Friday, September 29, 2023

FOR US TO UNDERSTAND

 FOR US TO UNDERSTAND

நம் புரிதலுக்கானவை

குழந்தைகளின் கல்வி குறித்த எதிர்பார்ப்பும், அச்சம் கலந்த பரபரப்பும் பெற்றோர் மனதில் எழுவதும் அதுவே மனமெங்கும் வியாபிப்பதும் தற்போது ரேஷன் கார்டு, ஆதார்கார்டு போல அனைத்து இல்லங்களிலும் புகுந்து விஸ்வரூபம் கொண்டுள்ள ஒரு மனோ நிலை.. இப்போது இருக்கும் அளவுக்கு இந்த கவலை;நியாயமானதா என்ற கேள்வி எழுகிறது. எல்லை மீறிவிட்ட  ஒரு வியாதியாகவே நான் பார்க்கிறேன்.

 ஒவ்வொரு குழந்தைக்கும் எண்ணற்ற திறமைகள் இருக்கும். அவை யாவை என்பது கூட நமக்கு தெரிவதில்லை; நாமும் கூர்ந்து கவனித்து குழந்தையின் நாட்டம் குறித்து தெரிந்து கொள்ள எத்தனிப்பதில்லை.  வியாதி வந்தவனுக்கு வியாதிக்கு சற்றும் குறையாத எதிரிகள் நமது உறவினர்களே. உன் பையன் என்ன படிக்கிறான்? 4ம் க்ளாஸ் . உடனே உறவு சொல்லும் "ட்யூஷன் . வைத்தாயிற்றா?

" இப்பவே எதுக்கு ? ன்பான் தந்தை

ஐயோ நீ என்ன உலகம் தெரியாதவனாய் இருக்கிறாயே, உனக்கு பையன் மேல அக்கறையே இல்லை போலிருக்கிறதே என்று த்ஸோ    த்ஸோ என்று அனுதாபக்கண்ணீர் உகுத்துக்கொண்டே ஷ்யாமளா கோமளா என்று ஒருத்தியை கூப்பிட்டுஇவனைப்பார் பையன் 4ம் க்ளாஸாம், இன்னும் ட்யூஷன் வெக்கலையாம் அய்யய்யோ என கல்யாண முகூர்த்தத்தில்  அமங்கல வார்த்தை உதிர்ப்போர் ஏராளம். அந்த பெண்மணி, பார்த்து ஏற்பாடு பண்ணுங்கோ என்று குழந்தையின் தந்தைக்கு சொல்லிவிட்டு அகன்று போவாள் இப்படி விலையில்லா ஆலோசனை வழங்கும் counsels பெரும்பாலும் உறவினர் வட்டத்தில் அநேகம்.

நமக்கென்ன என்று கடந்து போவதோ / அவரவர் பார்த்துக்கொள்ளட்டும் என்று விலகுவதோ இல்லாமல் மூக்கை நுழைக்கும் உறவினர் மிகவும் அதிகம். விரிவுரையாளர் போல் அறிவுரையாற்றும், அவரது குழந்தைகள் குறித்து கிளறினால் முகூர்த்தத்துக்கு நாழி ஆச்சு என்று தலைமறைவு ஆவார். இவற்றை வெற்று உபதேசம் என உணர்க.

சரி, நாம் செய்ய வேண்டியன யாவை?

சிறு வயது முதல் வீட்டில் வாய்விட்டு உரக்க படிக்கப்பழக்குங்கள். உச்சரிப்பில் நிகழும் பிழைகளை ஆரம்பத்திலேயே  களைந்து விடுங்கள். உறக்கப்படிக்க படிக்க inhibition என்னும் தயக்கம் முற்றாக மறைந்து, அதிக தகவல்களை பலர் முன்னர் விவாதிக்க மனதளவில் குழந்தைகள் தயாராகும்.  தற்கால குழந்தைகள், மௌனிகளாகவே வளர்ந்து இன்டர்வ்யூ வில் கூட வாய் திறக்க மறுக்கிறார்கள். வாயைத்திறந்தால் தப்பும் தவறும் ஏற்படும் என்று திடமாக நம்பும் ஜடமாக காட்சியளிக்க வைத்த பெற்றோரும் .ஆசிரியர்களும் கண்டனத்துக்குரியவர்கள்.

மொழிப்பாடங்களை நன்றாக கற்றுத்தாருங்கள். மொழியின் செயல்பாடுகள் அறியாமல்/முறையான சொற்கள் அறியாமல் தடுமாறுவதும் மௌன நிலைக்கு உண்மைக்காரணிகள்.         பல பிரகிருதிகள் உளறுவதுஇங்கிலிஷ், தமிழ் இதெல்லாம் வேணாம், சப் ஜெக்ட்ல மார்க் வாங்கு.

 சப் ஜெக்ட்ல மார்க் வாங்கு என்று அவனை க்கெடுத்தவர்களா பின்னாளில் கூட இருந்து வழிநடத்துபவர்கள்? என்னுடைய கோபம் அலறுகிறது " கோமாளிகளே மொழி இல்லாதவனும் விழி இல்லாதவனும் தடுமாறுவதைத்தவிர வேறு எதையும் சாதிக்க இயலாது.  மொழியின் செயல் முறை அறிந்தவர்கள் எந்த சூழலிலும் தெளிவான கருத்தை முன் வைத்து எளிதில் வெல்வதை பார்க்கிறோம் மொழி [எந்தமொழியும்]தரும் தன்னம்பிக்கை மகத்தானது. இந்த உண்மை அறியாமல் வீர வசனம் பேசும்  .அனைவரும் வெத்து வேட்டுகளே.

 எனவே பள்ளி நாட்களிலேயே  மொழிகளின் அடிப்படை நுணுக்கங்களை இயன்ற அளவு கற்றுக்கொள்ளுங்கள். அந்த ஆயுதத்தின் வலிமை, பயன் படுத்ததெரிந்தவனுக்குத்தான் பலன் தரும். அவர் சொன்னார், இவர் சொன்னார், என்று பேசும் அரசியல் rhetoric ஆசாமிகள், பெருச்சாளிகளை ப்போல் அடித்து விரட்டப்பட்ட வேண்டியவர்கள். Rhetoric = loud, confused empty talk என்று ஒரு ஆழ்ந்த விளக்கமும் இருக்கிறது

நமது பல இயலாமைகளுக்கு இந்த rhetoric வாதங்களை நம்பியது தான் காரணம்  என்பதை இனியாவது உணருங்கள். முயற்சியை பழிக்கும் எந்த உத்தியும் உள்நோக்கம் கொண்டது என்று இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் கிணற்றுத்தவளைகள் மட்டும் அல்ல, அலாஸ்கா பகுதியில் என்றோ தோண்டப்பட்ட கிணற்றில் வாழும் 18ம் தலைமுறை தவளைகளை  விட சற்றும் உயர்ந்தோர் இல்லை என புரிந்து கொள்வோம்.

பல சமூக நிலைப்பாடுகள் அனைவருக்கும் பொருந்துமா? இதை யோசிப்பதில்லை. கணக்கு வேம்பென கசக்கும் மாணவனை ட்யூஷன் வைத்து என்ஜினீயர் ஆக்கி விடுவேன் என்று அலையும் பெற்றோரே உங்களால் என்ஜினீயரிங் பட்டம் வாங்கும் வரை தான் உதவ முடியும். அப்படி வளர்க்கப் பட்டவன் பில் டிங் சூப்பர்வைசர் ஆகலாம் அதற்கு இவ்வளவு துன்பப்படவேண்டியதில்லை.

நடனம் நாட்டியம், ஆர்ட் என்னும் சித்திரம் தீட்டும் கலை செஸ் , டென்னிஸ் கிரிக்கெட் கால் பந்து போன்ற துறைகளில் மனதிற்கு பிடித்து முன்னேறியவர்கள் என்ன வீழ்ந்து விட்டனர்? போலியாக வற்புறுத்தினால், பங்களிப்பு மிகவும் தரம் குறைந்து தான் இருக்கும் . பிடிக்காத எதிலும்,மனம் லயிக்காது. மனஆதிக்கம் குன்றினால் செயல் திறன்    உச்சத்தைத்தொடாது. உச்சம்எட்ட வேண்டுமெனில், அவரவர் நாட்டம் மிகுந்த துறைகளில் முறையான கல்வி/பயிற்சி பெற வாழ்வும் ஆரோக்கியமாக இருக்கும் இரவு பகல் ட்யூஷன் தேவை இல்லை.

 மனங்களை சிந்திக்க விடுங்கள். மார்க் மார்க் மார்க் என்று கீரை விற்பவர்களைப்போல் கூவிக்கொண்டு இருக்காதீர்கள். இதைப்புரிந்துகொள்ளாவிடில் நீங்கள் பொருளையும் நிம்மதியையும் இழப்பது சர்வ நிச்சயம்

தொடரும் அன்பன் ராமன் 

1 comment:

  1. I was residing in a street with only 18 houses. I use to read loudly and this can be heard by all the other houses. My friend’s father after hearing my sound ,instruct his son to study. Though I was an average student the people of that street used to praise me that I was an intelligent student though I did not deserve for that encomium.
    Venkataraman

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...