Thursday, September 28, 2023

CINE DIRECTION / DIRECTOR- 9

 திரை இயக்கம் / இயக்குனர்-9 

 திரை இயக்கம், பல சோதனைகளையும் சாதனைகளையும் தொடர்ந்து தரவல்லது. ஆனால் ஓர்  முழூமையான புரிதல் கொண்ட இயக்குனர் என்று வெகு சிலரையே அடையாளப்படுத்த முடியும் ஏனெனில் இயக்குனர் பணி  பல்முகம் உடையது. அதில் கதை , வசனம் காட்சியின் நீளம் நளினம் என பல அங்கங்கள் கொண்டது  இவை நீங்கலாக perspective என்னும் காட்சிப்படுத்தும் உத்தி முதன்மையானது. இதை செம்மையாக  நிர்வகிக்க ஒரு காட்சி திரையில் எவ்வாறு தோன்றும் என நிர்ணயிக்கும் ANTICIPATION எனும் எதிர்நோக்குத்திறன் வலுவானதாக இருந்திடல் வேண்டும் .மேலும் கேமரா பொசிஷனிங் அமைப்பு குறித்த ஒரு ஆழ்ந்த அனுபவம் கட்சிக்கு வலு சேர்க்கும். சில இயக்குனர்களுக்கு இவை ஏதோ மேல்நாட்டு நடைமுறைகள் என்ற பலவீனமான பார்வையும் உண்டு.  எனவே அவர்கள் வெளிப்புற காட்சிகளை வைத்து சமாளித்துவிடலாம் என்று கோவில்பட்டி கதையை ஸ்விட்சர்லாந்தில் படமாக்கி ரசிகர்கள் கண்ணில் மண்ணைத்தூவி வசூலில் ஜமாய்த்துவிடலாம் என்று அங்கே முகாமிட்டு படம் எடுத்து "வெளிப்புறக்காட்சிகள் காண " கண் கோடி வேண்டும்" என்று விளம்பரம் செய்து தப்பிக்க பார்ப்பார்கள்.  ஒளிப்பதிவாளருக்கும் பெரும் சவால் இந்த கருத்தம்மாவை யும், எலுமிச்சை கிழவனையும் பனிசூழ்ந்த மலை முகட்டில் நன்றாக படம் எடுப்பது.. இப்போது 3 குழப்பம் எலுமிச்சை நிற ஆண், கருத்த ஹீரோயின், பொருத்தமே இல்லாத வெண்பனிப்பொழிவு இவற்றை சமன் செய்ய ஒளிப்பதிவுஉத்தி. இவை உள்ளிட்ட இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள, ஒளிப்பதிவாளரின் நியாயமான தேவைகளை நிறைவு செய்ய இயக்குனர் முன் வந்தால் தான் ஒளிப்பதிவு சிறப்பாக செய்யப் படும். சரி , மேக்-அப் குறித்த அடுத்த தலைவலி; இந்தியாவில் ஒரு பெயர் சொல்வர். அந்தப்பொருளுக்கு சுவிட்சர்லாந்தில் என்ன பெயர்? மண்டை வெடிக்கும். .12 டப்பாவை அள்ளிக்கிட்டு வரவேண்டியதுதானே? ப்ரொடக்ஷன் மானேஜர் அலற, மேக்கப் சுந்தராஜூ :சார் 14 டப்பா கொண்டாந்தேன் நேத்து 2 வது நாள் ல அந்த நெய்வேலி அம்மா [ நிலக்கரி நிறம்] ஸ்விட்சர்லாந்து பனி மாதிரி இருக்கணும் னு 12 டப்பா காலி அந்தம்மா ட்ட சொல்லுங்க இல்லேன்னா என்ன விட்ருங்க நான் பாட்டுல பால் பாக்கெட் போடபோறேன் அது ரொம்ப கவுரவமான பொழப்பு என்று சுந்தர்ராஜூ கொந்தளிப்பார். இதற்கும் டைரக்டரே ஏற்பாடு செய்ய வேண்டும் இதற்கிடையில் சார் zurich போகலாமா சார் என்று நெய்வேலி கிளம்ப, டைரக்டர் New castle போகலாம் என்பார் ஆத்திரம் தீர. ரசாயனம் தயாரிக்கலாம் போல இருக்கு என்று உதவி இயக்குனர்களிடம் கோபம் கொப்பளிக்க சொல்வார் டைரக்டர். அவர்கள் முழிக்க, உங்களுக்கு கருங்குரங்கு ரசாயனம் தெரியாதா என்று புரிய வைப்பார். இதையெல்லாம் தாண்டி நடன அசைவுகளை சொல்லி ஆட வைத்தால் குளிருதுசார் என்று கொஞ்ச, அடுத்த ஷாட் ராமகுண்டம் , தனுஷ்கோடி எங்கயாவது வெச்சுக்கலாம் என்று சிரித்துக்கொண்டே சொல்ல அங்க ரொம்ப கூலா இருக்குமா சார் என்று மேதாவிலாசம் பளிச்சிட சொல்லும் நெய்வேலி. இதெல்லாம் முடிந்து இப்போது மாறி மாறி வலது இடது இடுப்பு மற்றும் குதிங்கால் உடைந்து சுளுக்கு வந்தது போல் வளைத்துக்கொண்டு உடம்பைத்திருப்பிக்கொண்டு ஒவ்வொரு போஸாக கட்டி நிற்க ஒரு 32 கட் ஷாட்    பின்னர் 6 ஷாட் ஹீரோ சிறுவன் மீது சாய்ந்து கொண்டு நெய்வேலி கண்ணகி போல் தலைவிரித்து நிற்க, சிறுவன் மூச்சடக்கி விழுந்துவிடாமல் சிரிப்பது போல் பல்லைக்காட்டி 40-45       கட் ஷாட் தயார்.  இந்த வித்தை தெரியவில்லை எனில் கருங்குரங்கு ரசாயனம் தயாரிக்க போக வேண்டியது தான். அடுத்த காதல் காட்சி நீர்வீழ்ச்சியில். "போங்க சார் அவரு ரொம்ப பையனா இருக்காரு:" -நெய் வேலி . என்ன சொல்றாங்க பாத்தீ ங்களா" உதவி இயக்குனர்.    ஹீரோ அதுனால என்ன சார் இப்பல்லாம் ஆண்ட்டி களை  தான் பையன்க லவ் பண்றாங்க அதுனால ரொம்ப டரெண்டிங்    இருக்கும் என்றுசொல்லி விட்டு பாடல் காட்சியில்  மின்சாரம் தாக்கியவன் போல ஐயோ ஹையா பீலு, அங்கே பார் லு லு என்று உடலை வெட்டி வெட்டி ஆடி இரண்டு கைகளையும் ஸ்ட்ரோக் வந்தவன் போல பிலு பிலு  என்று கொடகொடத்து ஆட்ட , ஷூட்டிங் பார்க்க வந்தவர்கள் இந்த பெண் அவனுக்கு ப்ளாக் மாஜிக் செய்துவிட்டாள் என்று பேசிக்கொண்டு கலைந்தனர். ஊரில் நெய்வேலி யின் தகப்பனார் இயற்கை எய்திவிட்டதாக தகவல். எனவே ஷூட்டிங் கான்சல் ட் [CANCELLED ]. இப்படி விரயங்கள் அடிக்கடி நிகழ்வதால் திட்டமிடல் என்பது சோர்வடைந்து , எனோ தானோ வகை படங்கள் வந்து அதே வேகத்தில் மறைவது நடக்கின்றது /முன்பெல்லாம் இயக்குனர் நடித்துக்காட்டுவர், அபிநயங்கள் சொல்லித்தருவார் . எப்படி அண்ணாந்து பார்க்க வேண்டும், ஓரக்கண் பார்வை, புன்னகை , கிளோஸ் அப் ஷாட் எவ்வளவு வினாடிகள் கண் சிமிட்டாமல் பார்க்க வேண்டும் உள்ளிட்ட ஒவ்வொரு நிலையையும் சொல்லித்தந்து நேர விரயம் குறைத்து செயல் பட்டார்கள். அதே போல ஒளிப்பதிவாளர் சொல்லும் எல்லைக்குள் நின்று/ நடந்து பேச வேண்டும். அருகாமையில் நடன இயக்குனர்கள் வட்டத்துக்கு வெளியே நின்று ந டன அசைவுகளையும் செய்து காட்டி படப்பிடிப்புக்கு உதவுவர்.

இத்துணை இடங்களிலும் இயக்குனர் சதா சர்வ காலமும் திட்டமிடல், நிறைவேற்றுதல், நிர்வகித்தல் போன்ற அனைத்திலும் பங்கேற்பர் அன்றைய இயக்குனர்கள் உருவாக்கிய சரித்திர புராண படங்களில் வேலை பலமடங்கு அதிகரிக்கும். மாளிகைகள் ராஜ தர்பார், அந்தப்புரம் இந்தப்புறம் , தோழியர், ஊழியர் , கூனி வகை கிழவிகள் மகாராணி, ஒட்டியாணம் , புல்லாக்கு , பல்லாக்கு  குதிரைகள் யானைகள் படைக்கலன்கள்  என்று பெரும் கூட்டம்  . இதெல்லாம் இனிமேல் சாத்தியமே இல்லை போல் தோன்றுகிறது. 7 பேர் நடிக்கும் படங்களுக்கே பட்ஜெட் தலை சுற்றுகிறது . இனிமேல் கட்டபொம்மன், கர்ணன், திருவிளையாடல் எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது . அந்த இயக்குனர்கள் மாபெரும் ஆளுமைகள் என்பது எவ்வளவு நிதர்சனம். சமூக படங்கள் குறித்து பின்னர் கவனிப்போம்  

நன்றி அன்பன் ராமன்         

1 comment:

  1. We understand how difficult it is to direct a film
    Venkataraman

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...