Wednesday, September 27, 2023

CINE MUSIC- 9, STRATEGIES- 5

 CINE MUSIC- 9, STRATEGIES- 5

திரை இசை 9  -  உத்திகள் - 5

திரைப்பட பாடல்களை வெற்றிபெறச்செய்யவும், தொடர்ந்து தங்களின் தொழிலை வளப்படுத்தவும் பல வித உத்திகளை கையாள்வது இசையமைப்பாளர்களின் திறனும் தேவையும் என்பதை அறிவோம்.

அவற்றுள் முக்கியமானது மெலடி [MELODY ]எனப்படும் செவிக்கு இனிமை.

மெலடி யை இசைக்கருவிகளாலும் , தாள ஒலிகளாலும் நிர்வகிக்கமுடியாது.    ஏன் "நிர்வகிக்க" என கூறுகிறேன்? அப்படியே கருவிகள் கொண்டு இனிமையைத்தோற்றுவித்தாலும், அது பாடல் முழுதும் நிலைத்து நீடித்து கேட்பவரை கட்டிப்போடாது. திரைப்பாடலில் மெலடி என்பது பாடலின் பண்பாகவே ஒலிக்க வேண்டும்.. இசையமைப்பாளர்கள், அவ்வப்போது மெலடியை  தருவார்கள். அந்தவகையில் அநேக தருணங்களில் மெலடியை,  ஒரு சொக்கவைக்கும் உத்தியாக கையாண்டவர் எம் எஸ் வி [MSV என்ற பெயரையே பலர் MELODY SYNONYM VISWANATHAN அதாவது மெலடி யின் மறு  பெயர் விஸ்வநாதன் என்பர்]. அவரது மெலடி யின் தனித்தன்மை யாதெனில் கவிஞனின் சொற்களை பொருள் சிதறாமல் வளைத்து நெளித்து பாட வைப்பது என்ற அசல் AGMARK  முத்திரை.    இது, ஒரு மகத்தான உத்தி எனில் மிகை அல்ல.

எனக்கு இசை ஞானம் கிடையாது; எனினும் கேட்பதற்கு ரம்மியமான பாடல்கள் தான் வெற்றி பெற்றுள்ளன என்பது தான் மெல்லிசையின் தனிச்சிறப்பு என்பதை நான் அறிவேன் . ஏனெனில், படத்துக்குப்படம் புதிய கவிதைகள் இசைக்கோலங்கள் என்று சாம்ராஜ்யத்தை நிர்மாணிக்க மெலடி தரும் தெம்பும் ஊக்கமும் பிற காரணிகளால் வலுவாகத்தர முடியாது. சொல்லப்போனால், பிற காரணிகள் நம் மனதில் இடம் பிடிக்க, ஒரு பாடலை தொடர்ந்து கேட்கக்கேட்க தான் வாய்ப்பு ஏற்படுத்தும். ஒரு பாடலை கேட்டதும், மீண்டும் கேட்கத்தூண்டுவது என்னவோ மெலடி தான். இது சற்று நுணுக்கமான பகுதி.என் போன்ற ஒருவனால் இதை விளக்க முடியாது; ஆனால் மெலடி --அது   தரும் உணர்வை விலக்க வும் முடியாது. இயன்ற அளவு தெளிவு படுத்தப்பர்க்கிறேன்

பாடலின் மெலடி, சொல் தரும் ஒத்துழைப்பில் தான் அமையும் எனவே கவிஞர் தான் ஆதாரம்; ஆனால் கவிஞனின் சொல் அழகு பெறுவது இசை அமைப்பாளர் செய்யும் அலங்காரத்தில் தான் ஆகவே தான் கண்ணதாசன் கவி அரசர் என்றால் விஸ்வநாதன் செவி அரசர் .இவ்விரு அரசர்களும் ஏற்படுத்திய உயிரோட்டமான பாடல்கள் எண்ணற்றவை. பின்னாளில், இந்த கவி-செவி விளையாட்டில் வாலியும் முக்கிய பங்காற்றினார். சரி பாடல்களை  பார்ப்போம் .

1 ஆளுக்கொரு வீடு [1960] 63 வயது நிறைந்த பாடல் இன்றும் இளமை குன்றாமல்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், விஸ்வநாதன் -ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ் , பி சுசீலா

"அன்பு மனம் " மிக அற்புதமான டூயட் . கேட்டவுடன் மனதை ஈர்க்கும் வகையில் சொற்கோவைகள் கையாளப்பட்டு, அங்கங்கே சிறிது இடை வெளி கொடுத்து பாடியிருப்பது மிக நேர்த்தியாக அமைந்துள்ளது . பாடலின் துவக்கத்தில் குழையும் சாரங்கி அற்புதமாக பாதை அமைக்க அதன் மீது மெலடி என்னும் குதிரையில் பாடல் பயணிக்கிறது

"அன்ன மே நீ     இன்னும் அறியாத பா வை  யா ?"

"அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்   சமா குமா "? என்ற இடை வெளிகள் அற்புதம்.

பின்னிழையாக வயலின், அவ்வப்போது ஆழ்மன பிம்பமாக சாரங்கியின் ஒலி அனைத்தும் பாடலை மிதக்கவிட்டுள்ளன

இடையில் இருவரும் ஜோடியாக ஆலாபனை செய்து மெருகேற்றியுள்ளனர். பாடலின் துவக்கத்தில் இழையும் சாரங்கி ஆழ் மனதின் ஏக்கமாக ஒலிப்பது பாடலுக்கு ஒரு அற்புத அலங்காரம் காட்சியில் மலையாள நடிகர் சத்யனும் நம்மதமிழக ஊர் [நெல்லையம்பதி] விஜயலக்ஷ்மி இருவரும் விலகி இருந்தே பாடலின் பெரும் பகுதியில் பழங்கால பண்பு வழுவாமல்நடித்துள்ளனர் [இறுதியில் நெருக்கம் கொள்வது சினிமா இலக்கணம்]

பாடல் இணைப்பு: https://www.youtube.com/watch?v=4DkiK3F7Zvs

2 பெரிய இடத்துப்பெண் [1963] கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி ,பி சுசீலா ,டி எம் சௌந்தரராஜன்   "துள்ளி ஓடும் கால்கள் இ ங்கே ". பெ. .பெண் படத்தின் ஏனைய பாடல்கள் அறியப்பட்ட அளவுக்கு இந்தப்பாடல் பேசப்படவே இல்லை. ஆனால் இப்போது  60 வயதைக்கடைக்கும் இப்பாடல் அநேக களங்களில் பேசுபொருளாக உலவுகிறது.

வேறென்ன மெலடி தரும் சுகம்தான்  உள்மனதை அசைத்து ரீங்கரிக்கும் பாடல். அப்படி என்ன மெலடி என்பவர்கள் மீண்டும் மனதில் கொள்ளுங்கள் மெலடி பிறப்பது சொற்களை பாடும் விதத்தில் தான் என்று.  மிக எளிமையாக துவங்கி பல்லவியின் 3 ம் வரியில் கள்ளப்பார்வை போனதெங்கே கன்னித்தெய்வமே என்ற இடத்தில் வேறு ரூபம் கொள்ளும் இசை அமைப்பு ; பெண்  தன்  பங்கிற்கு  மா .... லை இடத்தேதி சொன்னார் மஞ்சளுக்கு தூது சொன்..னார்..... பாலருந்த நாள் குறித்.. தார் பஞ்சணையை விரித்து வைத் ...தா ஆர்  என்று பாட அடுத்த சரணத்தில் தா ......... மரை யில் தேன்எடுத்து என சொல்லுக்கு சொல் மெலடி தவழ  இறுதிசரணம் குன்றாத சுவையுடன் பயணிக்க, இருவரும் இனைந்து பாட , பிரிய மனமின்றி பிரியும் பாடல். அது என்ன   என பல்லவியின் முடிவில்  ஒரு ஏக்கப்பெருமூச்சு ?

வெறெந்தப்பாடலிலும் எம் எஸ் வி இந்த அமைப்பை கையாண்டதில்லை. துள்ளி யலைந்து ,தூண்டில் பார்வை போட்டவள் இப்படி அடங்கி ஒடுங்கி விட்டாளே என்பதை குறிக்கும் ஏக்கமாக வைக்கப்பட்டுள்ள . தனக்கு திருமணம் நிச்சசயிக்க பட்டுவிட்டது இனிமேல் துள்ள முடியாது என்பதை மா .... லை இடத்தேதி சொன்னார் மஞ்சளுக்கு நாள் குறித்   தார் ..... . என்று தன்னிலை விளக்கம்

https://www.youtube.com/watch?v=KQn3LtosIWU

3 காத்திருந்த கண்கள் [1963] கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ் ,பி சுசீலா

"காற்று வந்தால் தலை சாயும் நாணல்"

அற்புதமான மெலடி, கவியா,  இசையா , முகமா , கண்களா  எதைச்சொல்வது. ஆம், சாவித்ரியின் மின்னல் வேக முகபாவங்கள் எங்கோ மறைந்து விட்ட பொக்கிஷம்.  எவ்வளவு துள்ளல்? கவி அரசா ? செவி அரசா யார் வகுத்த உத்தி இது?   ஒரு கருத்தை ஒருவர் துவக்க, மற்றவர் முடிக்க அன்றைய சூழலில் புதுமை. ஆனால் பாடப்படும் நளினம் சொல்லில் அடங்காத வசீகரம்                         ஒரு இடத்தில் பாடலின் சரணம் "நானும்என்ற சொல்லில் முடிகிறது அதை இருவருமே பாட .சாவித்ரி ஒருபுன்னகையை உதிர்த்து விட்டு சிட்டாய் பறப்பது கண்ணில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்பாடல் நம்மை துவக்கத்திலியே பிடிப்பதும் பீடிப்பதும் பியானோ கிளப்பும் மந்தகாச ஓசையில் தான். அதன் பின்னர் ஹம்மிங் ஒலிகளும் பியானோவும் பாடலை வேறு களத்திற்கு உயர்த்த ஒரு மாறுபட்ட அனுபவம்.

பல்லவியில் தூதும் தூதும் என்ற மென்மையான ட்ரம் ஒலிக்க, சரண வரிகளில் தபலாவின் நர்த்தனம் இறு தியி ல் வரும் ஹம்மிங் எம் எஸ் வி யின் டிரேட் மார்க். திரையில் தோன்றுவதை செவ்வனே நிறுவிய நிஜவாழ்வுதம்பதியரின் ஒரு உன்னத ரொமான்டிக் நடிப்பில் பாடல் மேலும் பரிமளிக்கிறது 

https://www.youtube.com/watch?v=6TYndPjBkxo

4 தீர்க்க சுமங்கலி [1974] வாலி, எம் எஸ் விஸ்வநாதன் , வாணிஜெயராம்

"மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ" இது தான் வாணிஜெயராம் தமிழில் பாடிய முதல் பாடல் ஆனால் அசைக்க முடியாத ஒரு இடத்தைப்பிடித்தார் வாணி ஜெயராம் பின்னணிப்பாடகிகள் வரிசையில். அபார ஸ்வர ஞானம் வாணிஜெயராமின் வெற்றிக்கு வித்திட்டது. இப்பாடல் துவக்கமே ஒரு ஒலிக்கலவையாய் துவங்கி பின்னர் குழலில் மயங்கி லயிக்கும். மீண்டும்நினைவு கொள்வீர்  பாடப்பட்ட சொல் கையாளல் , இப்பாடலின் வெற்றிக்கு வழி வகுத்தது .

மல் .....ல்லி கை என் மன்ன.....ன்    .மயங்கும் பொன் ..... னா மலரல் ..லவோ  என்று ஏற்ற இறக்கங்களில் பயணித்து , என் .... நேரமும்  உன் ..... ஆஆ சை போல்   பெண்  பா .. வை நான்       பூ  …சூடிக்கொள்ளவோ 

இதே உத்தி சரண வரிகளிலும் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு -பாடலே மிக ரம்மியமாக ஒலிக்கிறது

.... றாயிரம் , இன்ப .. காவியம் உந்தன் கண்...களில் அள்ளி நான் ---- தந்தது

என் தே...வனே இவ் ---- வேளையில் உன்  தே .. வை என்னவோ  என்று பல பகுதிகளை கேட்டு மயங்கலாம். வெகு நேர்த்தியான டிரம்ஸ் வாசிப்பு பல்லவி மற்றும் இடையிசையில் மிளிர, அவ்வப்போது குரலுடன் பயணிப்பது தபலா தான் சில இடங்களில்வரும்  பிரஷ் ட்ரம் வெகு நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது. இப்பாடல் முழுவதுமே ஒரு இசைச்சுரங்கம் என்பது அடியேனின் கருத்து 

https://www.youtube.com/watch?v=D55-rlPv7_o 

வாழ்வு என் பக்கம் –[ 1976 ] கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் , கேஜெ  யேசுதாஸ் ,பி எஸ் சசிரேகா

"வீணை  பேசும்   அதை மீட்டும் விரல்களை க்கண்டு"

இந்தப்பாடல் மிக மென்மையான ஒன்று. ஆர்ப்பாட்டமில்லாத ஒலிக்கோர்வைகள், வீணையின் சுநாதம் மற்றும் போங்கோவின் நளின நடை. முத்துராமன் லட்சுமி பங்கு பெற்ற பாடல்.

இப்பாடலைப்பற்றிய விமரிசனம் கருவிகளுக்கு வலிக்காமல் இசைத்திருக்கின்றனர் என்பது. இது ஒரு முதலிரவுப்பாடல் ஆனால் நாயகி பேச்சுத்திறன் இல்லாத ஊமை.

வார்த்தை இல்லாத சரசம் கண்ணேஎன்று பாட வேண்டிய நிலையில் நாயகன் .    மிகத்தேர்ந்த நடிப்பை லட்சுமி கண்களாலும் முக வேறுபாடுகளால் காட்டும் காட்சி. அவரது உணர்வுகளுக்காக BS .சசிரேகா ஹம்மிங் செய்துள்ளார். [தமிழ் திரையில் ஹம்மிங்கில் இருவர் B வசந்தா வும் சசிரேகாவும் புகழ் பெற்றவர்கள்] இறுதியில் KJJ /BSS ஹம்மிங் பாடலை சிறப்பாக நிறைவு செய்துள்ளது  

https://www.youtube.com/watch?v=5sliTjKfPEo

இவ்வாறு எண்ணற்ற பாடல்கள் மெலடி என்னும் செவிக்கு இன்பம் தரும் உத்தியால் சிரஞ்சீவி நிலையில் இன்றளவும் நிலைத்து வாழ்வன

தொடரும்   நன்றி  ராமன்

1 comment:

  1. Thiugh I like all songs you have mentions, I am very particular in enjoying the song
    காற்று வந்தால் தலை சாயும் தாணல்
    Venkataraman

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...