதிர்ப்பு--- ஆன்டிபாடி களை மிக விரைவாக உற்பத்தி செய்யும் திறனை வளர்த்துக்கொள்ள வாக்ஸின் பேருதவி புரிகிறது அலுமினியம் ஹைட்ராக்ஸைட் ஜெல் , TLR 7/8 agonist [விரோதி], ஆல்கஹால் , பாஸ்பேட் சலைன் இந்த வாக்ஸினில் உள்ள முக்கியப்பொருட்கள் . இவற்றில் உள்ள அகனிஸ்ட் [விரோதி] சில ஜீன் குறைபாடுள்ளவர்களுக்கு வெகுவாக உதவும் TLR =TOLL-LIKE RECEPTOR 7 / 8 சிலருக்கு குறைபாடுடையதாக இருப்பதால் கொரோனா தாக்கம் அவர்களை வெகுவாக பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த AGONIST, TLR க்கு எதிர் வினை புரிந்து நோய்எதிர்ப்பை மேம்படுத்தும் என்று இதை வாக்ஸினில் இணைத்துள்ளனர். நார்மல் ஜீன் அமைப்பினருக்கு AGONIST இடையூறு செய்வதில்லை. இத்துணை நுணுக்கங்களும் அதி விரைவாக கண்டறிந்து / நிறைவேற்ற அந்த வாக்ஸின் தயாரிப்புக்குழுவினர் எவ்வளவு கடுமையாக உழைத்திருப்பர் ?

மற்றுமோர் இந்திய தயாரிய்ப்பு கோவிஷீல்டு .இதன் தொழில் நுட்பம் ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ரா -ஜெனிகா [இங்கிலாந்து ] மற்றும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் OF  இந்தியா வின் கூ ட்டு முயற்சி.

கோவிஷீல்டு

இது சற்று மாறுபட்ட[வைரல் வெக்டர் PLATFORM ] தொழில் நுட்பத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டது . அடினோவைரஸ் இனத்தின் சிம்பன்ஸீ வைரஸ்மாற்றம் செய்யப்பட்டு  ChAdOx1 nCoV- 19 Corona Virus Vaccine       [RECOM BINANT] ஆக இரு வெவ்வேறு வைரஸ் இணைப்புகளாக தொகுத்து உருவாக்கப்பட்ட வாக்ஸின்COVISHIELD’ அதாவது கொரோனா வைரஸின் புற ப்ரொட்டீன் களை சுமக்க சிம்பன்ஸீ வைரஸ் அமைப்பு சற்று மாற்றி அமைக்கப்பட்டதால் வைரல் வெக்டர் PLATFORM டெக்னாலஜி எனப்படுகிறது. இதில் செயல் இழந்த சிம்பன்ஸீ வைரஸ் + கொரோனா வைரஸின் புற ப்ரோட்டீன் +இதர பொருட்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இதர பொருட்களில்  முக்கியமாக அலுமினியும்ஹைராக்ஸைட் ஜெல், L –HISTI DINE , L – HISTIDINE ஹைட்ரோக்ளோரைட் மோனோ ஹைட்ரேட், மெக்னீசியம் க்ளோரைட் ஹெக்ஸாஹைட்ரேட் , பாலிஸார்பேட்  80,  எத்தனால் ,சுக்ரோஸ் , சோடியம் க்ளோரைட் மற்றும் டை சோடியம் EDETATE டைஹைட்ரேட் [EDTA] அடங்கியுள்ளன. கோவாக்ஸின் தயாரிக்கப்பயன்பட்ட தொழில் நுட்பம் முன்னர் Ebola வைரஸ் நோய்க்கு வாக்ஸின் உருவாக்க பயன்பட்டது என கட்டுரைகள் தெரிவிக்கின்றன.

SPUTNIK - V  ஸ்புட்னிக் - V ரஷ்ய வாக்ஸின்

வைரல் வெக்டர் வாக்ஸின் [viral vector vaccine ] Sputnik -v  ரஷ்ய தயாரிப்பு. GAMELEYA  RESEARCH INSTITUTE OF  ERIDEMIOLOGY AND  MICROBIOLOGY ஆய்வுக்கூடத்தில் டெனிஸ் லோகுனோவ் [Denis Logunov ] தலைமையில் ஒரு மாறுபட்ட உத்தியில் உருவாக்கப்பட்டது

மனிதர்களுக்கு சளி ஜலதோஷம் உருவாக்கும் 2 அடினோவைரஸ் களை பயன்படுத்தி அதில் கொரோனாவைரஸின் முழு நீள புறப்ரோடீன் உருவாக்கும் ஜீன்களுடன் சேர்த்து வாக்ஸின் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாக்ஸினில் உள்ள அடினோவைரஸ்கள் வெவ்வேறு வகைகளை  [SEROTYPE  களை ] சார்ந்தவை. . அவை முதல் பகுதி ... சீரோடைப் 26 [Ad26] எனவும் இரண்டாம் பகுதி சீரோடைப் -5 [Ad 5 எனவும் அறிவித்துள்ளனர். இவற்றுடன்   ட்ரிஸ் அமினோமீத்தேன் , சோடியம் க்ளோரைட் ,         ஸுக்ரோஸ் , மக்னீஷியம் க்ளோரைட் ஹெக்சாஹைட்ரேட் அடங்கியுள்ளன.

SPUTNIK LIGHT [RUSSIAN] ஸ்புட்னிக் லைட் என்ற வாக்ஸின் ஸ்புட்னிக்-V [இரட்டை வைரல்] வாக்ஸினின்  முதல் பகுதியாகிய சீரோடைப் 26 [Ad  26] மட்டுமே பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

Johnson & Johnson Coivid-19 vaccine                              ஜான்சன் அண்ட் ஜான்சன் வைரல் வெக்டர் வாக்ஸின்

இந்த வாக்ஸினும் அடினோவைரஸ் [Ad 26] வைரல் வெக்டர் அடிப்படையில் ஆனது தான். கொரோனா  புறப்ரோடீன்களுக்கான வைரஸின் DNA இழையை செலுத்தி , ப்ரோடீன் தோற்றுவித்து அதற்கான நோய்எதிர்ப்பு ANTIBODY களை  உருவாக்க உதவுகிறது.

மேலும் வளரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. Though number of vaccines are in the market in North America at present Covid is attacking many though not seriously.
    Venkataraman

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...