EDUCATION -10 OPPORTUNITIES
அன்பர்களே
இன்றைய கட்டுரை அடியேனின் 750 வது பதிவு. தங்களின் ஆதரவிற்கு நன்றி
வாய்ப்புகள்
சென்ற பதிப்பில் ஒவ்வொரு கல்வித்தகுதிக்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து பின்னர் விளக்குவதாக குறிப்பிட்டிருந்தேன . அதன் தொடர்ச்சியாக , மக்கள் பெரிதும் கவனம் செலுத்தாத சில பாடத்திட்டங்கள் என்னென்ன வாய்ப்புகளை உருவாக்கித்தரும் என்று சில தகவல்களை திரட்டியுள்ளேன். அவற்றை இங்கே பார்க்கும் முன், ஒரு தெளிவான அறிவுறுத்தல் . ஏனோ தானோ அணுகுமுறை, ஒருநாளும் எந்த படிப்புக்கும் பலன் தராது. எனவே சற்றும் குழப்பமில்லாமல் முறையாகப்படித்து தகவல்களை கற்றால் நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன .
ஆங்கிலம் [ M .A ]
நூல் பதிப்பு [publishing ], நூல் ஆசிரியர் [editing ], சந்தைப்படுத்துதல் [மார்க்கெட்டிங்], இதழியல் [JOURNALISM ] கல்வித்துறை
[EDUCATION ] போன்ற துறைகள். இது உயர்கல்வி என்பதால், பேச்சுத்திறன் மற்றும் வாதங்களை வைக்கும் நுணுக்கங்கள், வலியுறுத்தல் , முனைப்புடன் கருத்துகளை பதிவிடுதல், துல்லியமாக ஆய்தல் மற்றும் பல்முனை ஆய்வு நுணுக்கங்கள் உள்ளிட்ட திறன்கள் மேம்படுத்தப்படுகின்றன . இத்தகைய வாய்ப்புகளை பயிலும் போதே கற்க , திறன்மேம்பாடு, தன்னம்பிக்கை போன்ற முன்னேற்ற வழிமுறைகளை செயல் படுத்துவது எளிதாகும்
ஒரு [விதண்டா] வாதம் ஆங்கில இலக்கியம் குறித்து பேசப்படுவது -- ஷேக் ஸ் பியரை படித்து என்ன ஆகப்போகிற து ? இதற்கு நான் நினைப்பது
"எதைப்படித்துதான் என்ன ஆகப்போகிறது?"
ஆகவே ஒன்றை கற்பது என்பது 'அந்த ஒன்றை
" புரிந்து கொள்ள என்பதாக தோன்றினாலும் , அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளை நுணுக்கமாக அலசும் போது இயற்கையின் அல்லது படைப்பின் வியத்தகு அமைப்பியல் கோட்பாடுகள் நம்மை பிரமிக்க வைக்கும். இயற்கையின் விதி [law of NATURE] என்பதை அறிவியலின் அனைத்து அமைப்பு மற்றும் செயல்களில் காணலாம். எனவே நாம் கற்ற கோட்பாடுகள் துல்லியமான கருவிகள் என்று சரியாகப்புரிந்து கொண்டால் ,அதை எவ்வாறு லாபகரமாக [profitable ] பயன் படுத்தலாம் என்ற ஞானம் நமக்குள் விருட்சமாக விளைய வேண்டும் . அதுதான் கல்வியின் பயன். 'இதை'படித்தால் என்னை அந்த நிறுவனத்தில் சேர்த்துக்கொள்வார்களா, இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்று வேலையை முன்னிறுத்தி கல்விகற்க எத்தனிப்பவர்கள் எதையும் கற்க மாட்டார்கள். -இது நான் கண்ட உண்மை.
மீண்டும் ஷேக்ஸ்பியருக்கு வாருங்கள் அவரது மிக நுணுக்கமான சிந்தனை வெவ்வேறு கல்விமுறைகளை உள்ளடக்கி மிளிர்வதைப்பாருங்கள் .
1 A POUND OF FLESH ? , 2 FAIR IS FOUL அண்ட் FOUL
IS FAIR, 3 YOU WILL BE THE KING ,
1 a
pound of flesh இது எந்தக்காலத்திலோ ஷேக்ஸ்பியர் உணர்த்திய "கந்துவட்டி " மனோபாவம் "
2 fair is foul and foul is fair என்பது அரசியல் பிழைப்பை சொல்லும் தர்மமும் அநியாயமே , அநியாயமும் தர்மமே என்று எதையும் நியாயப்படுத்தும் மனித வக்கிரம்
3 you will be the
King என்னும் ஆழ்ந்த மனோ தத்துவ மூளைச்சலவை உத்தி . பதவி பீடத்தின் அருகில் இருப்பவன் எளிதில் குற்றம் புரிவான் என்ற உணர்த்தல . ஆம் படைத்தளபதியின் மனைவி "நீ மன்னனை கொன்று விடு" தளபதி
"கொன்றுவிட்டால் ?" மனைவி : "நீ மன்னன் ஆகலாம்" என்று மூளைச்சலவை செய்து வெற்றியும் பெறுகிறாள் . இதன் உள்ளார்ந்த பொருள் "நீ மன்னன் என்றால் நானே ராணி
"என்று சாதுர்ய திட்டம். இப்போது சொல்லுங்கள் ஷேக்ஸ் பியர் நாடக ஆசிரியரா , மனித மனங்களை ஆய்ந்த மனவள ஆய்வாளானா ? என் பார்வையில் அவர் மனித மன வக்கிரங்கள் தலைவிரித்தாடும் களங்களை வெகு சிறப்பாக நாடக வடிவில் வெளிப்படுத்தியவர்
எனில் மிகை அல்ல.
இவ்வகை விளக்கங்களை பயில ஆங்கில இலக்கிய திறனாய்வு ஒரு சிறந்த பயிற்சிக்களம் . ஆங்கிலம் படித்து என்ன செய்வது என்று கேட்போர் , கல்வி என்பது அறிவை செம்மைப்படுத்தவும் , நுணுக்கமான வாதங்களை சிறப்பாகப்பயிலவும் உதவும் . "என்ன வேலைக்கு போகலாம் ? என்று கேட்பவர்கள் , நமது திறமை என்ன ? மொழியின் மீது நமது ஆளுமையும் ஆதிக்கமும் எவ்வளவு பண்பட்டது என்ற வினாக்களுக்கு உங்கள் பதில் என்ன ,
introspection என்னும் சுய மதிப்பீடு செய்து நமது உண்மையான உயரம் என்ன என அறிந்துகொண்டால். திறமை தான் அளவுகோல் , அறிவு தான் திறவுகோல் என்றுணர முடியும். குறிப்பிட்ட பணிகளுக்கான திறன் மேம்பாட்டில் நாம் கட்டமைக்க வேண்டியன யாவை என்று உணர்ந்து செயல் பட்டால் பலன் உண்டு. நான் MA படித்திருக்கிறேன் என்றால் அடுத்த கேள்வி உங்களால் தகவல் தொகுக்க[INFORMATION COMPILATION] முடியுமா?
CONTENT எடிட்டிங் என்னும் தகவல் சீரமைப்பு செய்து தர இயலுமா? ஸ்கிரிப்ட் EVALUATION என்னும் தகவல் தரம் குறித்த முறையான மதிப்பீடு செய்ய இயலுமா ? என்ற வினாக்கள் சரமாரியாக எழும் . இவை ஒவ்வொன்றிற்கும் வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே திறன் மேம்பாடு என்னும் இலக்கை நோக்கி தான் பயணிக்க வேண்டும் . ஏதோ ஒரு டிகிரி முடித்தால் போதும் என்றிருந்தால், டிகிரி முடிக்கத்தான் இயலும் உயரம் தொட இயலாது. உயரம் தொட உழைப்பே மூலதனம். இதனை நன்கு உணர நம்மை பயக்கும் .
இன்னும் பல துறைகளில் வாய்ப்பு கள் உள்ளன. விரிவாகப்பார்ப்போம்
தொடரும்
அன்பன்
ராமன்
புதுமண்டபம் புத்தக்க்கடையில நடந்த ஒரு நிகழ்வு.
ReplyDeleteMA English Luterature படிக்கும் ஒரு மாணவன் கடைக்கார்ரிடம் கேட்டகேள்வி
ஐயா MA English க்கு தமிழ்மீடியத்தில் நோட்ஸ் இருக்கா?
??????????
வெங்கட்ராமன்
இதோ என்று 4, 5 நோட்ஸ் வகைகளை காட்டியிருப்பரே
ReplyDelete'நடனசுந்தரம்" புத்தகக்கடையினர் !!!!