Wednesday, October 4, 2023

CINE MUSIC-9 STRATEGIES-5

 

 

CINE MUSIC-9   STRATEGIES-5

திரை இசை -- 9 உத்திகள்-5

இன்றைய பொருளாக நன் தேர்வு செய்திருப்பது "மாறுபட்ட கருவிகள் அளித்த இசைக்கோலம்" . இதென்ன மாறுபட்ட ? என்ற வினா எழத்தான் செய்யும்.           இந்த சொல்லாடலுக்கு ஒரு பின்னணி இருக்கிறது. அதாவது, இசையில் பல வடிவங்கள் உண்டு-- கிராமிய இசை, சாஸ்திரிய இசை, ஹிந்துஸ்தானி   , பெர்ஷியன், மெக்ஸிகன், மேற்கத்திய என்று வகைப்படுத்திக்கொண்டே போகலாம். இவை ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக இசைக்கருவிகள் பயன் படுத்துவர். இதில் ஒரு விநோதமும் உண்டு, இவற்றில் பெருவாரியான வற்றில் வயலின் நுழைந்து விட்டது எப்படி என்று புரியாத புதிர் ஒன்று நெடுங்காலமாக இருந்து வருகிறது. அதே போல தாள வைத்தியக்கருவிகளிலும் குறிப்பிட்ட இசைமரபு உண்டு. உதாரணம் மிருதங்கம் [தென்னிந்திய ], தபலா [வடஇந்திய] போங்கோ [ஆப்ரிக்க], ட்ரம் [மேற்கத்திய]என்று நீளும் பட்டியல் . ஒவ்வொன்றிலும் வகைகள். இவைகளில் நாம சங்கீர்த்தன நிகழ்வுகளில், KHOL [மிருதங்கம் போலவே ஆனால் இரு பக்கமும் சிறிய வட்டமாக இருக்கும்] மேலும் காதை பிளக்கும்  தவில் [நாதஸ்வரத்தின் பக்க வாத்தியம்]. தவில் ஒரு பக்க வாத்தியம் ஆனாலும் நாத ஸ்வர ஒலி துவங்கும் முன்பே பட பட பட பட என்று தவில் தான் நிகழ்ச்சியை துவக்கும் [இது ஒரு வினோத இசைக்கோலம்]. இவ்வளவிலும் வெவ்வோறு நாதங்கள் நளினங்கள், பிரமிக்க வைக்கும் வேகங்கள் , திடீரென்று உறங்கும் குழந்தையைப்போல மெல்ல அடங்கிஉறக்க நிலையை ஒத்த ஒரு மெல்லிய வாசிப்பு தாளவாத்திய கலைஞர்கள் வெளிப்படுத்தும் மிகப்பெரிய ஆளுமை . இந்தபூர்வ பீடிகையோடு தான் பேச வேண்டும்/ பேச முடியும் 

தமிழ் திரை இசையில் அநேக மாற்றங்களை செயல் படுத்திய இசை அமைப்பாளர்கள் அவ்வப்போது மாறுபட்ட அமைப்பு, இசை வடிவம் என களப்படுத்த பல முயற்சிகளை கைக்கொண்டனர் . அவ்வகையில் இன்று சில பாடல்களை கவனமாகப்பார்ப்போம்.

பாட்டொன்று கேட்டேன்

[பாச மலர்] 1961 கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தி,  , ஜமுனா ராணி

இந்தப்பாடல் கவிதை நயமும் , இளமைத்துள்ளலும் ஒருங்கிணைந்த பாடல் . எனினும் இது போன்ற சூழலில் பியானோவை ஆதாரக்கருவியாக பயன் படுத்தியுள்ளார் விஸ்வநாதன். அதே நேரத்தில் பாடலின் உட்கருத்தான ரொமான்டிக் வெளிப்பாடுகளை வெகு நேர்த்தியாக பாடல் முழுதும் களப்படுத்தியுள்ளார்.; இதற்கு தோழியர் குரல்களில் கோரஸாக பாடல் முழுவதும் ஆங்காங்கே பல்லவியும் அது சார்ந்த நடனங்களும் இடம் பெற்றது அந்நாளைய புதுமை,. பாடல் இணைப்பு  

https://www.youtube.com/watch?v=qxGn9eBhySo&list=RDGMEMCMFH2exzjBeE_zAHHJOdxg&index=9 =paattondru ketten   

பாடுவோர் பாடினால் [கண்ணன் என் காதலன் ] 1968, வாலி, விஸ்வநாதன் டி எம் சௌந்தரராஜன் .

இந்தப்பாடல் பலவித மாறுபட்ட அமைப்புகள் கொண்ட ஒரு நூதனம் . தொகையறா இல்லை, ஆனால் பல்லவியின் துவக்கமே தொகையறா போல் பாடப்பட்டு , விறல் சொடுக்கில் துவங்கும். சரி உடனே பியானோ டிகுடிகு என ஒலிக்க  எதிர்பாராத ஒரு மாறுபாடாக மிருதங்கம் துரிதகதியில் ஒலிக்க பாடல் ஒரு பெரும் ஆடுகளத்தில் நுழைவதுபோன்ற உணர்வு. பாடல் வரிகளும், இசைக்கருவிகளின் இடையறா பங்களிப்பும் கேட்கத்தேவிட்டதா ஒரு அனுபவம். பியானோ-மிருதங்கம் ஒரு அதீத கற்பனை. எனினும் பிற கருவிகள் போங்கோ , தரும் தபலா என அனைத்தும் களம் இறங்கிய ஒரு இசை நளினம் இப்பாடல் . இதோ இணைப்பு

https://veblr.com/watch/341c92997e32/paaduvor-paadinaal-mgr-jayalalitha-vanisri-kannan-en-kadhalan-tamil-cl PADUVOR PADINAAL

வணக்கம் பலமுறை [ அவன் ஒரு சரித்திரம் கண்ணதாசன், விஸ்வனாதன் , பி சுசீலா , டி எம் சௌந்தரராஜன்

மேற்கத்திய இசை அலங்காரங்களோடு துவங்கினாலும், இந்தப்பாடலின் பெருமை அது இந்திய குடும்ப கட்டமைப்புகளை சொல்லாமல் சொல்லும் நேர்த்தி.அதை கவிஞரின் சொல்லாடலில் காணலாம் . சுசீலாவின் நீண்ட நெடிய ஆலாபனையில் துவங்கி மேற்கத்திய இசையை மழுங்கடித்து முன்னேறி இந்தியாகலாச்சாரக்கூறுகளை முதன்மைப்படுத்துவதால் , எம் எஸ் வி முற்றிலும்விலகலாக , தாளத்தை துவங்கிட கம்பீரமாக தவில் வாத்தியத்தை பயன்படுத்தியுள்ளார். அதன் விறுவிறுப்பான நடை பாடலுக்கு வலு சேர்க்க மெல்ல மெல்ல தபலாவும், ட்ரம் மும்,சரணவரிகளில் இழைய காத்திருந்து சிலிர்த்து எழும் தவில் பல்லவி யோடு பயணிக்க ஒரு ஆரவாரம் அரங்கேறி நம்மை ஆட்கொள்கிறது.  இவ்வாறு பாடல் முழுவதும் ஒரு சுகானுபவம் பாடல் இணைப்புக்கு

https://www.google.com/search?q=vanakkam+palamurai+sonnen+song+download&newwindow=1&sca_esv=570303733&sxsrf=AM9HkKmRuh VANAKKAM PALAMURAI SONNEN

பெண் என்றல் நான் அன்றோ [ வீட்டுக்கு ஒரு பிள்ளை] கண்ணதாசன் , விஸ்வநாதன் , எல் ஆர் ஈஸ்வரி

 

70 களில் மிகவும் பிரபலமான CLUB DANCE வகைப்பாடல் .உடைகள் அரைகுறை எனினும் பாடல் முழுமையான ஒரு புத்தாக்கம். அதாவது இது போன்ற பாடல்களில் பெரும்பாலும், ட்ரம் , போங்கோ , சிம்பல்ஸ் வகை கருவிகள் இடம் பெறுவது மரபு. மெல்லிசை மன்னருக்கு புதுமை யில் தான் நாட்டம் ; எனவே பாடலின் பெரும்பகுதியிலும் தவில் தன பிரதான தாள வாத்தியக்கருவி . சும்மா அதிர்ந்து ஆக்கிரமிப்பு செய்து ஈஸ்வரியின் குரலுக்கு மேலும்  ரசம் ஏற்றி ஒருவித ஆக்கிரமிப்பை நிலை நாட்டுகிறது இது போன்ற புதுமைகள் எம் எஸ் வி இசையில் ஏராளம் . இதோ பாடல்   

https://www.youtube.com/watch?v=MdHRIVXLzww PEN ENDRAL NAN ANDRO

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. ஶ்ரீதரின் படங்களில் சித்தார் உபயோகம் அதிகம் . நெஞ்சில் ஓர் ஆலயத்தில் சொன்னது நீதானா என்ற பாட்டை நான் மிகவும் ரசிப்பேன்
    இசைக கருவிகள் அதிகம் இல்லாமல்
    காற்றினிலே வரும் கீதம் நம்மை மெய்சிலிர்க்க வைக்க வில்லையா?
    வெங கட்ராமன்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...