Sunday, October 1, 2023

CLIMATE-3

 CLIMATE-3

வானிலை- 3

பூமிக்கு வெளியே அமைந்துள்ள அடுக்குகள் அவற்றின் அமைப்பு மற்றும் தன்மைகள் என பல தகவல்கள் சென்ற பதிவில் உள்ளன. ஒன்றை கூர்ந்து கவனித்தால் 2 உண்மைகள் புலனாகும் .

இவுலகில் அனைத்துப்பகுதிகளிலும் அடுத்தடுத்து இருக்கும் பகுதிகள் மாறுபட்ட பண்புகள் கொண்டவை. இதுதான் அவற்றுக்கிடையே நிகழும் வெப்ப பரிமாற்றம் எனும் energy exchange செயலுக்கு உறுதுணை யாக இருப்பது. எனவே,  இவ்வுலகில் அனைத்தும் சமம் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது இயற்கையின் திட்ட அமைப்பு தன்னை முறையாக புரிந்துகொள்ளாமல் அரசியல் பேசத்தான் பயன்படும். எல்லாம் ஒத்த அமைப்பு  எனில் இயக்கங்கள் இயல்பாக நடை பெறா .

மாறுபட்ட அமைப்புகள் அருகருகே இருப்பதால் வெப்பபரிமாற்றம் [energy exchange] இயல்பாகவும் எளிதாகவும் நடைபெறுகிறது உலகளாவிய வெப்பபரிமாற்றம் காற்று சுழற்சி, நீர் சுழற்சி மற்றும் நீராவியை கடத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளை பூமி சுழற்சியின் துணையோடு நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது

இவ்வாறு பல இயற்கை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து தோற்றுவிக்கப்படுவது தான் வானிலை [climate ].எனவே எந்த மாற்றமும் திடீரென்று ஏற்படுவது அல்ல. மாறாக பல நிலைகளில் நிகழ்ந்த விலகல்கள் [deviations] வானிலையை சீர்குலைக்கின்றன . இவற்றின் பின்னணியில் இருப்பது, மனிதனின் பேராசையே எனில் மிகை அல்ல.  எவ்வாறு என்பதை படிப்படியாக புரிந்து கொள்வோம்.

பூமியின் மையப்பகுதிபோல் அமைந்த [equator] பூமத்திய ரேகை ஒவ்வொரு நாளும் வலிமையான சூரிய ஒளியையும் வெப்பத்தையும் 'வாங்கிக்கொள்ளும் இடத்தில்" இருக்கிறது. எனவே இது மிக முக்கியமான ஒரு அமைப்புக்காரணி [structural factor ]. இதுவே பெரும்பாலும் வானிலையை இயங்கவைக்கும் பகுதி.

இப்பகுதி சூரியக்கதிர்களால் வெப்பம் பெற்று இப்பகுதியில் கடற் பரப்பிலும் உள்ள காற்று வெப்பம் பெற்று, அடர்த்தி குறைந்து மேல்நோக்கி எழுப்புகிறது. இப்போது இருவகை ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் 1 Temperature gradient 2 Pressure gradient . பூமியின் மையப்பகுதிகளில் இருந்து வெப்பம் அதிகமாகவும் துருவங்களை நோக்கி செல்ல செல்ல வெப்பம்  குறைவாகவும் ஒரு வெப்ப ஏற்றத்தாழ்வும் [TEMPERATURE GRADIENT ] அமைகிறது . காற்றின் அடர்த்தி குறைந்தால் அழுத்தமும் குறையும். மேல் நோக்கி சென்ற காற்று ஈரப்பதம் பெற்று அடர்த்தி அதிகரிக்க துருவங்களில் அழுத்தமும், பூமியின் மையப்பகுதிகளில் அழுத்தம் குறைவாகவும் மாறி PRESSURE GRADIENT அமையும்.

இயற்கை ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும்.  கடல் கற்று பூமிநோக்கி விரைய SEA BREEZE தோன்றும்.  இப்போது ஏற்றத்தாழ்வுகள், காற்று , வெப்பம் அழுத்தம் + பூமி சுழற்சி எல்லாம் ஒன்றோடு ஒன்று இயங்க இரவில் வெப்பம் குறைய பூமி மெல்ல குளிருகிறது . இதற்கிடையில் நீர்மேகங்கள் எங்காவது குளிர்ந்த காற்றின் தாக்கத்துக்கு உட்பட்டால் அங்கே மேகம் குளிர்ந்து நீர் திவலைகளாக கீழ்நோக்கிப்பாய அதுவே CONDENSATION, PRECIPITATION , RAINFALL அனைத்தும் நடைபெற்று மழையென பொழியும். CONDENSATION என்பது நீர்த்திவலைகொண்ட மேகஅமைப்புகள் ஒன்றாக திரண்டு அடர்த்தி பெறுவது. PRECIPITATION என்பது அடர்த்தியினால் கீழ்நோக்கி சரிவது. . இந்த கீழ்நோக்கி சரிவது "மழை" எனப்படுகிறது. . எனவே மேகக்கூட்டம் இருந்தும் மழை இல்லை என்று புலம்புகிறோம். அதாவது மேகம் குளிர்விக்கப்பட தேவையான குளிர் காற்று அமையாது போனால் மழை ஏமாற்றிவிட்டது என்கிறோம்.

நீர் நிலம் காற்று சூரிய வெப்பம் இவற்றின் கூட்டியக்கம் தான் CLIMATE என்னும் வானிலை யினை தீர்மானிக்கும் காரணிகள். இதில் ஏற்றத்தாழ்வுகள் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது . ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் இயக்கம் இல்லாது போனால் வெப்பம், குளிர் எதுவும் இயற்கையில் நிகழாது போகும் . இது இயற்கை நிகழ்த்தும் அமைதிப்பணி.

இயற்கையில் இவ்வியக்கங்கள் பிசகாமல் நடப்பது தான் வெப்ப நிலை மாறுபாட்டின் பின்னணி. இவற்றில் மனித குறுக்கீடுகள் அதிகமானதால், CLIMATE இயக்கம் தாறுமாறாக பேதலிக்கிறது.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

EDUCATION AND SOME HURDLES -5

EDUCATION AND SOME HURDLES -5      [Collective effort-3] Teaching is a mind game –true; it readily establishes proximity between the don...