Monday, October 2, 2023

PARAMESWARAN and PATHMA NA BUN

PARAMESWARAN and PATHMA NA BUN

பரமேஸ்வரன் அண்ட் பத்மநாபன்

ஐய்யோ மீண்டும் வா? கவலைப்படாதீர்கள் செவிக்குணவு இல்லாதபோது தானே சிறிது வயிற்றுக்கும்    ஈயப்படும் ?

இந்த ஈயப்படும் பித்தளைப்படும் இதெல்லாம் எனக்குத்தெரியாது என்கிறார் அரவாமுதன். இவர் யார்? மற்றுமோர் புது ஆசாமி .பத்ம நாபனுக்கு எதிர் வீடு. வேறென்ன மாமிகள் கோயில் கொள்ளிடம் என்று      கிளம்பியாச்சு . இங்கு மூவர் உலா     நடக்கிறது . உங்காத்து மாமி எங்கே ? அடுக்குளைலியா என்றகேள்வியை  கேட்டு அரவாமுதன் பேந்தப்பேந்த விழிக்க பரமேஸ்வரன் பேச ஆரம்பித்தார்

பத்மநாபன் இன்றும் கோபத்தின் உச்சியில் -ஆம் , காபிக்கு சர்க்கரை nil என்று அறிவித்து விட்டார் ஹேமாம்புஜம் . இதை அறிந்த பரமேஷ் பத்துவின் காதில் ஏதோ கிசுகிசுக்க Pathmanabun முகம் வெளிறி நடுங்க ஆரம்பித்தார். அப்படி என்ன சொல்லி விட்டார் பரமேஷ் ? ஒய் ஒரு பொட்டலம் சுகர் வெச்சுண்டு நீர் போட்டுக்க வேண்டியதுதான் -இதிலெந்து குழப்பம்? என்று மலையாள முழக்கம்.

அவ்வளவு தான் வேற வினையே வேண்டாம் உடம்பெல்லாம்    சூடு வெச்சு உஷ்ண சமாஸ்ரணம் நடந்துடும் என்றார் பத்து . அரவாமுதன் சொன்னார் ஒய் பேசாம சுகர்free டேப்லெட் போட்டு சாப்பிடலாமே அதைபோட்டுண்டா சுகர் ஏறாது. அதுக்காகவே கண்டுபிடிச்சிருக்காங்கஎன்று தெம்பூட்டினார். பத்து ப்ரசன்னமானார்.. அது எங்க கிடைக்கும் ? மெடிக்கல் ஷாப்  கிடைக்கும் என்றார் அரவா. இப்போது முகம் மலர்ந்த தாமரை நாபன் சாரி பத்ம நாபன் சிரிக்கிறார். பரமேஷ் க்கு வருத்தம் நம்ம ஐடியா இப்படி ஆயிற்றே என்றுசைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்த ரெங்கு விடம் 100/- கொடுத்து sugarfree வாங்கி வரச்சொன்னார்பத்து. 10 நிமிடத்தில் வந்து விட்டது அதை மரபீரோவின் மேல் இருந்த பட்டைக்குப்பின் பதுக்கினார்உடனே ஒரு ஐடியா , 3 வது கட்டிடத்தில் இருந்த டாக்டர் இளங்கோவனிடம் பேசி தன் தேவைக்கு ஒரு ப்ரிஸ்கிரிபிஷனில்வகை சுகர் மாற்று மாத்திரைகளை எழுதி வாங்கிக்கொண்டு "புஜம்" வரும் முன் வீடு திரும்பினார். அடுத்த 15 நிமிடத்தில் புஜம் , கஜம், ஜம் எல்லாம் கோயிலில் இருந்து வந்தாயிற்று ஹேமாம் [புஜம்பங் [கஜம்]அரவா ,       ரா [ஜம் ]பரமேஷ் , இப்போது பரமேஷ் பின்னே காணாம் என்று ஒரே ஓட்டம், அரவா ஈவினிங் வாக்கிங் போவோமே என்றார்.

மாலை மணி 3.50

பரமேஷ் இப்போது path ma na bun வீட்டில்.                                                                கூடத்தில் ஊஞ்சலில்பெரும் தொந்தியுடன் path ma na bun. ஊஞ்சல் ஆடமுடியாமல், லேசாக அசைய, பரமேஷ் "மாமி அடுக்குளைலியா?  என்றார்.

 பத "மடப்பள்ளியில்"

மடப்பள்ளியோ? அதெந்து? நீங்கள் மடத்தில் ஸ்கூள் ண்?டோ -பரமேஷ்

காபி சாப்பிடறேளா என்று புஜம் வெளிப்பட, பரமேஷ், "மாமா ஏதோ மடம் பள்ளிக்கூடம் ஏதேதோ சொன்னாரே பின்ன நிங்ஙள் இவடத்தன்னே உண்டாயிருன்னு? என்று கேட்டு மாமி முழிக்க 

இதென்ன இந்த  மனுஷன் விவஸ்தை இல்லாம "உண்டான " தைப்பத்தி சீ என்று கொதித்தாள். பாவம் பரமேஷ்  ஹேமாம்புஜம் மலயாள த்தைக்கண்டாளா , பரமேஷ் தான் அடுத்தவங்களுக்கு புரியுமா னு கவலைப்பட்டாரா ?இவடத்தன்னே உண்டாயிருன்னு என்றால் இங்கே  தானே  இருந்தீர்கள் என்ற அர்த்தம்  எங்கயாவது அடி தடியில் முடியுமோ என்று கவலை எனக்கு இப்போது. .பரமேஷ் விகல்பம் இல்லாத மனிதன். கோபிக்கு பன்சார கொறச்சு வேணம். போச்சு, புஜம் கதவின் பின்னல் நின்று பத்து விடம் என்ன 'சம்சாரம் கொறச்சா?   என்றாள் பத்து பரமேஷிடம் காப்பில என்ன கொறச்சு என்றார் . பரமேஷ் "பன்சார --அதான் சக்கரை என்றார்புஜம் சக்கரையை வெகுவாக குறைத்து காப்பி கொண்டு வர , பரமேஷ் -பன்சார கொறச்சு சொன்னேனல்லவா , பின்ன இதெந்து என்று நாக்கை துருத்தினார்.ஆமாம் கொறச்சு தான் போட்டேன் என்றாள்  ஹேமாம்புஜம்

பரமேஷ் , ஈஸ்வரா இது வளர கஷ்டம் , கொறச்சு அன்னாலு என்று வலது 4 விரலையும் சேர்த்து 'இவ்வளவு சர்க்கரை 'என்பதாக காட்ட , புஜம் கொதித்தாள் ,வந்தவ , போனவள எல்லாம் உண்டாயி அது இது னு எதையோ சொல்லி கையளவு சக்கர வேணுமாமே ? இதென்ன ட்ரீட்டா . வீட்டுலயே கொட்டிண்டு வரவேண்டியது தானே , இங்க வந்து படுத்தல் தாங்கல என்று  உள்ளூர புலம்பிக்கொண்டு ஒரு கிண்ணத்தில் சர்க்கரை வைத்தாள்  . பரமேஷ் 11/2 ஸ்பூன் போட்டு கலக்கி மாமி  கோப்பி சூப்பர் ஒன்னா ங்கிளாஸ் என்று புகழ புஜம் அவ்வளவு பெரிய ஆகிருதியையும் லட்சியம் செய்யாமல் ராஜகோபுர உயரத்தில் பேருவகையில் மிதந்தாள். இந்த பத்து ஒருநாளாவது காப்பி நன்னாருக்குனு சொன்னதுண்டா.   ஒத்து ஊதறவன் மாதிரி வாயை கெட்டியா மூடிண்டு என்று பத்து வுக்கு அர்ச்சனை.

பரமேஷ் மாமி இன்னைக்கு ஞாயர் அடுத்த சவ்வா க்கெழமை ஸ்ரீ கிருஷ்ணன் பொறப்பு ஆமாம் நீங்கள் பட்சணம் தரணம் .

இல்லையே புதன் கிழமை தான்       ஸ்ரீ ஜயந்தி- ஹேமாம்புஜம் . ‘ஊஹூம் வியாழன் தான் க்ரிஷ்ண ஜெயந்தி என்றார் அரவாமுதன்   நான் ஊரில் கேட்டுட்டேன் குருவாயூரிலும்கூடி ச்சொவ்வா கிழமைதான் ஜென்மாஷ்டமி -பரமேஷ் .

மடத்துக்கெல்லாம் புதன் கிழமைதான் னு  ந்ருசிம்ஹ பிரியா                     ல போட்டிருக்கு  புஜம்

ஆனா வியாழன் தான னு ரங்கநாத பாதுகா ல போட்டிருக்கு என்றார் அரவாமுதன். அதாரு என்றார் பரமேஷ் அது முனித்ரேயம் என்றாள்  ஹேமாம்புஜம் . ஐயோ தல திருகறது என்றார் பரமேஷ். . இவ்வளவு சந்தடியில்  பத்து,  3 SUGARFREE வில்லையை காபியில் போட்டு புர்  புர்  என்று ஆத்திரம் தீர   உறிஞ்சி சற்றே மகிழ்ந்தார். என்ன இருந்தாலும், இதெல்லாம் சக்கரைக்கு ஈடாகுமா என்று வேதாந்தம் மனதில் நிழலாட வந்தார். ஆளாளுக் கு ஓரு    கிழமையை சொல்லி பட்ஷனம் இல்லாத்த பண்ணிப்பிடுவன் போலிருக்கே ஈஸ்வரா என்று புலம்பினார் பரமேஷ்.  இருக்கறது ஒத்த கிருஷ்ணன் அவன் பாவம் கோந்தை எத்தர தரம் பொறப்பன்? இப்படி அலைக்கழிக்கறேளே கிருஷ்ணா க்ஷமிச்சுக்கோ. என்றார் பரமேஷ்

மாமி  "ச்சொவ்வாயோ , புதனோ , ஏதோ மறக்காமல் பஷ்ணம் தன்னால் மதி" என்றார் பரமேஷ். மாமி பண்ணமாட்டாளா ? என்றாள்  ஹேமாம்புஜம் ஓஹ் பேஷா , இப்பிப்ப புகை எண்ணெய் இதெல்லாம் பட்டுனு அலர்ஜி ண்டாக்கும் . சும்மா கொஞ்சம் போல செய்வள்  மும்பு போல் இப்போ இல்லை வயசாச்சு வேறொன்னும் இல்லை என்றார் பரமேஷ் -பாவமாக இருந்தது. கண்டிப்பா தரேன் மாமா என்றாள் ஹேமாம்புஜம். காபிக்கு கிடைத்த பாராட்டில் உண்டானது குண்டானது எல்லாம் மறந்து போய் பரிதாப உணர்வு மேலிட்டது ஹேமாம்புஜத்துக்கு.

ஊஞ்சலில் பகவான் ரெங்கநாதனாக பத்நாநாபன்

நன்றி                   அன்பன்  ராமன்

2 comments:

  1. ஶ்ரீஜெயந்தி பஷ்ஷணம் உண்டங்கில் இவ்விட தரணும் மாமி.எனிக்கு ஸ்வீட் பிடிக்காது கேட்டேளா. பின்னே கடுப்பம்கூட்டி மதுரம் குறைச்சி கோப்பி ஒண்ணும் வேணும்.
    மனசிலாச்சா மாமி் . எழுப்பம் வரணும் .
    வெங்கட்ராமன

    ReplyDelete
  2. சத்யம் பரயான். ஆவஷ்யம் செய்யாம். சாரே நிங்ஙங்கள் சோதிக்கின்னது கிட்டும

    ReplyDelete

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...