Friday, September 1, 2023

TEACHERS’ ROLE-5

 TEACHERS’  ROLE-5

ஆசிரியப்பணி-5

ஒரு ஆசிரியர் தனது ஆளுமையை சிறப்பாகப்பதிவு செய்ய நிறைய வாய்ப்புகள் உண்டு. அவ்வாய்ப்புகளை தேடிக்காத்திராமல் , அன்றாடம் ஈடேற்ற , மிகச்சிறந்த சூழல் வகுப்பறைகளே என்பதை அனுபவ அடிப்படையில் சொல்ல முடியும்.. பெரும்பாலும் ஆளுமையின் வீரியத்தை நிர்ணயிப்பது 1] punctuality எனும் நேரம் தவறாமை 2] தோற்றத்தில் ஒரு எளிய ஆனால் கம்பீர உடை [சுத்தம், கசங்கல் கள் இல்லாமை , அனைத்து button களும் பிணைக்கப்பட்டமை,3] செயலில் சுறுசுறுப்பு 4] நினைவாற்றல் [உரிய நேரத்தில் சரியான தகவலை நினைவூட்டுதல்] இவை அடிப்படை ஆயுதங்கள் ; இதர அடையாளங்கள் 5 மாணவர்களிடையே வேற்றுமை பாராட்டாது செயல் படுதல் மற்றும் 6 தகுதி அடிப்படையில் மட்டுமே விடைத்தாள்களை மதிப்பீடு செய்தல். . இவைகளை  கடைப்பிடிப்பதில் 7 ஏற்ற இறக்கம் இல்லாது செயல் பட்டால் அவர் "குன்றாத ஆளுமை உடையவர்" என்று அனைவரும் அங்கீகரிப்பர் .8 ஆளுமை நிர்வாகத்தில் சமரசங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

நேரந்தவறாமை என்பது ஒரு மறைமுக கட்டுப்பாடு. அது என்ன ? உரிய நேரத்தில் வகுப்பறைக்கு வந்து விட்ட ஆசிரியன் ஊர்க்கதைகளை பேசிக்கொண்டிருந்தால் , அவரது நேரந்தவறாமை ஒரு கேலிப்பொருள் ஆகும் , மாணவர்கள் நேரந்தவறாமையின் முறையான பலன் கிட்டாமல் , கவனச்சிதறல் மற்றும் பிற ஒழுங்கீனங்களை பின்பற்ற வழி வகுக்கும். மாறாக பாடத்தில் கவனம் செலுத்தினால் , மெல்ல மெல்ல அனைவரும் ஆசிரியரின் போதனைகளை செவிமடுப்பர். மேலும் மனம் ஒன்றிக்கற்கும் போது இயல்பான ஐயப்பாடுகள் எழும்; அப்போது உரிய விளக்கம் தந்து , மேலும் தொடர ஆசிரியர்  புறக்கணிக்க வொண்ணாத செயல் வீரன் ஆகிறார்.

இதன் விரிவாக்கம் தான் கற்பித்தல் என்னும் ஆசிரியப்பணி. கற்பித்தலில் உள்ள குறைகள் பெரும்பாலும் தனி மனித பலவீனங்கள்  என்றே வகைப்படுத்தலாம்.

1. SYLLABUS -என்ற பாடப்பகுதியை முடிப்பதில் நாட்டம் ;ஆனால் அதை முறையாகச்செய்யாமல் , விரைந்து முடித்த பின் என்ன பலன்? இதற்கு கடமை ஆற்றுவதை விடுத்து , கடனுக்கு செய்தல் என்று பெயர் இது வெறுப்பையும் , விரக்தியையும் ஏற்படுத்தி , குறிப்பிட்ட பாடப்பகுதி [SUBJECT ]மீது அடங்காத கோபத்தை வளர்க்கும்

2 ஒரே SUBJECT ஆயினும் சில CHAPTER களை விரிவாகவும் , பலவற்றை நாட்டமின்றியும் விரைந்து கடப்பதும் ஆசிரியரின் திறமையின் மீது விமரிசனம் தோன்ற வழி வகுக்கும். "இவருக்கு அந்த SUBJECT சரியாக தெரியாது அதனால் ஒப்பேற்ற முயற்சிக்கிறார் " இது மாணவரிடையே ஆழமாகபரவி , குறிப்பிட்ட SUBJECT க்கு 'அந்த' ஆசிரியர் வருகிறார் என்றால் ,அந்த வகுப்புகளை புறக்கணிக்க தயங்கமாட்டார்கள் .

3 சந்தேகங்கள் குறித்த வினாக்களுக்கு இயன்றவரை முழுமையான விடைதர முயற்சித்தல் நலம் . கேள்விகேட்பதை தன மீது தாக்குதல் என்றெண்ணும் எவரும் ஆசிரியப்பணிக்கு உற்றவர் அல்லர்.விடை தெரியவில்லை எனில் பின்னர் விளக்குவதாக சொல்லி, அதே போல் விளக்கிட ஆசிரியர் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்படுவார் என்பதை கருத்தில் கொள்க .

4 நிதானமாக விளக்கங்கள் கிடைக்கும் போது மாணவரின் கற்றல் ஈடுபாடு வலுப்பெறும்.

5 குரலை உயர்த்தி , தெளிவாக உச்சரித்து பேசினால் கண் அயர்தல் நிலை விரட்டி அடிக்கப்படும்.

6 மதிய வகுப்புகளில் தோன்றும் ' LULLA BY ' உணர்வுக்கு பல ஆசிரியர்களின் வறட்டு முறைகளே பெரும் காரணம்.

7 அன்றாடம் , வகுப்பின் இறுதி 3 நிமிடங்களில் அன்றைய பாடப்பகுதியை சுருக்கமாக தொகுத்து சொல்லுங்கள்

                                                                                  அல்லது

8 அடுத்த வகுப்பில், சென்ற வகுப்பின் தகவலை நினைவு கூர்ந்து மேலே தொடருங்கள் ; சென்றவகுப்பிற்கு வாராதவரும் கூட மனதால் பாடத்தை ஏற்க முயல்வர்.

9 ஒவ்வொருநாளும் இறுதியில் "ஏதேனும் ஐயப்பாடு உள்ளதா என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள் ; தேவைப்பட்டால் அன்றோ அடுத்த  வகுப்பிலோ விளக்குங்கள்

10 அனைத்து புதிய சொற்களையும்  தெளிவாக கரும் பலகையில் எழுதி , மாணவர்களை குறித்துக்கொள்ள அறிவுறுத்துங்கள்.. இவை அனைத்தும் ஆசிரியரை முழுமை அடைய உதவும்.

பிற முன்னேற்பாடுகள் குறித்து பின்னர் விவாதிப்போம் .அவை வகுப்பிற்கு வருமுன்  பின்பற்றப்பட வேண்டியன

தொடரும்

அன்பன்  ராமன்

1 comment:

  1. Indian punctuality தான் இங்கே பொதுவாக கடைபிடிக்கப்படுகிறது.
    அது போல பொதுவாக monologue தான் class room ல் நடக்கிறது.

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...